வெயில் காலத்தில் மோர், ஜூஸ் பருக வேண்டும் என பலரும் சொல்லுவதை கேட்டு இருப்போம். ஆனால், கோடை காலம் மட்டுமல்ல. பெரும்பாலும் எப்பொழுதுமே ஜூஸ் பருகுவதை விட பழத்தை கடித்து சாப்பிட்டு மென்று புசிப்பது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பழத்தை அப்படியே கடித்து சாப்பிடும் போது முகத்தில் உள்ள தாடைகள் அசையும். இதன் மூலம் உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரானது வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் ஆசிட் கிட்டத்தட்ட இணையானது என்பதால் அது எளிதில் வாயில் உள்ள உணவை நொதிக்கும். எளிதில் ஜீரணம் ஆக்கி உடலின் உறுப்புகள் அந்தந்த சத்துக்களை பிரித்து அந்தந்த உறுப்புகளுக்கு அனுப்ப ஒரு பழத்தை கடித்து சாப்பிடுவது உதவும்..

பழத்தை கடித்து சாப்பிடுவதில் உள்ள அடுத்த நல்ல விஷயம் என்னவென்றால் பற்கள் வலுவாகும். பற்கள் மட்டுமின்றி ஈறுகளையும் வலுப்படுத்தும்.

பழத்தில் உள்ள நார்ச்சத்து என்பது ஒரு உணவை ஜீரணிக்க உதவும்.

உடலில் ஜூஸ் பருகும் போது அது சர்க்கரை அளவை அதிகரிக்கும். ஜூஸில் உள்ள அமிலங்கள் உடலையும் மற்றும் ஈறுகளையும் பாதிக்கும். ஒரு பழத்தை பழசாறாக மாற்றி விட்டு வெகு நேரம் கழித்து சாப்பிடும் போது அதன் ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.

குறிப்பாக ஒரு பழத்தை பிழிந்து பழச்சாறாக மாற்றும்போது அதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் பாதியாக குறைந்து விடும்.

Facebook
Instagram
YOUTUBE