பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரம்பத்தில் இருந்து சில முட்டல், மோதல்கள் இருந்தன. முதல் நாளிலேயே ஆரம்பித்த பஞ்சாயத்து தற்போது வெடித்துள்ளது. நடிகை வனிதாவின் மகள் அடிப்படை கல்வியை அதாவது பிளஸ் டூ வரை படிக்கவில்லை என்றும் அதற்கு பதிலாக டான்ஸ், குக்கிங் என பல திறமைகளை அவர் மேம்படுத்தி வருவதாகவும் கூறியிருந்தார்.

இதற்கு அடிப்படையாக ஒரு கல்வியை கற்றுக்கொள் ஒரு டிகிரியை முடித்துக் கொள், பின்ன என்ன வேண்டுமானாலும் செய் என யுகேந்திரனும் அறிவுரை கூறியிருந்தார். இதற்கு பெரிதும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அந்த பிரச்சனையை பற்றி மழுப்பலாக பதில் சொல்லி இருந்தார் ஜோவிகா.

பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை விசித்ரா ஜோவிகாவின் படிப்பு பற்றிய விளக்கத்தை கொடுக்க முயன்ற போது ஜோவிகா குட்டி வனிதாவாக மாறி பதிலடி கொடுத்தார். எழுந்து நின்று தனது படிப்பை பற்றி இங்கு பேச வேண்டாம் என்ற பாணியில் அவர் வனிதாவின் அதே அதிகார தொணியில் பேசியது “வனிதா அக்கா மகளா கொக்கா?” என சிலர் கமெண்டுகளை தட்டி வருகின்றனர்.

முன்னதாக யூடியூபரான அராத்தி பூர்ணிமா 2 மணி நேரம் மேக்கப் செய்வதாக கூல் சுரேஷ் கூறியது பற்றி பூர்ணிமா வருத்தப்பட்டு கொண்டிருந்தார். பெண்கள் அழகாக இருப்பதால் தான் அவர்களுக்கு அதிக ஓட்டுக்கள் விழும் என்றும் தனது ஸ்ட்ரேட்டஜியை முன் வைத்தார் பிரதீப்.

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க இந்த வாரத்தின் செலவு பணத்தை ஈஎம்ஐ ஆக வசூலித்து வருவது போல் டாஸ்க்வைத்து பணத்தை கழித்து வருகிறார் பிக் பாஸ் அந்த வகையில் வீட்டில் ஒரு எடை மெஷின் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அதில் காண்பிக்கப்பட்டுள்ள எடையோடு சேர்த்து அங்கு உள்ளவர்கள், உடல் உடமைகள் ஆகியவற்றை கொண்டு அந்த எடைக்கு நிகராக எடையை வைத்து காண்பிக்க வேண்டும்.

இந்த டாஸ்க்கில் ஒருவேளை தோற்றால், வீட்டில் உள்ள அனைத்து மேக்கப் சாதனங்களையும் பிக்பாஸிடம் ஒப்படைத்து விட வேண்டும் என பிக் பாஸ் ஒரு பகடையாக சுழற்றிவிட்டார்.

இது மிக சரி என்றும் மேக்கப் இல்லாமல் அவர்களுக்கு ஆடியன்ஸ் சப்போர்ட் குறையும் என்பதால் அது நமக்கு சாதகமாக அமையும் என்றும் மணியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பிரதீப்.

இந்த டாஸ்க் பிக்பாஸ் வீடு வெற்றி பெற்றதால் மேக்கப் பொருட்களை ஒப்படைக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. இருந்த போதும் நடிகை மாயாவும் பூர்ணிமாவும் தாமாக முன்வந்து அதற்கு முன்னதாகவே மேக்கப் பொருட்களை இனி பயன்படுத்த வேண்டாம் என முடிவெடுத்திருந்தனர். ஆனால் ஜோவிகா நேரடியாக சென்று கூல் சுரேஷ் இடம் இது பற்றி கேட்க அவரோ மழுப்பலாக பதில் சொன்னார். ஆனால் மேக்கப் பொருட்களை தான் கைவிட போவதில்லை என்றும் அவர்கள் கிடக்கிறார்கள் என்பது போன்றும் ஜோவிகா தனது தரப்பு பதிலை தெரிவித்தார்.

பிரதிப்போ தாங்கள் ஆண்கள், பார்க்கும் ஆடியன்ஸ் மிக அழகாக மேக்கப் போட்டு வரும் பெண்களுக்கு தான் அதிக ஓட்டு போடுவார்கள் என்றும் இது எப்படி சரியான போட்டி ஆகும் என்றும் தனது தரப்பு கருத்தை பற்றி கூற ஐஷு அவரை சமாதானப்படுத்தினார். அழகல்ல, கேரக்டரைப் பார்த்துத்தான் ஓட்டு விழும் என சரியான பதிலடியைக் கொடுத்தார்.

பிரதீப் சொன்ன இந்த மேக்கப் ஸ்ட்ரேட்டஜி பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண் மேக்கப் இல்லாவிட்டால் தோற்றுவிடுவார் என்பது என்ன விதமான ஆணாதிக்கம் என சிலர் கருத்து பரப்பி வருகின்றனர். அதேபோல் பிரதீப் பேசுவதும் சரிதான் என்றும் சமூக வலைதளங்களில் சிலர் விவாதித்து வருகின்றனர்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE