தொய்விலிருந்து மீளும் ஜெயிலர் கலெக்ஷன்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வசூலில் பிரம்மாண்ட சாதனைகளை படைத்து வருகிறது. 17வது நாள் கலெக்ஷன் முந்தைய நாட்களின் தொய்வை ஈடுகட்டும் வகையில் முன்னேறி உள்ளது. இதுபற்றிய முழு விவரங்களை த காரிகையின் சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்
கடந்த ஒரு வாரமாக ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் ஆரம்பித்த அளவு இல்லாமல் சற்றே தொய்வடைந்து இருந்தது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அதாவது ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கான வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அதாவது ஆகஸ்ட் 26 ஆம் தேதி மட்டும் ரூ.5.50 கோடி அளவுக்கு வசூல் ஆகியுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு கலெக்ஷன் ரூ.307.70 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரங்களில் ஜெயிலர் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் சற்றே பின்னடைவை சந்தித்திருந்தது. போன வாரம் ஞாயிற்றுக்கிழமை அதாவது ஆகஸ்ட் 20-ம் தேதி அன்று ரூ.19.20 கோடியாக இருந்த ஜெயிலர் வசூல் முந்தைய வசூலை விட 70% குறைந்து இருந்தது. திங்கள் அன்றும் ரூ.5.7 கோடி மற்ற நாட்களில் ரூ.4.70 கோடி, ரூ.3.75 கோடி, ரூ.3.5 கோடி, ரூ.3.4 கோடி என வசூலில் குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ரூ.5.50 கோடியாக வசூலாகி அசத்தி உள்ளது.
இந்த வசூல் தொகையானது ஒட்டுமொத்த இந்திய அளவிலான வசூலாகும். இதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 50 %, தெலுங்கில் 34% ஆகும். மீதமுள்ளவை இந்தி, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி கலெக்ஷன் ஆகும்.
நடிகர் ரஜினிகாந்த், பூனையைப் போல் அனைவரிடமும் பவ்யாக அறிமுகமாகி பின் நேரம் செல்ல செல்ல புலியாய் சீறும் காட்சியமைப்புக்கள் ரஜினி ரசிகர்களுக்கு எனவே செதுக்கிய திரைப்படமாக இதை மாற்றியது. இதனால்தான், ரஜினி நடித்த சமீபத்திய முந்தைய படங்களை விட இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அசத்தி வருகிறது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.