பிரேம்ஜியோட பேச்சுலர் லைஃப்க்கு எண்டு கார்டு போட வர்ற பொண்ணு யாரு தெரியுமா?
என்ன கொடுமை சார் இது என சந்திரமுகி படத்தில் நடிகர் திலகம் பிரபு ஒரு முக்கியமான சீனில் வசனம் பேசியிருப்பார். ஆனால், அந்த வசனம் மனதில் நிக்கவில்லை. அதே வசனத்தை சற்று சர்காஸ்டிக்காக பேச ரகிர்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் பிரேம் கங்கை அமரன். உண்மையில் அவர் பெயர் பிரேம் G அமரன்தான். ஆனால், அந்த வார்த்தை இந்தியில் மரியாதை கொடுக்கும் அடைமொழி போல் அவரது பெயருக்குப் பின்பாக ஒட்டிக் கொண்டது.
இயக்குநராக தடுமாறிய பிரேம்ஜி
இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் தான் வெங்கட் பிரபு, பிரேம் ஜி. இவர், 2006-ல் தனது அப்பா மற்றும் சகோதரனைப் போன்று இசைத்துறைக்கு வந்தார் என்றுதான் அனைவரும் நினைத்திருப்போம். ஆனால், அவர் 1997-அலஅய படம் இயக்கினார். வாண்டட் என்ற அந்த படத்தில், வெங்கட் பிரபு, எஸ்.பி.பி. சரண், காமெடியனாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால், அந்தப் படம் முடிக்கப்படாமலே முடிந்து போனது.
நடிக்க வந்தது எப்படி?
அதன் பின் ராப் பாடல்களை தனது சகோதரரின் இசையில் பின்னணியில் பாடிவந்த பிரேம்ஜி, பின் வல்லவன் படத்தில் லூசுப் பெண்ணே பாடலுக்கு இசையமைத்தார். வல்லவன் படத்தில் நடிக்கவும் செய்தார் பிரேம் ஜி அமரன். சென்னை 600028 படத்தில் சீனுவாக நடித்தபோதுதான் நகைச்சுவை நடிகராக ஒரு அங்கீகாரம் பெற்றார் பிரேம்ஜி. மங்காத்தா, சேட்டை, கோவா படங்களிலும் நடித்தார்.
கண்கலங்க வைத்த பிரேம்ஜி
இசையமைப்பாளர் இளையராஜா இவருடைய பெரியப்பா ஆவார். அவரது மகள் பவதாரிணி புற்றுநோயால் உயிரிழந்த நிலையில், பிரேம்ஜி உள்ளிட்டோர் இறுதிச்சடங்கில் மயில்போல பொண்ணு ஒன்னு பாடியபோது அனைவருமே கண்கலங்கிவிட்டனர்.
ஒரே குறை
நட்பு, குடும்ப உறவு, சகோதரத்துவம் என அனைத்திலுமே பிரேம்ஜியின் பங்களிப்பைப் பார்த்தபோதும் அவர் 46 வயதாகியும் திருமணம் செய்யாமலேயே இருந்தது ஒரு குறையாகவே இருந்தது. இந்தநிலையில்தான் பிரேம்ஜியின் திருமணப் பத்திரிக்கை என்ற ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி, 46 வயதை கடந்து பேச்சிலராக வாழ்ந்து வந்த பிரேம்ஜி அமரனுக்கு வருகின்ற ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருத்தணி முருகன் சன்னதியில் வைத்து அவர் திருமணம் செய்து கொள்ளவுள்ளார். வைகாசி 27-ம் தேதி அதாவது இந்த மாதம் 9-ம் தேதி ஞாயிறன்று காலை 9-10.30 மணிக்குள் திருமணம் நடைபெறவுள்ளது.
அவருடைய திருமண அழைப்பிதழ் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சேலத்தை பூர்விகமாகக் கொண்டவர். மணிமாறன்-ஷர்மிளாவின் மகளான இந்து என்கின்ற பெண்ணை திருமணம் செய்கிறார். மணமகளுக்கு அனிதா என்ற அக்காவும், தீபக் ராஜ் என்ற தம்பியும் உள்ளனர்.