இர்ஃபான் வெளியிட போகும் அடுத்த வீடியோ : ஸ்பெஷல் அப்டேட்

7 ஆண்டுகளுக்கு முன் யூடியூப் சேனல் தொடங்கிய இர்பான் முதலில் திரைப்படங்களை ரிவ்யூ செய்து வந்தார். உணவு ரிவியூக்களை சிறப்பாக செய்து வந்ததால் 14வது வீடியோவில் அவருக்கு 100 சப்ஸ்க்ரைபர்கள் வந்துவிட்டனர். ஒரு சில மாதங்களில் 10,000, 1 லட்சம் என அவரது சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்று தற்போது கிட்டத்தட்ட 43 லட்சம் சப்ஸ்கிரைப்பர்களை கொண்டிருக்கிறார். இர்ஃபான் ஏற்கனவே தனது மத கோட்பாடுகளை மீறி முதலைக் கறி உள்ளிட்ட இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட மாமிசங்களை சாப்பிட்டதாக சர்ச்சையில் சிக்கினார்.

இதை அடுத்து அவர் புகழ் வளர வளர அவரை பின்தொடர்ந்து வரும் சர்ச்சைகளும் அதிகமாகிக் கொண்டே வந்தன.

வீடியோ ரிவியூ செய்த கடைகளில் சுகாதாரமற்ற உணவுகளை பரிந்துரைத்து அந்த கடைகள் உணவு பாதுகாப்பு துறையின் சோதனையில சிக்கி சர்ச்சையான போது இர்பான் ரிவியூ செய்த ஹோட்டல் என்று அதனை மையப்படுத்தி செய்தி ஊடகங்கள் தகவல் பரப்பினர்.

இதை அடுத்து அவர் செய்தி ஊடகங்களின் பெயர்களை மாக் செய்து, அவற்றின் வெறுப்பை எதிர்கொண்டார்.

இதன் பின்னர் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடத்தி பின் அந்த மணமகளை பிரேக் அப் செய்து விட்டதாக அறிவித்தார்.

இதற்கும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இதற்கு அடுத்து திருமணமே வேண்டாம் என்று அமெரிக்கா சென்ற அவர் தான் ஏற்கனவே அங்கு ஸ்டுடென்ட் எக்ஸ்சேஞ்ச் ப்ரோக்ராமில் சென்றபோது பழக்கமான நட்புகளையும் நடிகர் நெப்போலியனையும் சந்தித்தார். நெப்போலியனின் வீட்டு வீடியோவை ஹோம் டூராக போட்டதன் மூலம் மட்டும், அவர் 1 கோடியே 20 லட்சம் பார்வைகளை பெற்றார். அவர் இதுவரை 137 கோடி பார்வைகளை 2400- க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவிட்டதன் மூலம் பெற்று இருக்கிறார்.

இந்த நிலையில் தான் திருமணம் செய்து மணமகளை சென்னைக்கு அழைத்து வரும்போது அவருடைய சொகுசு கார் மோதியதில் ஒரு கூலி தொழிலாளி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த காரை தான் இயக்கவில்லை என்று இர்பான் கூறியபோதும் வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் மீண்டும் ஒரு சர்ச்சை வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் குழந்தைகளின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் சட்டப்படி குற்றம் என 1994 ஆண்டிலிருந்து அமலான சிசு பாலினம் அறிதல் குற்றம் என்ற சட்டத்தை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது இந்தியாவில் தவறு எனத் தெரிந்து அவர் துபாய் சென்று அங்கு ஸ்கேன் செய்து அந்த குழந்தையின் பாலினம் அடங்கிய கவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து தனது உற்றார் உறவினர்களுடன் gender reveal பார்ட்டி என்ற பெயரில் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்திருக்கிறார்.

இது ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில் சுகாதாரத் துறையில் இருந்து நடவடிக்கை எடுப்பதாக தகவல் வந்தது.

மருத்துவம், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை என்ற டி எம் எஸ் அலுவலகத்தில் இருந்து இர்பானுக்கு அதிகாரப்பூர்வமாக ‘தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?’ என விளக்கம் கோரி show cause நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை அடுத்து நோட்டீசை எடுத்துக்கொண்டு, டிஎம்எஸ் அலுவலகத்துக்கு சென்ற இர்ஃபான் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குனரை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கினார்.

அதில் “இந்தியாவில் பாலினம் அறிவதும் அறிவித்தலும் தவறு என்பதை தெரியாமல் செய்துவிட்டேன். அரசாங்கத்தின் கவனத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட 2 வீடியோக்களையும் எனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கிவிட்டேன். இனி பெண் குழந்தைகளின் சிறப்பையும் பெண் குழந்தைகளை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதையும் குழந்தை பிறக்கும் முன் பாலினத்தை அறிதல் சட்டப்படி தவறு என்பதையும் விளக்கி எனது மன்னிப்போடு சேர்த்து சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

இவர் செய்தது ஏன் தவறு?

தமிழ்நாட்டில் உள்ள எலைட் பிரிவு மக்கள், திருமணமானதும் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் செல்வது போல் கருவுற்றதும் வெளிநாடுகளுக்கு பேபி முன் என்ற பெயரில் சென்று அங்கு தங்களது பாலினத்தை அறிந்து கொண்டு வருவது வழக்கமாக நடைமுறையில் உள்ளது தான். ஆனாலும் சட்டப்படி தவறு.

இதையே 43 லட்சம் பார்வையாளர்களைக் கொண்ட இர்ஃபான் தனது குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டு வெளியிட்ட வீடியோவானது சில தவறான அணுகுமுறைகளுக்கு வழிவகுக்கும். தவறான முன்னுதாரணமாகவும் மாறிவிடும்.

வெளிநாடுகளுக்கு சென்று பாலினத்தை அறிய முடியாத ஏழைகளிடம் பெண் சிசுக்கொலை என்பது சாத்தியமில்லை என்றாலும் கூட, வீட்டில் இருக்கும் பெரியோரின் பேச்சைக் கேட்டு, அல்லது ஜாதகத்தை காரணம் காட்டி பெண் பிள்ளை வேண்டாம், ஆண் பிள்ளை வேண்டாம் என நினைக்கும் இந்த காலத்து தலைமுறையினர் கூட வெளிநாடு சென்று பாலினத்தை அறிந்து கொண்டு அந்த குழந்தை தங்களது எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட பாலினமாக இருந்தால் அது எங்களுக்கு தேவையில்லை என்று கருவை கலைக்க வாய்ப்பு உள்ளது.

ஏழை கொன்றாலும் சிசு மரணம் தவறுதான் அதை பணக்காரன் செய்தாலும் பெண் சிசுக்கொலை என்பது கொடூரம் தான் என்பதை வலியுறுத்தும் விதமாகவே சுகாதாரத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. குறிப்பாக 43 லட்சம் பார்வையாளர்களைக் கொண்டுள்ள இர்ஃபான் போட்ட வீடியோ யூடியூபில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் வந்தது.

இது இளைஞர்களை தவறாக வழி நடத்தும் விதமாக அமைவதாலும் பெண் சிசுக்கொலையை தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதாலும் அரசாங்கம் தாமாக முன்வந்து இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது.

இர்பான் வ்யூஸ்க்களுக்காக இப்படி செய்தாரா? அல்லது புதிய trend செட் செய்ய நினைத்து நோஸ்கட் வாங்கினாரா? அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை சரியா என்பதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கவும்.

Facebook
Instagram
YOUTUBE