மீண்டும் தொடங்குகிறது IPL திருவிழா
போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஐபிஎல் தொடர், நாளை மீண்டும் தொடங்குகிறது. மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கிய இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மே 8ஆம் தேதி பாதியில் நிறுத்தப்பட்டது. அது ஏன் நிறுத்தப்பட்டது? இனி என்ன நடக்கவிருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஐபிஎல் தொடக்கமும், நிறுத்தமும்
மார்ச் 22ஆம் தேதி கொல்கத்த ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில், 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் போட்டியில் KKR அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது RCB அணி. அதன்பின், பல சுவாரஸ்யமான போட்டிகளுடன் முன்னேறி வந்த தொடரில் திடீரென இடர் ஏற்பட்டது.

தொடர் பாதியில் நிறுத்தம்
பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, ஆபரேஷன் சிந்தூரை தொடங்கிய இந்திய ராணுவம். இதனால், எல்லையில் போர் பதற்றம் நிலவியது. மே 8ஆம் தேதி எல்லைப்பகுதியான தரம்சாலாவில் நடைபெற்ற PBKS vs DC இடையிலான போட்டி, பாதியில் கைவிடப்பட்டது. அதற்கு அடுத்த நாளே, ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் விளையாடிய இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

மீண்டும் தொடங்கும் கொண்டாட்டம்
போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில், மீண்டும் ஐபிஎல் போட்டிகள் 17ஆம் தேதி (நாளை) முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது பிசிசிஐ. இதற்கான புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
புள்ளிப்பட்டியலில் என்ன நிலை?
வழக்கத்திற்கு மாறாக ஜாம்பவான்களான CSK, SRH, RR ஆகிய அணிகள் ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. முழுமையான புள்ளிப்பட்டியலை இங்கே காணலாம்.
மீண்டும் கொண்டாட்டத்திற்கு ரெடியா?
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குவதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க நீங்களும் ரெடியா?