அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் அயல் மொழி, தமிழுக்கு எந்த இடம்?

வெளிநாட்டுக் கனவு என்றாலே பலருக்கும் கண்முன் வந்து நிற்பது அமெரிக்கா தான். திரைப்படங்களிலும் லண்டன், அமெரிக்கா என வரும் மாப்பிள்ளைகளுக்கே மவுசு அதிகம் என காட்டப்படுகிறது. இதன் காரணமாகவே அமெரிக்காவுக்குச் செல்லும் அயல்நாட்டவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதில் இந்தியாவில் இருந்து மட்டும் அமெரிக்காவுக்கு படிக்கவும், வேலைக்காகவும் செல்வோர் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றனர்.

அவ்வாறு, செல்வோர் இந்தியாவின் பன்மொழிகளையும் அந்த நிலப்பரப்பில் சென்று தத்தமது மக்களிடம் ஆவலோடு உரையாடுகின்றனர். அவ்வாறு அமெரிக்க நிலப்பரப்பில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தமிழும் உண்டு.

இந்தி

அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் அயல் மொழிகளில் இந்தி முதலிடம் பிடிக்கிறது. இந்தி மொழி பேசும் இந்திய மக்கள் அங்கு அதிகம் இந்த மொழியைப் பேச்சு வழக்குக்கு பயன்படுத்துகின்றனர். இந்த மொழியின் முக்கியத்துவமும், கலாச்சாரத்தின் அடிப்படையிலும் இந்த கணக்கீடு எடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தி

இந்திக்கு இணையாக குஜராத்தி மொழி பேசும் மக்களும் அங்கு அதிகம் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் குறிப்பாக இந்திய வணிகத்துறையினர் பெரும்பாலும் அங்கு குஜராத்திகளாக உள்ளனர். வணிகத்துக்கும் அவர்கள் இந்த மொழியை பயன்படுத்தினர்.

தெலுங்கு

அமெரிக்காவில் தெலுங்கு பேசுவோர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. பெரும்பாலும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து திராவிட மொழிகளில் ஒன்றான தெலுங்கையும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். வளமான இலக்கியம், சினிமா மரபுகளும் அமெரிக்காவில் தெலுங்கு பாஷையில் அதிகம் புலப்பட்டு வருகிறது. அங்கு இளம் சமூகத்தினர் அதிகம் இம்மொழியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பெங்காலி

ரவீந்திரநாத் தாகூர் போன்ற புகழ்பெற்றவர்களின் மொழியான பெங்காலி, அமெரிக்காவில் பேசப்படும் அயல்மொழிகளில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. வங்க மொழி பேசும் மக்களின் கலாச்சாரமும் அங்கு அமெரிக்காவில் வேரூன்றியுள்ளது. வங்க மொழி கலை இலக்கிய விழாக்களுக்கும் அமெரிக்காவில் அதிக வரவேற்பு கிடைப்பதை வைத்தே அங்குள்ள மொழிப்பயன்பாடும் மதிப்பிடப்படுகிறது.

தமிழ்

அமெரிக்காவில் பேசப்படும் அயல்மொழிகளில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது செம்மொழியான தமிழ்மொழி. அங்கு தமிழ் விழாக்களும், கொண்டாட்டங்களும் எப்போதும் களைகட்டும். அமெரிக்க மக்களும் தமிழ் கலாச்சாரத்தை விரும்பி கவனிப்பதால், அங்கு நடக்கும் பண்டிகைகளும், பதார்த்தங்களும், கலை, இலக்கிய நிகழ்ச்சிகளும் அமெரிக்கர்களிடையேயும் கூட வரவேற்பைப் பெற்றுள்ளது.

Facebook
Instagram
YOUTUBE