விண்வெளித் துறையின் கேம் சேன்ஜரா நிலவின் தென்பகுதி? ஏன்?

என்னதான் உலக நாடுகள் நிலவில் கால் பதித்தாலும் சவாலான அதன் தென் பகுதியில் இந்தியா சந்திராயனை களம் இறக்கியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக நிலவின் தென் பகுதியில் தான் லூனார் வாட்டர் எனும் நிலவின் நீர் பகுதி இருக்கும் என கூறப்படுகிறது.

நிலவைப் பற்றிய ஆராய்ச்சியில் பல்வேறு உலக நாடுகளும், நாசா உள்ளிட்ட ஸ்பேஸ் ஏஜென்சிகளும் உலக அளவில் தென் பகுதியில் தங்களது குறியை வைத்திருந்தனர். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

நீர்

விண்வெளியை பொருத்தவரை நீர் தான் தங்கம் போன்றது. அங்கு கிடைக்கும் திரவம் எல்லாம் தங்கம் போன்றதாகக் கருதப்படுகிறது. நீரின்றி அமையாது உலகு என வள்ளுவன் கூறியது போல் நீர் இருக்கும் இடத்தில் மனிதர்களோ, உயிரினங்களோ வாழ தகுதியான இடமாக அது மாறிவிடும். அதை தேடித்தான் பலரும் நிலவில் பல ரோவர்களை உலவ விட்டு உள்ளனர். ராக்கெட்டுக்கான எரிபொருள், சுவாசிக்க கூடிய ஆக்ஸிஜன், நீர் சத்து ஆகியவை அங்கு ஆஸ்ட்ரோநட்கள் தங்களது ஆய்வைத் தொடர்ந்து மேற்கொள்ளும் வசதிகளை எளிமையாக்கும்.

நிலவின் தென் பகுதியில் தான் நீர், அரிய உலோகங்கள், மினரல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தான் இந்தியா நிலவின் தென் பகுதியில் களமிறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சந்திரனில் நீர் இருந்தால் அதன் ஆதாரம் எங்கே? மண்ணின் கம்போசிஷன் எப்படி உள்ளது? அங்கு உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி இருக்கிறதா? என ஆய்வு நடைபெறும். ஏற்கனவே ஏராளமான நாடுகள் நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்தியா சந்திராயன் மூன்றை அங்கு களம் இறக்கியது மூலம் விண்வெளி ஆய்வுகளில் இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்துவதாக நம்பப்படுகிறது.

லூனாரில் இருக்கும் வாட்டர் H2O வை விட மேம்பட்டது. அந்த நிலவில் இருக்கும் உயிர்களை வாழ வைக்கக்கூடிய தகுதி அந்த தண்ணீருக்கு இருக்கிறதா என்று ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

அங்குள்ள நீர் ஆவி ஆகிறதா? அது பற்றிய மூலக்கூறுகள் என்ன? என்பதை இந்த ஆய்வு மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அங்கு ஒரு வேலை தண்ணீர் கிடைத்தால் அங்கு சுரங்கம் அமைப்பதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்படலாம். தண்ணீரை தாண்டி தென் பகுதியில் முக்கியமான உலோகங்கள், மினரல்கள் இருக்கலாம் என நம்பப்படுவதாலேயே அங்கு சுரங்கம் அமைக்க வாய்ப்புள்ளது.

இதற்கு முன் அறியப்படாத பகுதியில் ஆய்வு செய்வதே சந்திராயன் மூன்றின் நோக்கமாகும். உலக அளவில் நிலவில் இடம் பிடிப்பது போல் பல்வேறு நாடுகள் ஆங்காங்கே சென்று ரோவர்களை ஓட்டி வருகின்றன. குறிப்பாக சீனா ரஷ்யா அமெரிக்கா போன்ற நாடுகள் நிலவின் தென் பகுதியில் தங்களது ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளன. இந்த உலகளாவிய அவசரத்துக்கு மத்தியில் இந்தியா தனது உரிமையை சந்திராயன் மூன்றின் மூலம் நிலைநாட்டியுள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE