வேத கால சுதந்திரம் இப்போ எங்கே?

வேதகாலப் பெண்களைப் பற்றி காணும் முன், வேத காலம் என்பது எத்தகையை கால கட்டம் என்பதைப் பார்ப்போம். இது கி.மு. 1500 முதல் கி.மு. 500 வரை. கிட்டத்தட்ட 2800 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறது ”The Karigai

சேகரித்த தகவல்கள்

வேதகாலத்தில் பெண்களும் பூநூல் அணிந்திருந்தனராம்.

முதல் 3 வருண மக்களுக்கு மட்டுமே கல்வி உரிமை இருந்ததாம்.

சில பெண்கள் திருமணம் செய்து இல்லறத்தில் நுழைந்தனர்.

சில பெண்கள் ஆன்மீக நாட்டத்தால் இறுதி வரை மணம் முடிக்கவில்லை.

ஆன்மீகப் பெண்கள், வேதக்கல்வி கற்று வாதப் பிரதிவாதங்களில் பங்கெடுத்தனர்.

யாக்ஞவால்கிய மகரிஷியைக் கேள்வி கேட்க பலரும் அஞ்சியபோது, வாதம் புரிந்த தைரிய மங்கை கார்கி வாசக்னவி.

பீகாரில் நடந்த அகில இந்திய தத்துவ மாநாட்டில் மகரிஷியைக் கேள்வி கேட்டார் கார்கி.

வாதத்தில் வென்றமைக்காக 1000 பசுமாடுகளும், அதன் கொம்பில் பொற்காசுகளும் பரிசாக வழங்கப்பட்டதாம்.

வேத காலத்தில யாக குண்டங்களில் முதல் செங்கல் அமைக்கும் உரிமை பெண்ணுக்கே இருந்தது.

முதல் அறுவடையையும் பெண்களே செய்துவைத்தனர்.

“சமான“ என்னும் விழா நடத்தி அதில் பெண்களே தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தனர்.

காதல் திருமணங்கள் அனுமதிக்கப்பட்டதை மநு நீதி, தொல்காப்பியங்கள் கூறுகின்றன.

திருமணம் ஆகும் வரை படித்த பெண்களை ‘சத்யோத்வாஹா’ என்று அழைத்தனர்.

திருமணம் செய்யாது கல்வி பயின்றவர்களை ‘பிரம்மவாதினி’ என்று அழைத்தனர்.

கல்வி கற்ற பெண்களே வாழ்வில் சிறந்த நிலையை அடைவார்கள் என அதர்வண வேத மந்திரம் கூறுகிறது.

பெண்கள் ஆசிரியைகளாக பணி செய்து வந்தனர்.

தத்துவ வித்தகர்கள், கவிஞர்கள், பட்டி மன்ற ராணிகளாக இருந்தனர்.

தம்பதி என்ற பொருளுக்கு ஏற்ப வாழ்வில் 50-50 என்ற சரி விதிக உரிமை, கடமைகளுடன் வாழ்ந்து வந்தனர்.

கல்யாணத்துக்கு ஓதும் மந்திரங்களில் பெண்களை “நீயே வீட்டுக்கு ராணி” “குடும்பத்துக்கு இருள் நீக்கும் ஒளி விளக்கு“ என வர்ணித்தனர்.

துணி நெய்யும் தொழிலில் பெண்கள் கலை நயம் படைத்தனர்.

நூல் நூற்கும் பணிகளிலும் பெண்களே சிறந்து விளங்கினர்.

போர்க்கருவிகள் செய்யும் ஆலைகளிலும் பெண்கள் பணியாற்றினர்.

வேதத்தில் சில சமயம் எகிப்து போல உடன்பிறவாத சகோதரன்-சகோதரி மணம் முடித்ததாக சில பாடல்கள் கூறுவதாக கேள்விப்பட்டதுண்டு.

அத்தை-மாமன் மகள்/மகன் உள்ளிட்ட உறவு முறைகளிலும் மணம் முடித்தனர்.

கிரேக்க மன்னர் நாடு வென்றால் அந்நாட்டு பெண்களை வீரர்களுக்கு பங்கு போட்டதாகக் கூறப்படுகிறது.

வேதகாலத்தில் இந்திய மன்னர்கள் நாடு வென்றால் அந்நாட்டு பெண்களை மரியாதையுடன் நடத்தி வந்தனர்.

கணவன் இறந்த பின் உடன் கட்டை ஏறும் பழக்கம் வேத காலத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது.

கணவர் இறந்துவிட்டால், அப்பெண்ணுக்கு வாழ்வும், அடைக்கலமும் தர இறந்த கணவரின் சகோதரர் முன்வருவர்.

எனவே வேத காலத்தில் பெண்களுக்கு கல்வி உரிமை, மணவாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, போர்தொழில் ஆயுதங்கள் செய்யும் பணி, மறு மண உரிமை, போற்றுதலுக்குரிய மரியாதை என அனைத்தும் கிடைத்ததை இதன் மூலம் தெரிந்துகொண்டோம். இதுபோன்ற சுவாரசியத் தகவல்களைக் காண அடிக்கடி வாருங்கள் “The Karigai”-யின் பக்கம்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE