உடலில் யூரிக் ஆசிட் அதிகமாவதால் பல்வேறு தொந்தரவுகள் ஏற்படும். இதனை ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு சென்று குறைக்கும் முறையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க வீட்டிலேயே எவ்வாறு யூரிக் ஆசிட் அளவை குறைப்பது என்பதை ”த காரிகை”யின் கட்டுரையில் பார்க்கலாம்.

யூரிக் ஆசிட் என்றால் என்ன?

யூரிக் ஆசிட் என்பது நாம் சாப்பிடும் உணவில் உள்ளது. பின்பு அது உடைந்து பியூரைன்களாக மாறும். இது, பெரும்பாலும் உணவு மற்றும் நீர் ஆகாரத்தில் இருக்கும் ஒரு அம்சம் ஆகும். இதனை எவ்வளவு உட்கொள்கிறோம் என்பதை பொறுத்து உடலில் யூரிக் ஆசிட் அதிகமாகும்.

எனவே ஒவ்வொரு மனிதரும் தங்களது யூரிக் ஆசிட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. இது கிட்னி உள்ளிட்ட பல்வேறு பாகங்களின் ஆரோக்கியத்திற்கும் உதவும். யூரிக் ஆசிட் அளவு அதிகரிப்பது என்பது உயிருக்கே சில சமயம் ஆபத்தாக முடியக்கூடும். எனவே அத்தகைய ஆபத்தான யூரிக் ஆசிட் அதிகரிப்பை குறைக்க வீடுகளிலேயே சிலர் டிப்ஸ்களை ஃபாலோ செய்யலாம். அவை என்னென்ன? என்பதைத் தற்போது பார்க்கலாம்.

அதிக நீர் பரங்கு பருகுதல்

அதிக அளவு தண்ணீரை பருகும் போது அது அதிக அளவு சிறுநீரை வெளியேற்றும். அத்தகைய சிறுநீர் மூலம் யூரிக் ஆசிட் வெளியேற கிட்னி உதவும். எனவே அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். எப்போதும் தங்கள் கையில் ஒரு பாட்டிலை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை கொஞ்சம் தண்ணீரை பருகுவதன் மூலம் உடல் எப்போதும் நீரேற்றமாக இருப்பதோடு யூரிக் ஆசிட்டை கிட்னி ஃபிளஷ் செய்து வெளியேற்ற உதவும்.

அசைவம்

பியூரின் ரிச் பொருட்கள் உடலில் யூரிக் ஆசிட்டை அதிகரிக்கும். அவை என்னென்ன? என்று பார்க்கலாம். ஆடு மாடு, உள்ளிட்ட இறைச்சிகள் சிவப்பு நிற இறைச்சி என அழைக்கப்படும். இதனை அதிகமாக உட்கொள்ளும் போது யூரிக் ஆசிட் அதிகரிக்கும். அதேபோல மீன்களும், ஈரல், ஆட்டுத்தலை, மண்ணீரல், ஆட்டுக்கால் போன்ற ஒவ்வொரு உறுப்புகளின் இறைச்சியும் அதிக அளவு யூரிக் ஆசிட்டைக் கொண்டிருக்கும்.

மாற்றாக என்ன சாப்பிடலாம்?

யூரிக் ஆசிட் அதிகம் இருப்பவர்கள் அசைவம் பெரும்பாலும் சாப்பிடக் கூடாது. ஆனால் அதற்கு மாற்றாக பியூரின் குறைந்த அளவுள்ள முட்டைகளை எடுத்துக் கொள்ளலாம். இது யூரிக் ஆசிட் அளவை குறைக்கவும் ஒரே சீராக பராமரிக்கவும் உதவும்.

அதிக சர்க்கரை உள்ள பானங்கள்

கூல் ட்ரிங்க்ஸ், காபி, டீ போன்றவற்றில் அதிக சர்க்கரை இருக்கும். அது உடலில் யூரிக் ஆசிட் அளவை பெரும்பாலும் அதிகரிக்கும். பொதுவாகவே யூரிக் ஆசிட் ஏராளமான உடலில் அதிகரிக்கிறது என்றால் அதற்கு மிகப் பெரிய காரணமே சர்க்கரை அதிகம் நிறைந்த பானங்களை பருகுவது தான். எனவே அதற்கு பதிலாக தண்ணீர் பருகுவதோ, அல்லது சர்க்கரை போடாத பிளேக் காஃபி பருகுவதும் யூரிக் ஆசிட்டைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

அதிக நார்ச்சத்துள்ள உணவு

உடலில் யூரிக் ஆசிட் அளவை குறைக்க ஃபைபர் அதிகம் நிறைந்த பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக கொண்டைக்கடலை, தானியங்கள், பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது யூரிக் ஆசிட் அளவை பராமரிக்க உதவும்.

விட்டமின் சி

யூரிக் ஆசிட் அதிக அளவு இருப்பதால் அதனை குறைக்க வைட்டமின் சி உணவை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது பெரும்பாலும் பழங்களில் காணப்படும். எனவே யூரிக் ஆசிட் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க ஆரஞ்சு பழங்களை அதிகம் சாப்பிடலாம். அதேபோல் கிவி, திராட்சை உள்ளிட்ட பழங்களும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இதனை தினந்தோறும் எடுத்துக் கொள்வது நல்லது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்

Facebook
Instagram
YOUTUBE