பழைய முறைகளை பயன்படுத்தலாம் என நினைத்தால், மெழுகுவர்த்தி வெளிச்சம் மட்டுமே உள்ளதொரு உணவகத்தில் டின்னர் புக் செய்து, சாக்லேட் பாக்ஸ், டெட்டி பேர், பூங்கொத்து ஆகியவற்றை பரிசளிக்கலாம். திருமணம் செய்தவது உறுதியாகிவிட்டால், மோதிரம் கூட பரிசளித்து காதலை வெளிப்படுத்தலாம்.

நீங்கள் ஏற்கெனவே பிரபோஸ் செய்து லவ் டிரேக் ஓடிக் கொண்டிருந்தாலும் கூட, அல்லது உங்களுக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கூட அவர்களை நீங்கள் காதலித்துக் கொண்டே இருப்பதை இந்த நாளில் மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். ஏனெனில், அன்பு இல்லாத வாழ்க்கை ஒருபோதும் நீடிக்காது.

பெரிய எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம். காதலர் தினம் பெரிய வணிகத்துக்கான கொண்டாட்டமாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. புதிதாக காதலிப்பவர்கள், காதலுக்கு நேரம் செலவளியுங்கள். அதே சமயம், இன்று ஒருநாள் மட்டுமாவது நண்பர்களிடம் அவர்கள் தங்கள் காதலன், காதலியுடனான நேரத்தை செலவிடமுடியாது தடையாக நிற்காதீர்கள். நட்பும் முக்கியம்தான். ஆனால், இது காதலர்களுக்கே உரிய நாள்.

நீங்கள் காதலை ப்ரொபோஸ் செய்ய முழுக்க முழுக்கத் தயாராக இருந்தால் மட்டுமே, டிரமாட்டிக் ஆக, திரைப்படங்களில் வருவது போல செய்யவும். இல்லாவிட்டால் சொதப்பிவிடும்.

பிரபோஸ் செய்யும் போது, பட்டாசு வெடித்தல், பலூன் பறக்க விடுதல் ஆகிய சீன்கள் இருந்தால், டைமிங் சொதப்பினால் எல்லாம் சொதப்பும் கவனம்.

பரிசே வழங்காமல் உங்கள் இருவருக்காக மட்டும் நேரத்தை ஒதுக்கி அன்பைப் பரிமாறி செலவிடலாம். மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதும் காதலை வலுப்படுத்தும்.

தொலை தூர உறவில் இருப்பவர்கள், காதலர் தினத்தன்று சந்திக்க முடியாதவர்கள், டெக்னாலஜி உதவியுடன் காதலைக் கொண்டாடுங்கள். ஆன்லைனில் பரிசு அனுப்பலாம், பிடித்த உணவு ஆர்டர் செய்யலாம்.

இந்தக் கட்டுரையின் முந்தைய பாகத்தைக் காண இங்கு கிளிக் செய்யவும்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE