காதலர் தினத்தன்று தனக்கு மட்டுமே உரிய தன்னுடைய காதலனையும், காதலியையும் கொண்டாடக் காத்திருக்கும் பலர், அன்றைய நாளில் இம்ப்ரஸ் செய்கிறேன் பேர்வழி என சில சொதப்பல்களை செய்துவிடுவார்கள். இது அவர்களுக்கு, திருமணமாகி பேரன் பேத்தியே எடுத்தாலும் கூட, கேலிக்குரிய ஒன்றாக மாறி துணுக்கு ஜோக்ஸாக அவ்வப்போது வெளிவந்து “ஒரே அசிங்கமா போச்சு குமாரு” என்பது போல இருக்கும்.

எனவே, அப்படி சொதப்பாமல் காதலித்து, காதலை பிரபோஸ் செய்து, காதலைக் கொண்டாட சில டிப்ஸ்களை வழங்குகிறது த காரிகை.

காதல் என்பது பத்தாயிரம் காலத்து வாழ்க்கையின் அடிப்படை. என்னடா? திருமணத்தைத் தானே ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள்? என நீங்கள் யோசிக்கலாம். அனுபவம் வாய்ந்த பெற்றோர் தெர்ந்தெடுக்கும் வாழ்க்கைத்துணையை, நீங்கேள தேர்வு செய்வதில் பல கவனங்கள் தேவை. அதை பின்னர் பார்க்கலாம்.

தற்போது காதல் பரிசுகளைப் பற்றி முதலில் பார்க்கலாம்.

நீங்கள் வாழ்க்கைத்துணைக்கான சரியான துணையைத்தான் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்றால், அவர்களின் விருப்பங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதை நேர்த்தியாகவும், கண்ணியமாகவும் வாங்கிக் கொடுத்து இம்ப்ரஸ் செய்யலாம்.

இந்தக் காலத்தில் பெண்களுக்கு கடைகளில் வாங்கித் தரும் கிரீட்டிங் கார்ட், யாரோ யாருக்கோ எடிட் செய்த வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பாடல்களை விட, நீங்களாக உருவாக்கி, அவர்களுடையே பெயரும், புகைப்படமும் கொண்ட கஸ்டமைஸ் செய்யப்பட்ட பாடல்களோ, பரிசுகளோ, கிரீட்டிங் கார்டுகளோ அவர்களை இம்ப்ரஸ் செய்யலாம்.

பார்ட்னருடன் டிஸ்கஸ் செய்யுங்கள். உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்கள் பார்ட்னரின் விருப்பம் அறிந்து, அதை இருவரும் பின்பற்றலாம். சிலர் காதலர் தின கொண்டாட்டத்தை வணிகங்களில் வியூகம் என்று சொல்லி, மிகவும் பிரைவேட்டாக கொண்டாட விரும்புவார்கள். உங்கள் இருவரின் விருப்பமும் நிறைவேறும் வகையில் கொண்டாடலாம்.

இக்கட்டுரையின் தொடர்ச்சியைக் காண இங்கு கிளிக் செய்யவும்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE