வீட்டில் ஷாம்பு தயாரிப்பது எப்படி? முடியும் கொட்டாது. ஷாம்பூ செலவும் மிச்சம்!
கடைகளில் கிடைக்கும் ஷாம்புவில் உள்ள ரசாயனங்கள் உடலுக்கு பல்வேறு விதமான உபாதைகளை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க எளிதாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ஷாம்பு தயாரித்து பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
- பூந்திக்கொட்டை 250 கிராம்
- சீயக்காய் 100 கிராம்
- காய்ந்த நெல்லிக்காய் 100 கிராம்
- வெந்தயம் 10 கிராம்
பூந்திக்கொட்டை எனப்படுவது இயற்கையிலேயே நுரைக்கும் தன்மை கொண்டது. ஆங்கிலத்தில் Soap Nut என அழைக்கப்படும் அதன் விதைகளை மட்டும் நீக்கி விட்டு மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக போட்டு மாவு மில்லில் கொடுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அதை அப்படியே சீயக்காய் தூள் ஆகவும் பயன்படுத்தலாம்.
ஷாம்பு வாக மாற்ற அதில் இரண்டு ஸ்பூன் பொடியை எடுத்து வாணலியில் போட்டு இரண்டு நிமிடங்கள் வறுக்கவும். அதனுள் 100 மில்லி தண்ணீர் ஊற்றி நுரை பொங்கும் வரை கிளறவும்.
மறுநாள் அதை வடித்து ஷாம்புவாக பயன்படுத்தலாம். 15 நாட்கள் வரை அதனை வைத்து பயன்படுத்தலாம். மீண்டும் ஷாம்பு தேவைப்படும்போது இரண்டு ஸ்பூன் பொடி எடுத்து 100 மில்லி தண்ணீர் கலந்து நுரை வரும் வரை கிளறி வடித்து பயன்படுத்தலாம்.