வெள்ள நீரானது சிறார்கள் நீந்தி விளையாட உகந்தது அல்ல.

ஏதேனும் சாப்பிடும் முன்பு கண்டிப்பாக கையை சோப்பு நீரால் தான் கழுவ வேண்டும்.

குறிப்பாக குழந்தைகள் வெள்ளம் பாதித்த நீரைத் தொட்டுவிட்டு கை கழுவாமல் சாப்பிட்டால் பேதி வரலாம்.

அது நீரில் கலந்து பிற குழந்தைகள் அந்த நீரில் விளையாடும் போதும். பின்பு கைகழுவாமல் சாப்பிடும் போதும் அந்த தொற்றானது குழந்தைகளுக்கு பரவக்கூடும்.

அந்த மாதிரியான அசுத்தத் தண்ணீர் காதில் புகுந்தால் அதிக நோய் தொற்றை ஏற்படுத்தலாம்.

வெள்ள நீரில் மட்டுமல்ல வெள்ளநீர் கலந்த ஆறு குளம் ஏரி நீரிலும் இந்த கவனம் தேவை.

பூச்சிக் கடிகளை கவனியுங்கள்

வெள்ளம் பாதித்த நேரத்தில் விலங்குகள் பூச்சிகள் ஊர்வன உள்ளிட்டவை ஆங்காங்கே இடம்பெயர்ந்து விடும். எனவே தங்களை அறியாமல் ஏதேனும் பூச்சி கடித்திருந்தால் அதனை கவனிக்கவும்.

பெரும்பாலும் கட்டுவிரியன் பாம்பானது கடித்தால் வலி தெரியாது. என்ற போதும் அது விஷத்தன்மை உள்ள பாம்பு என்பதால் சற்று நேரத்தில் வாயில் நுரை தள்ளி, மயக்கம் ஏற்பட்டு, சுயநினைவு இழந்து, உடலில் நீலம் பூத்து விட வாய்ப்பு உள்ளது.

கெமிக்கல் கலன்களை தொடாதீர்கள்

விஷத்தன்மை மிக்க கெமிக்கல் பயன்படுத்தப்படும் தொழிற்சாலையைச் சுற்றி வசிப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட ட்ரம், பேரல் உள்ளிட்டவை ஏதேனும் தென்பட்டால் அதை நகர்த்தவோ அல்லது அதில் என்ன இருக்கிறது என்று திறந்து பார்க்கவோ முயற்சிக்க வேண்டாம்.

ஒருவேளை அது ரசாயனப் பொடி, வாயு, அல்லது ரசாயன திரவம் நிரம்பி இருந்தால் அது வெடித்து சிதற வாய்ப்பு உள்ளது.

அப்படி ஏதேனும் பார்த்தால் காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டவற்றுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

கார் பேட்டரிகளைக் கழற்ற வேண்டாம்.

வீட்டில் மின்சாரம் இல்லை. காரில் இருந்து பேட்டரிக்களை இணைத்து வீட்டுத் தேவைக்கு பயன்படுத்தலாம் என ஒரு சிலர் முயற்சிக்கலாம்.

கார்களில் இருந்து பேட்டரிகளை அகற்றும் போது மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும்.

என்னதான் வெள்ள நீரில் காரின் பேட்டரிகள் இருந்தாலும் அவற்றில் எலக்ட்ரிக் சார்ஜ் ஆனது இருக்கக்கூடும்.

அதுமட்டுமின்றி கார் பேட்டரிகளில் இருந்து கசியும் ஏதேனும் ஒரு ஆசிட்டை, கையில் தொட்டாலும் அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

எனவே இன்சுலேட்டட் கிளவுஸ் என்ற பிரத்யேக கையுறை அணியாமல் கார் பேட்டரிகளை கையாள்வது மழை மட்டுமல்ல, எந்த காலத்திலும் உகந்தது அல்ல.

அணைத்து வைக்க வேண்டியவை

வீட்டில் உள்ள மின் சாதனங்களை அனைத்து வைப்பது நல்லது.

அதேபோல எரிவாயு சிலிண்டல், எரிவாயு பைப் லைன் ஆகியவற்றையும் அணைத்து வைப்பது மிகவும் நல்லது.

மின்சாரத்தில் கவனம்

எங்கேனும் மின் கம்பிகள் அருந்து தொங்குவதைக் கண்டால் நமக்கு ஏன் வம்பு என நாம் மட்டும் விலகிச் செல்லாமல் மின்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். குழந்தைகளும் அவ்வழியே நடமாட வாய்ப்புண்டு.

வீட்டையோ வெளியிலயோ சுத்தம் செய்யும்போது தலைக்கு மேல் தொங்கும் மின் கம்பிகள் மீது ஒட்டடைக்குட்சி, துடைப்பம், துணி உள்ளிட்டவை படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

ஒருவேளை யாருக்கேனும் மின்சாரம் தாக்கினால், அவசரத்தில் மறந்துபோய் தாங்களாக ஓடி சென்று கையில் பிடித்து அவரை காப்பாற்ற முயலாமல் பிளாஸ்டிக் நாற்காலி உள்ளிட்டவற்றை வைத்து அவர்களை தள்ளி விடுவது நல்லது.

இக்கட்டுரையின் முதல் பாகம், இரண்டாம் பாகங்களையும் படியுங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE