மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்களும் படாதபாடு பட்டு விட்டனர். சில இடங்களில் முதல் தளம் வரை அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது கடும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. ஆங்காங்கே பாம்பு முதலை உள்ளிட்டவை சாலையில் சென்றதும் காண முடிந்தது.

சென்னை மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பும் என நம்பிக்கை உள்ள நிலையில் வெள்ளத்துக்குப்பின் வெள்ள நீரால் பாதித்த உடல், உடமை, வீடு உள்ளிட்டவற்றை எப்படி சுத்தம் செய்வது என்பதை அரசின் நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்புத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளில் என்னென்ன அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்.

சாதாரண ஆற்று நீர் கடல் நீரை விட வெள்ள நீரில் சாக்கடை கலந்திருப்பதால் அது மிகவும் ஆபத்தானது. குறிப்பாக இன்ஃபெக்சன் பரப்பும் நோய்களில் நம்மை எளிதில் சிக்க வைக்கும். அதுமட்டுமின்றி பல்வேறு தொழிற்சாலைகள் சுற்றி இருக்கும் சென்னையில் வெள்ளம் வந்துள்ளதால் அங்கு ரசாயன கலவைகள் நீரில் கலந்து அது பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தலாம்.

ஒரு சிலர் இந்த வெள்ளத்தில் நீரில் இழுத்துச் செல்லப்படும் போது காயமும் அடைந்திருக்கலாம். எனவே அத்தகைய வெள்ள நீர் பாதிப்பில் இருந்து மீள என்னென்ன செய்யலாம் என பார்க்கலாம்.

ஆழம் குறைவு என கணிக்காதீர்கள்

முதலில் ஆபத்தான சுரங்கப் பகுதிகளில் அல்லது தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் ஆழம் தெரியாமல் அங்கு வண்டியை ஓட்டிச் சென்று சிக்கிக் கொள்ளக் கூடாது.

என்னதான் நீச்சல் தெரிந்திருந்தாலும் வெள்ளம் போல் பாய்ந்து வரும் நீரில் எத்தகைய பெரிய, சிறிய வாகனமாக இருந்தாலும் அது உங்களைக் காப்பாற்றாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வாகனங்களோடு நீங்களும் எளிதில் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு விடக்கூடும்.

கிருமிகள் நிறைந்த மருத்துவக் கழிவுகள்

வெள்ளத்தின் போது மின்கம்பிகள் கீழே தண்ணீரில் கிடக்கலாம். கவனம்.

மனித கழிவுகளும் கால்நடை கழிவுகளும் தண்ணீரில் கலந்து இருக்கலாம்.

வீட்டு உபயோக பொருட்கள் மருத்துவம் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் ரேடியாலஜிக்கல் கழிவுகள் வெள்ளத்தில் இருக்கலாம்.

கொடிய நோய் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வெளியேறிய கழிவுகள் கூட பயோ வேஸ்ட் ஆக குப்பையில் கிடந்து அது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம்.

நிலக்கரிக் கழிவுகளின் ஆபத்து

நிலக்கரி கழிவுகள் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய கார்சினோஜெனிக் கொண்டவை. இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஆர்சீனிக் குரோமியம், மெர்குரி உள்ளிட்டவை அதிகம் இருக்கும்.

வெள்ள நீரில் அடித்து வரப்படும் வாகனங்கள் குப்பைகள் உள்ளிட்டவை உங்கள் உடலைக் கிழித்து காயத்தை ஏற்படுத்தலாம்.

விலங்குகளிடம் கவனம்.

காட்டு விலங்குகளும் தெருவிலங்குகளும் ஊர்வன மற்றும் பாம்பு வகைகளும் இந்த நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் நடமாடலாம். வீடுகளுக்குள் கூட புகுந்து விட வாய்ப்பு உள்ளது. கவனம்.

காயங்கள் ஏதேனும் இருந்தால் அதில் இன்பெக்க்ஷன் உருவாக வாய்ப்பு உண்டு.

எனவே ஒரு டிடி ஊசி போட்டுக் கொள்வது நல்லது.

தோல் அரிப்பு இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

குடல் சார்ந்த நோய் உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

படை, சொறி போன்ற நோய்களும் வரலாம்.

எனவே அவசியம் இல்லாத நிலையில் வெள்ள நீருக்குள் இறங்க வேண்டாம்

இதன் தொடர்ச்சியைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE