வெயில்ல பைப்ப திறந்தா ரொம்ப தண்ணி சுடுதா? இதை பண்ணுங்க
தகிக்கும் வகையில் கொளுத்தும் வெயில் தாங்க முடியாமல், ஏராளமானோர் பகல் வேளைகளில் குளியல் போட நினைப்பார்கள். ஆனால், பைப்பை திறந்தாலே கொதி நிலையில் தண்ணீர் வந்து அவஸ்தை தரும்.
அவசரத்துக்கு பாத்ரூம் கூட போக முடியாத அளவுக்கு தண்ணீர் கொதிக்கும்.
இது தமிழ்நாட்டில் தினந்தோறும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளாக இருக்கும்.
இதனாலேயே பட்டப்பகலில் குளிப்பதை பலரும் தவிர்ப்பார்கள். அல்லது நீரை பக்கட்டில் நிரப்பி வைத்துவிட்டு ஓரிரு மணி நேரம் கழித்து பின்னர் குளிப்பார்கள்.
அல்லது ஒரு சிலர் மோட்டார் போட்டவுடன் ஓடிப் போய் குளித்துவிட்டு வருவார்கள்.
இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என சில சூப்பரான டிப்ஸ்களை வழங்குகிறது ‘த காரிகை”.
வெண்ணிற பூச்சு
பொதுவாகவே கருமை நிறம் என்பது வெயிலையும் வெப்பத்தையும் கிரகிக்கும். ஆனால், வெண்ணிறம் என்பது அந்த வெயிலை எதிரொலித்து தன்னை குளுமையாக வைத்துக் கொள்ள உதவும். எனவே, ஒன்று வெண் நிறத்தில் உள்ள வாட்டர் டேங்க் மாடியில் பொருத்துவது நலம். அல்லது ஏற்கனவே இருக்கும் கருப்பு நிறத்திற்கு பூசப்படும் வெண்மை நிற பூச்சை பெயின்ட் ஆக அடித்து சமாளிக்கலாம்.
மணல்
மொட்டை மாடியில் சின்டெக்ஸ் டேங்க் அப்படியே வைப்பதற்கு பதில் சற்று மணல் குவித்து சில செங்கற்களை சமமாக அடுக்கி அதன் மேல் வைத்தீர்கள் என்றால் அது சற்று குளுமையாக இருக்கும்.
மூடி வைப்பது
சின்டெக்ஸ் டேங்க்களின் மூடியை சரியாக மூடி வைப்பது சூரிய ஒளி அதனுள் செல்வதை தடுத்து நிறுத்தும்.
சுவர்
சுண்ணாம்பு அல்லது களிமண்களால் ஆன சுவர் எழுப்பி சின்டெக்ஸ்-ஐ வெயிலில் இருந்து பாதுகாக்கலாம்.
உறை போடுவது
சின்டக்ஸ் தொட்டிகளை மூடி வைப்பதற்கு என்று தார்பாலின்கள் கிடைக்கும்.
ஒருவேளை உங்களுக்கு அந்த தார்பாலின் அதிக செலவு தருவதாக இருந்தால் கோணி பைகளை அதனை சுற்றி கட்டி, அவ்வப்போது ஈரமாக வைத்துக் கொள்வதன் மூலம் உள்ளே இருக்கும் தண்ணீரும் சற்று குளுமையாக வைத்திருக்க வாய்ப்பு உண்டு.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.