வெள்ளம் வடிந்தபின் காரை எப்படி காப்பாற்றுவது?

காரை மேடான பகுதியில் தண்ணீர் இல்லாமல் தள்ளிச் சென்றோ, டோ செய்தோ நிறுத்திய பின்பு காரை சுற்றிலும் கவனிக்க வேண்டும். ஏதேனும் ஒரு பாகங்கள் டேமேஜ் ஆகி உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனக் கூறினார் மோட்டோ 38 என்ற கார் டீடைலிங் ஸோரூமின் நிர்வாக இயக்குநர் சதீஷ் குமார். அவர் கூறிய விவரங்கள் பின்வருமாறு. .

காரின் உள்பகுதிக்குள் நீர் வந்திருந்தால், அந்த ஈரம் விரைவில் காய்வதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

காரை வெயிலில் நிறுத்தி கதவு ஜன்னல்களை திறந்து விட வேண்டும்

எவ்வளவுக்கு எவ்வளவு சூரிய வெளிச்சம் உள்ளே செல்கிறதோ அவ்வளவு பூஞ்சை பிடித்தல் போன்ற சம்பவங்கள் காருக்குள் வராமல் இருக்கும்

காருக்குள் கெட்ட வாடை வராமல் இருப்பதை இது உறுதி செய்து கொள்ளும்

காரின் உள் பகுதிக்குள் டேபிள் ஃபேன் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை வைத்து காய வைக்கலாம்.

காரின் உள்பகுதிக்குள் துண்டு உள்ளிட்ட ஏதேனும் வறண்ட துணியை வைத்து துடைத்து எடுக்கலாம்

காரின் ஹீட்டரை ஆன் செய்துவிடலாம். இது உள்ளே இருக்கும் காரின் ஈரத்தன்மையை குறைக்கும்

காருக்குள் தண்ணீரை உறிஞ்சக்கூடிய வாக்யும் கிளீனர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விரும்பினால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே ஈரமான பகுதியில் மின்சாதனத்தை இயக்குவதால் மின்சாரம் தாக்கி விட வாய்ப்பு உள்ளது.

காரின் உலோகங்களில் துருப்பிடிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.

ஒருவேளை துருப்பிடித்து விட்டால் அதனை சுத்தம் செய்து மீண்டும் பெயிண்ட் அடிக்க வேண்டுமே தவிர அப்படியே ஏற்றினால் அந்த துருவானது பிற இடங்களுக்கும் பரவி விட வாய்ப்பு உள்ளது

வெள்ளம் வந்தால் முதலில் பாதிப்பது காரின் மென் வயர்கள் தான்.

தற்காலத்தில் காரின் டாஷ்போர்ட், ரேடியோ, இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், ஜன்னல்கள், கதவுகள், இருக்கைகள், விளக்குகள், பக்கவாட்டு கண்ணாடிகள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் வயர்களாலே பிணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

எனவே எலக்ட்ரிக் ஷாக் அடிப்பதை தவிர்க்க ஒரு தொழில்முறை ரீதியான மெக்கானிக்கிடடோ, டீடைலிங் ஷாப்பிலோ கொடுத்து தான் காரை ரிப்பேர் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஒரு காரின் பிரேக் கிளட்ச் ஆக்ஸிலரேட்டர் ஆகிய 3 பாகங்களும் மிகவும் முக்கியமானவை. அது அசைந்து கொடுக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் அந்த அசைவுகளுக்கு கொடுக்கப்பட்ட இடைவெளிக்குள் தண்ணீர் புகுந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பாகங்கள் மின்வயர்களைப் போன்றே எளிதில் பாதிக்கப்பட கூடும்.

காரின் கதவில் உள்ள டோர் பேனல்களில் நீர் உறிஞ்சி இருந்தால் அதனை மாற்ற முயலலாம்.

என்னதான் காரை துண்டு, வாக்யும் கிளீனர் வைத்து துடைத்தாலும், ஷீட், மேட் ஆகியவற்றுக்கு அடியிலும் காரின் மேற்கூரை உள்ளிட்ட இடங்களிலும் நீர், புழு, பூச்சிகள் புகுந்திருக்க வாய்ப்புண்டு.

எனவே டீடைலிங் ஸோரூமில் கொடுத்து கார் சீட், மேட், ரூஃப் ஆகிவற்றைக் கழற்றித்தான் ஈரம் உறிஞ்சும் பம்புக்களைக் கொண்டு காய வைக்க வேண்டும்.

காரின் மேற்கூரை ஃபோமால் ஆனது எனில் அது ஊறிவிடும், துணியால் அகீயிருந்தால் தொங்கிவிடும். அதனை சாதாரண வாடிக்கையாளரால் சுத்தம் செய்ய முடியாது என்றும் கூறினார். சரியாக சுத்தம் செய்யாவிட்டால், பூஞ்சை பிடித்து, கெட்ட வாடை அடித்து, அது ஏசிக்குள் புகுந்து அந்த காற்றை சுவாசிக்கும் போது பல நுரையீரல் அலற்சிகளையும் ஏற்படுத்திவிடும் எனக் கூறினார் சதீஷ்குமார்.

ஆயில் டேங்கில் நீர் கலந்ததா? என கண்டுபிடிப்பது எப்படி?

பொதுவாக காரின் ஆயில் டேங்க் வரை தண்ணீர் சென்றிருக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. அதனை காரின் டிப்ஸ்டிக் என மூழ்கும் அளவு வைத்திருக்கும் குச்சியில் வைத்து கண்டுபிடிக்கலாம் ஆயில் டேங்கிற்குள் அந்த டிப்ஸ்டிக் என்ற குச்சியை விட்டு வெளியே எடுத்து பார்த்தால் தெரியும் எனக் கூறினார் மெக்கானிக் நவீன். “அந்த எண்ணெயில் நீர் திரள்கள் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். அப்படி நீர்த்திரள்கள் இருந்தால் அந்த காரை ஆன் செய்யும்போது சிலிண்டர் பிஸ்டன் உள்ளிட்ட பாகங்களை கெடுத்து இன்ஜினையும் கெடுத்துவிடும். மேலும் எண்ணெயில் நீர் கலந்திருந்தால் கையில் தொட்டதுமே தெரியும் என்றும் அது தார் போன்ற நிறத்தில் மாறிவிடும்” என்றும் மெக்கானிக் கூறினார். 

மழைக்காலத்தில் காரை எப்படி இயக்க வேண்டும், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

காருக்கு இன்சூரன்ஸ் பெறுவது எப்படி என்பதைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE