அரசு உதவியோடு தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் படிக்கலாம்.

அதற்கு 25 சதவீத இட ஒதுக்கீடானது அரசு நிர்ணயத்துள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டை எப்படி பயன்படுத்துவது? எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க தேவையானவை என்னென்ன? யாரெல்லாம் தகுதியானவர்கள்? என்ற முழு விவரமும் இதில் உள்ளது.

ஏழை மாணவர்களும் தனியார் பள்ளிகளில் சேர்ந்து பயில வாய்ப்பு அளிக்கும் இந்த திட்டமானது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி உருவாக்கப்பட்டது.

விண்ணப்பத்துக்கான வெப்சைட் https://rte.tnschools.gov.in/

விண்ணப்ப தேதி இன்று முதல் மே 20 ஆம் தேதி வரை

பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் குறைவு

வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளும் விண்ணப்பிக்கலாம்

எல் கே ஜி வகுப்பில் சேர 2020 ஆகஸ்ட் 1 முதல் 2021 ஜூலை 31-க்குள் பிறந்திருக்க வேண்டும்

ஒன்றாம் வகுப்பில் சேர 2018 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 2019 ஜூலை 31ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையானவை

தேவையான ஆவணங்கள்:

  • புகைப்படம்
  • பிறப்புச் சான்றிதழ்
  • ஆதார் கார்டு அல்லது ரேஷன் அட்டை
  • வருமானச் சான்றிதழ்
  • சாதிச் சான்றிதழ்
  • சிறப்புப் பிரிவுக்கான சான்றிதழ் (இருப்பின்)

எங்கெங்கு விண்ணப்பிக்கலாம்

ஆன்லைன் விண்ணப்பமான இதில் மேற்சொன்ன வெப்சைட்டில் பதிவு செய்யலாம் அல்லது மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டார வளமையா அலுவலகங்கள் ஆகிய இடங்களில் இனைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு உட்பட்டு உள்ள தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பம் ஏற்ப்பு மற்றும் நிராகரிப்பு விபரங்கள் மே 27ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்

25% இட ஒதுக்கீட்டுக்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்

குலுக்கல் ஆனது மே 28ஆம் தேதி நடத்தப்பட்டு குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள்

ஏழைக் குழந்தைகளுக்கான கல்வி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் அரசு 400 கோடி தனியார் பள்ளிகளுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE