நட்பு பலரது வாழ்வில் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக உள்ளது. பள்ளிப் பருவத்தில் நமக்கு ஒரு எமோஷனல் சப்போர்டாகவும், கல்லூரி காலத்தில் நல்வழிப்படுத்தும் வழிகாட்டியாகவும் இருப்பார்கள். ஆனால், ஒரு கெட்ட நட்பு, வாழ்வில் எத்தகைய மன அழுத்தத்துக்கு உங்களை ஆட்படுத்தும் என்பது அனுபவித்தவர்களுக்கே தெரியும். இதனால், வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் பலர் உண்டு. அப்படி ஒரு நட்பில் மாட்டிக் கொண்டு தவிப்போரை அதில் இருந்து தப்ப வைக்கும் வகையில் பல டிப்ஸ்களை வழங்குகிறது த காரிகை. அவை என்னென்ன என்பதைத் தற்போது காணலாம்.

கஷ்டங்களை புரிந்து கொள்ளாத நட்பு

கஷ்ட காலத்தில் தோள் கொடுக்கும் நட்பு கிடைத்தால்தான் நல்லது. ஆனால், நட்பின் வலியையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ளாது நடந்துகொண்டால் அது கெட்ட நட்பாகும். உணர்வு, போராட்டம், கஷ்டமான சூழ்நிலை, விருப்பு, வெறுப்பு ஆகியவை தெரிந்தும் அதற்கு எதிர்மறையாக நடந்து கொள்வார்கள். உதாரணமாக கையில் பணம் இல்லாத நேரத்தில், அதிகம் செலவை இழுத்துவிட்டு, உங்கள் தலையில் கட்டிவிட்டு சென்றுவிடுவார்கள்.

நட்புக்கு துரோகம்

நட்பில் எப்போதுமே நம்பிக்கைக்கு முதலிடம்தான். உங்களுடனே இருந்துகொண்டு உங்களைப் பற்றிய ரகசியங்களை பிறரிடம் கூறுதல், அதில் ஆதாயம் தேடுதல் ஆகியவை நட்புக்கு செய்யும் துரோகம் ஆகும். உங்கள் நட்பையோ, உங்கள் காதலையோ திருடிக் கொள்ளக் கூடும். இத்தகைய நட்பை ஒருபோதும் உங்கள் வாழ்வில் தொடர அனுமதிக்காதீர்கள். அது உங்களுக்கு உயிரானவர்களை உங்களிடம் இருந்து பிரித்துவிடும்.

ஒரு தலை நட்பு

காதலைப் போல் நட்பிலும் ஒருதலை நட்பு உள்ளது. நாம் ஒருவரை எப்போதுமே பெஸ்டியாக நினைப்போம். ஆனால், அவர்கள் நம்மை ஒரு சாதாரண நட்பாகக் கூட கருத மாட்டார்கள். நாம் அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்வோம். ஆனால், அவர்கள் நமக்கு அத்யாவசியமான நேரங்களில் கூட நம்முடன் இருக்க மாட்டார்கள். ஒருபுறம் மட்டுமே, நட்பு இருக்கும். மற்றோரு புறம் எந்த ஒரு உறவும் இருக்காது.

பொறாமை

நமது வெற்றியைக் கண்டு பொறாமைப் பட்டுக் கொண்டே பலரும் உடன் நட்பாக இருப்பார்கள். 100 பேர் கைதட்டும் போது உடன் சேர்ந்து கைதட்டுவார்கள். ஆனால், தனிமையில் உங்களது வெற்றியைக் கண்டு வெந்து தணிவார்கள். அவர்களது குடும்பத்திலோ, பிற நட்புக்களுடனோ அதை பொறாமையாகக் கொட்டித் தீர்த்து தங்களை ஆஸ்வாசப்படுத்திக் கொள்வார்கள்.

மரியாதை

பிறர் முன் மரியாதையே இன்றி நடத்துவார்கள். பிறர் முன் கேலி செய்வது, உருவக் கேலி, பொருளாதார சூழல், உங்களது பெற்றோரைப் பற்றி புறம் கூறுவது, கணவன், மனைவியைப் பற்றி கேலி பேசி குழுவோடு ஒன்றாக சேர்ந்து சிரிப்பது என நாளுக்கு நாள் அவமதிக்கப்படுவீர்கள். பின், தனிமையில் இருக்கும் போது, ஏதோ ஃபன்னுக்காக பேசியதாகக் கூறுவார்கள். அது கெட்ட ஃபிரண்ட்ஷிப்.

தொடர்ந்து நாடகம்

அடிக்கடி நாடகம் நடித்து உங்களை அவர்கள் பக்கமே வைத்துக் கொள்ள முயல்வார்கள். பிற நட்புக்களுடன் பேசவோ, பழகவோ விடமாட்டார்கள். ஏதேனும் நாடகம் நடத்தி உங்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையைத் தீவிரமாக பார்ப்பார்கள். இது எமோஷனல் பொசஷிவ்னஸ் எனப்படும்.

கஷ்டிஷனல் ஃபிரண்ட்ஷிப்

“இது செய்தால் தான் உன்னுடன் நட்பைத் தொடர்வேன். இல்லாவிட்டால், உன்னுடன் பேச மாட்டேன்” என எதற்கெடுத்தாலும் கண்டிசன் போடும் நட்பும் ஒரு வகை கெட்ட நட்புதான். அவர்கள் எதிர்பார்ப்பதை செய்யாவிட்டால், பேசாமல் இருப்பது, தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

பொய் நட்பு

சொன்ன சொல்லை இல்லை என்று கூறுவது, மறுப்பது, பொய் பேசுவது, மாற்றி மாற்றி பேசுவது என போலியாக இருப்பார்கள். மனிபுலேட் செய்து உங்களையே சிக்க வைப்பார்கள். குழப்பமும், சந்தேகமும் இந்த நட்பில் இருந்துகொண்டே இருக்கும். பணத்தைக் கடனாகப் பெற்றுவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அல்லது, திருப்பிக் கேட்கவே வழியில்லாதபடி அன்பைக் காட்டி உங்களை கட்டுக்குள் வைத்துக் கொள்வார்கள்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE