இறந்தவர்களின் ஆன்மாவுக்கு உங்கள் மீது கோபமா? எப்படி கண்டறிவது?

இந்து மதத்தைப் பொறுத்தவரை அமாவாசைக்கு சிறப்பு முக்கியத்துவம் எப்போதுமே உண்டு.

நமக்கு முந்தைய தலைமுறையினர் யாரேனும் இறந்திருந்தால், அவர்கள் பூமிக்கு வந்து தங்கள் சந்ததியினரை ஆசிர்வதித்து செல்லும் நாளாக இது கருதப்படுவது ஐதீகம்.

அதே நேரத்தில் அமாவாசையில் முன்னோர்களும் முறையாக அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் பலரும் கற்பிக்கும் வழிபாட்டு முறை.

எனவே தான் அமாவாசை நாளில் அன்னதானம் செய்வதும், பிண்டம் செய்வதன் மூலமும் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைந்து உங்களை வாழ்வில் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் தான், ஏற்கனவே உயிரிழந்து போன முன்னோர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்களா? சாந்தமாக இருக்கிறார்களா? மனம் குளிர்ந்து மகிழ்ச்சி தருகிறார்களா? என்பதை உணர்த்த சில அறிகுறிகள் உள்ளது. அதனை ‘த காரிகை’யின் தொகுப்பில் பார்க்கலாம்.

உயிரிழந்த தந்தைக்கு உங்கள் மீது அதிருப்தியா?

இதனை வீட்டில் நடக்கும் சில விஷயங்களை வைத்தே அறிகுறிகளாகத் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படும். ஏன் இந்த சண்டை வந்தது என்று வியக்கும் அளவுக்கு அர்ப்ப காரணங்களுக்காக சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும்.

உங்கள் வீட்டில் எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவு, பிரிவினை உள்ளிட்டவை அதிகமாக இருந்தால், அல்லது உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்குள் தேவையில்லாத சச்சரவுகள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருந்தால் அது உயிர் இழந்த தந்தையின் மனநிலை அதிருப்தியாக உள்ளது என்று காண்பிக்கக்கூடிய அறிகுறியாக காணப்படுகிறது. இதனை பித்ரு தோஷம் என அழைக்கின்றனர்.

வேலையில் தடைகள்

பல நாட்களாக ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டே இருந்தாலும் அந்த வேலையில் ஏதேனும் ஒரு தடைகள் வந்து கொண்டே தான் இருக்கும். உங்களது கடின உழைப்பிற்குப் பிறகும் பல முயற்சிகளுக்கு பின்பும் வேலை வெற்றியடையவில்லை என நீங்கள் நினைத்தால் உங்கள் தந்தை அல்லது உங்கள் முன்னோர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

திருமணத்தில் தாமதம்

உங்கள் திருமணத்தை பற்றிய விவாதங்கள் பல வருடங்களாக நடந்து கொண்டே இருந்தாலும் கூட ஏதேனும் ஒருவிதத்தில் அந்த சம்பந்தம் கெட்டு விடும். அல்லது திருமண வாழ்க்கையில் பல சிரமங்கள் இருந்தாலும் பித்ரா தோஷத்திற்கு இது காரணமாக இருக்கலாம்.

குழந்தைகள் தொடர்பான தடைகள்

உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றாலோ, தொடர்ந்து அடம் பிடித்து உங்கள் பேச்சுக்கு எதிர்மறையாக செயல்பட்டுக் கொண்டே இருந்தாலும் உங்களுடைய முன்னோர்களை மகிழ்விக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இது அறிவுறுத்தலாம்.

இழப்புகள்

சில வேலைகளை ஆண்டாண்டு காலமாக செய்து வந்தாலும் கூட, திடீரென அதில் நஷ்டம் ஏற்பட ஆரம்பிக்கும். அல்லது உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி விபத்துகளை சந்திக்க நேரிடலாம். இதுகூட பித்ரு தோஷத்திற்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் சிலர்.

எனவே இந்த பிரச்சனைகள் எல்லாம் நம்மிடமிருந்து விலகி நிற்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

முன்னோர்களை மகிழ்வித்தல் அல்லது அவர்களை அதிருப்தி படுத்தாமல் இருத்தல் என்பதே இதற்கு தேவையான முக்கியமான வழிகாட்டு முறையாக பார்க்கப்படுகிறது.

முன்னோர்களின் படத்தை வீட்டில் வைப்பது

உங்கள் வீட்டில் பித்ரா தோஷம் இருப்பதாக ஒருவேளை நீங்கள் உணர்ந்தால் உங்கள் வீட்டில் உள்ள முன்னோர்களின் புன்னகை படத்தை வைக்க வேண்டும்.

அவர்கள் சிரித்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை வீட்டில் தென்மேற்கு சுவற்றில் அல்லது மூளையில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் உங்கள் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து உங்களை ஆசீர்வதிப்பார் என்று நம்பப்படுகிறது.

காலை எழுந்ததும் அவர்களை வணங்கி ஒரு நாளை தொடங்கும் போது அந்த நாள் உங்களுக்கு நன்மை தரும். நம்பிக்கையின் படி காலையில் எழுந்தவுடன் முன்னோர்களை வணங்க வேண்டும். மற்றும் முன்னோர்களின் படங்களுக்கு மலர் மாலைகளை புதிதாக மாற்றி சமர்ப்பித்து அவர்களை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்பது உயிரிழந்த முன்னோர்களின் ஆன்மாவை திருப்திப்படுத்தும் ஒரு செயல் ஆகும்.

உங்கள் முன்னோர்களுடைய சிறப்பான நாட்களை மறந்து விடாதீர்கள். உங்கள் முன்னோர்களின் பிறந்தநாள் அல்லது இறந்த ஆண்டு போன்ற சிறப்பு நாட்களை நீங்கள் கொண்டாட வேண்டும். அந்த நாளில் ஏழை எளியவருக்கு அன்னதானம், வஸ்திர தானம் உள்ளிட்டவை செய்யும்போது உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும்.

முன்னோர்களின் ஆசிர்வாதம் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் இருக்கும் என்பதால் குடும்பமும் செழிக்கும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE