வெள்ளத்துக்குப் பின் வாகன ரிப்பேர் மற்றும் இன்சூரன்ஸ் முறைகள்

காரை ரிப்பேர் கொடுத்து விட்டு திரும்ப எடுக்கும் போது காரின் முன் பக்க விளக்குகள், பின்பக்க விளக்குகள், பவர் விண்டோ, இண்டிகேட்டர் சிக்னல்கள், பவர்லாக், இருக்கைகள், கேபின் விளக்குகள், ஏர் கண்டிஷனிங், இன்ஃபோடைன்மென்ட் சிஸ்டம், பிரேக், கிளட்ச் உள்ளிட்ட பாகங்கள் சரியாக இயங்குகிறதா என பார்க்க வேண்டும் என்றும் மெக்கானிக் கேட்டுக் கொண்டார்.

இன்சூரன்ஸ் பெற என்ன செய்ய வேண்டும்?

காரின் இன்ஷூரன்ஸ் பொருத்தவரை 2 வகைகளில் நீங்கள் கிளைம் செய்து கொள்ளலாம். ஒன்று காருக்கான ரிப்பேர் தொகையை நீங்களே கொடுத்துவிட்டு அதன் பில்களை வைத்து அதற்கான தொகையை வசூலித்துக் கொள்ளலாம். அல்லது கேஷ்லெஸ் என்ற முறையை பயன்படுத்தி நாம் பணம் கொடுக்காமல் இன்சூரன்ஸ் நிறுவனத்தார் தரப்பில் இருந்து பணத்தை வசூலித்து சர்வீஸ் சென்டரில் அல்லது மெக்கானிக் காரேஜ்களிலோ நீங்கள் காரை ரிப்பேர் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து பேசிய நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் அம்பத்தூர் கிளை மேலாளர் பிரேமலதா, ‘தற்போது பெரும்பாலான கார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆங்காங்கே கேம்ப் மூலமாகவோ அல்லது வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அணுகியோ உங்களுக்கு உதவ முன் வரலாம்” என்றார்.

”ஆனால் அதுவரை காத்திருக்காமல் உங்களது கார் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு விட்டது என்றாலே அடுத்த 24 மணி நேரத்திற்குள் உங்களுடைய இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நீங்கள் இலவச அலைபேசி எண் மூலமாகவும் ஈமெயில் மூலமாகவோ தகவல் கொடுக்க வேண்டும்” என்றும் சுட்டிக்காட்டினார்.

ஒருவேளை காரை காணவில்லை என்றால் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் தகவல் தெரிவித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

“கார் வெள்ள நீரில் எவ்வளவு தூரம் மூழ்கி இருந்தது என்பதை அறிந்து கொள்ள அதன் புகைப்படம் அவசியமாகிறது. எனவே காரின் முன் பக்கம், பின் பக்கம், உள்பக்கம் என பல இடங்களில் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். அதுமட்டுமின்றி கார் வெள்ளம் வடிந்த இடத்தில் இருந்தால் காரின் பதிவெண் என்ற நம்பர் பிளேட் தெளிவாக பதியும்படி அந்த புகைப்படம் அமைய வேண்டும். இது இன்ஷூரன்ஸ் கிளைம் செய்ய உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். புகைப்படம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் எளிதில் கிளெய்ம் ஆகாது. சர்வேயர் வந்து பார்த்து வெள்ள பாதிப்பை உறுதி செய்ய வேண்டி வரும்” என்றும் அவர் விளக்கினார்.

கார் எந்த அளவு பாதிப்புக்கு ஆளாகியுள்ளது எந்த மட்டம் வரை நீர் தேங்கி இருந்தது என்பதை அறிந்து கொள்ள கார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் மெக்கானிக் நீங்கள் இந்த புகைப்படத்தை காட்டி தெரிவிக்கலாம்.

தற்போது போர்க்கால அடிப்படையில் இன்சூரன்ஸ்களை கிளியர் செய்ய தங்களுக்கு உத்தரவு வந்திருப்பதாகவும் பிரேமலதா குறிப்பிட்டார்.

இதுபோன்ற அசம்பாவிதங்களில் அதிகம் செலவாவதைத் தடுக்க நீங்கள் இன்சூரன்ஸ்-ஐ உரிய நேரத்தில் ரென்யூவல் செய்வது மிகவும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெள்ளத்தில் சிக்கிய காரில் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக் கூடாது என்பதைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

வெள்ளம் வடிந்த பின் காரை எப்படி சுத்தப்படுத்த வேண்டும்? எப்படி பராமரிக்க வேண்டும் என்பதைக் காண இங்கு கிளிக் செய்யவும்.

Facebook
Instagram
YOUTUBE