தமிழகத்தில் கொண்டாடப்பட்ட உண்மையான பொங்கல். நாம் மறந்தது என்ன?

இந்த தலைமுறையில் நாமும் பொங்கலை கொண்டாட தான் செய்கிறோம். ஆனால் அந்த காலத்தில் பொங்கலை எப்படி எல்லாம் கொண்டாடினார்கள் என தெரியுமா?

ஏதோ மறந்து விட்டோம் என பேச்சுக்கு சொல்லி தப்பிக்க முடியாது. காரணம் வழி வழியாக தலைமுறையாக கற்பித்த பொங்கலின் வழிபாட்டு முறையை நாம் மறந்து விட்டோம் என்றால், அது ஒரு சங்கிலித் தொடரின் துண்டிப்பாகவே பார்க்கப்படும்.

நமது குழந்தைகளுக்கு பொங்கலை எப்படி கொண்டாடுவது என சில சம்பிரதாயங்களை நாம் கொண்டாட்டத்தின் மூலம் கற்றுக் கொடுக்க மறுக்கிறோம் என்று அதன் பொருளாகும்.

ஆயிரமாயிரம் காலமாக கொண்டாடப்பட்ட பொங்கலை தற்போது கேஸ் அடுப்பைப் பற்ற வைத்து, வெந்த அரிசியில் சர்க்கரை போட்டு அள்ளித் தின்றால் அது பொங்கல் விழாவாக ஆகாது.

அதை கொண்டாட ஒரு சில முறையும் சில காரணங்களும் உள்ளன. அதை தற்போது பார்க்கலாம்.

தமிழகத்தில் 4 நாட்கள் ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றால் அது தமிழர்களின் பொங்கல் பண்டிகைதான்!

எப்போதும் ஜனவரி 14 ம் தேதி வரும் தைப்பொங்கல் இந்த ஆண்டு பூமி சூரியனை சுற்றும் சுழற்சியின் காரணமாக ஜனவரி 15 அன்று தைமாதம் பிறந்துள்ளது.!

தை 1 ம் தேதிக்கு முன் வருவது போகிப்பண்டிகை! அதாவது மார்கழி திங்களின் இறுதி நாள்! வீட்டில் மூலிகைகள் கொண்ட காப்பு கட்டுவார்கள். அதனால், விசப்பூச்சிகளால் துன்பம் வராமல் இருக்கவும், தீய சக்திகள் அந்தக்கால நம்பிக்கையான பேய் பிசாசு உள்ளிட்டவை வராமல் இருக்கும் என்பதும் அவர்கள் நம்பிக்கை.

மருத்துவ குணம் கொண்ட ஆவாரம்பூ, வேப்பிழை, பீழைப்பூவை சேர்த்து கட்டி, வீடுகளின் முன், தோட்டத்தில் தாழ்வாரம், மாட்டுத் தொழுவம், அம்மிக்கல், சாமி அறை, இப்போது வாகனங்களுக்கும் கட்டுகின்றனர். பின் இரவு சங்கராத்திக்கு கொங்கு மண்டலத்தின் பிரியாணி போன்று பிரசித்தியான அரிசிம் பருப்பு சாதமும், அரசாணிக்காய், அவரைக்காய் உள்ளிட்ட பொறியலும் செய்து சாமி படங்களின் முன் வைத்து வழிபடுவார்கள்.

போகிப்பண்டிகையன்று வீட்டில் உள்ள பழைய ஆகாத நமக்கு உபயோகம் இல்லாத பொருட்களை தீயில் இட்டு கொளுத்தும் பழக்கமும் இருந்தது. ஆனால், தற்போது டயர், பிளாஸ்டிக்கைப் போட்டு சுற்றுச் சூழலுக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் கேடு விளைவிக்கும் சூழல் உண்டாவது வருத்துத்துக்கு உரியது. பனை ஓலைகளைக் கொளுத்தி சொக்கப்பனை கொளுத்துவதாக கூறுவார்கள்.

தை மாதம் 1 ம் தேதியன்று வயக்காடுகளில் அறுவடையான புதுநெல்லை உரலில் குத்தி உமியை நீக்கி, இருந்து புத்தரிசையை எடுத்து பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைத்து வழிபடுவார்கள். வெளிநாடுகளில் கொண்டாடும் தேங்க்ஸ் கியூவிங் போன்ற இந்தப் பழக்கம், முதலில் சூரியனுக்கு நன்றி சொல்லும் வகையில் கொண்டாடுவார்கள்.

விவசாயிகளுக்கு சாதி, மத, பேதமின்றி சூரியன் தான் கடவுள்! சூரியன் இல்லாவிட்டால் இந்த பூமியில் எந்த உயிரினமும், உழவும் விளைச்சலும் இல்லை. எனவே, சூரியனையே கண்கண்ட தெய்வமாக வழிபட்டார்கள்.

மகாபாரதத்தில் பீஷ்மர் அர்ச்சுணனின் அம்புகளின் மேல் மரணப்படுக்கையில் இருக்கும்போது, அவரின் தை முதல் தேதியை அவரது மரண நாளாகத் தேர்வு செய்வார். தை முதல் நாள் அன்று தான் சூரியன் தன் உத்திராயணத்தில் தொடங்கும். தென் திசையில் இருந்து வட திசை நோக்கி நகர்தல் உத்திராயணம்.

சூரியனின் வட திசை பயணம் ஆனி என்ற ஜூன் மாதத்தில் முடிந்து பின் தஷியாயணம் என்ற தென் திசை நோக்கி திரும்புகிறது. இது மார்கழியில் முடிந்து மீண்டும் வடக்கு நோக்கி செல்வதே ஓராண்டு என்கிறோம். மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 22 -ல் தான் சூரியன் சரியாக கிழக்கில் நமக்குத்தெரியும் நாள் ஆகும். இந்த 2 நாள் மட்டுமே சூரியன் நமக்கு கிழக்கில் தெரியும். மீதி 363 நாட்களிலும் சூரியன் வட கிழக்கிலும், தென் கிழக்கிலும் நமக்கு தெரியும்.

தை பிறந்த 2-ம் நாள் தமிழர்கள் தங்கள் விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்த மாடு, காளைகளுக்கு நன்றி செலுத்த அவற்றைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டுவார்கள்! பின் மாலை நேரத்தில் மாட்டுச்சாணத்தால் தெப்பக்குளம் கட்டி அதில் தண்ணீர் ஊற்றி, முடக்கத்தான் கொடியினை குறுக்கே கட்டி மாட்டை தாண்டவைப்பார்கள்!

பின் மாட்டுக்கு பொங்கல் வைத்து, அந்த பொங்கல் மற்றும் பழத்தை மாட்டுக்கு கொடுத்து சாப்பிட வைப்பார்கள்! ஆண்டு முழுவதும் தனக்கு உழைத்த மாட்டுக்கு நன்றி செலுத்தும் பண்டிகையாகும்.

தைப்பொங்கலின் 3-ம் நாள் காணும் பொங்கலாகும். காணும் பொங்கலை கொண்டாடுவது எப்படி என இந்தப் பதிவை கிளிக் செய்து காணுங்கள்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE