ஓலையக்கா கொண்டையிலே பாட்டு தெரியுமா? காணும் பொங்கல இப்டித்தான் கொண்டாடனும். .
காணும் பொங்கல் என்பது வீட்டிற்கும் மனதுக்கும் வளமும் மன நிம்மதியும் சேர்க்கும் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கான பண்டிகையாகும். ‘பெண் குழந்தைகளுக்கு பூப்பொங்கல் வைப்பார்கள். அந்தக்காலத்தில் பொங்கலுக்கு பலகாரமே தேங்காய் பர்பியும், முறுக்கும் தான்!
இதனை கிராமமே வீட்டில் சாப்பிடாமல் கிராமத்தை சுற்றி வந்து இந்தப் பாடலைப் பாடுவார்கள். கொலை கொலையா முந்திரிக்கா பாட்டு நியாபகம் இருக்கா? அப்டி இந்தப் பாட்ட படிச்சு பாருங்க.. .
“ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலை….யக்கா ஓலை
ஓலை…யக்கா ஓலை
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்
மஞ்சள் அரைப்பணமாம்; மைகோதி காப்பணமாம்
மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
மஞ்சக் கொறைச்சதுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்
சீலை அரைப்பணமாம் சித்தாடை காப்பணமாம்
சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா
சீலை கொறச்சதுன்னு சிணுங்குறாளாம் ஓலையக்கா
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை
காங்கேயச் சந்தையில கண்கொள்ளாக் கடைவரிசை
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா
கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா
கையிருப்போ காப்பணந்தேன்
கடைச்செலவோ வெகுகனந்தேன்
கையிருப்போ காப்பணந்தேன்
கடைச்செலவோ வெகுகனந்தேன்
கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா
கைக்காசு பத்தாமே கலங்கி நின்னா ஓலையக்கா
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலை…யக்கா ஓலை
ஓலை…யக்கா ஓலை
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
தாழம்பூ சித்தாட தலை நெறையா முக்காடு
ஓலை…யக்கா ஓலை
ஓலை…யக்கா ஓலை” என பாட்டுப்பாடி குளம், ஆறு, பள்ளத்தினை சுற்றிவந்து அருகில் உள்ள மரத்தினடியில் கூட்டாக அமர்ந்து இனிப்பு, முறுக்குகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு சாப்பிடுவார்கள்!
இந்தப் பாட்ட புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமி பாடின பாட்டோட வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
பின் மாலையில் வீட்டிற்கு வருவார்கள். பின் மார்கழி மாதம் முழுவதும் தினமும் வீட்டின் முன் கோலம் போட்டு சாணத்தால் பிள்ளையார் பிடித்து அதன் மேல் அரசாணிப்பூவை வைத்து வழிபட்ட 30 பிள்ளையாரையும் ஒரு கூடையில் வைத்து பிள்ளையார் கோவிலைச்சுற்றி வந்து , அந்த பிள்ளையாரை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டு தங்கள் மகிழ்ச்சியை நட்பை பகிர்ந்து கொள்வார்கள்!