கொளுத்துற வெயில்ல வெக்கை தாங்கலன்னு ஏசி வாங்குறீங்களா?

தற்போது இருக்கும் வெயில் காலத்தில் வழக்கத்தை விட அதிகமான வெயில் வரலாறு காணாத அளவு என ஹிட் அடித்துக் கொண்டே போகிறது.

மக்களும் சமாளிக்க முடியாமல் இரவில் தூங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

ஏற்கனவே வெயில் காலத்தில் ஏசி இல்லாமல் அறையை குளுமையாக வைத்திருப்பது எப்படி என்ற டிப்ஸ் ‘த காரிகை’-யில் வெளியாகியுள்ளது அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அதையும் மீறி நீங்கள் ஏசி வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு வந்து விட்டீர்கள் என்றால் ஏசி வாங்குவதற்கு முன் சில விஷயங்களை நன்றாக கவனித்து வாங்க வேண்டும்.

எந்த அறைக்கு எந்த மாதிரியான ஏசி வாங்க வேண்டும்? மின்சார செலவு மிச்சப்படுத்துவது எப்படி? இன்வெர்ட்டர் ஏசி வாங்க வேண்டுமா? சாதாரண ஏசி வாங்க வேண்டுமா? பிராண்டை தேர்வு செய்வது எப்படி? என்ன பல சந்தேகங்களும் இந்த டிப்ஸ் பகுதியில் உங்களுக்கு தெளிவு தரும்.

முதலில் ஏசி வாங்கும் முன் உங்கள் வீட்டில் சூழல் அதன் அளவு கணக்கில் கொள்ள வேண்டும்.

150 சதுர அடி அளவுள்ள அறைக்கு ஒரு டன் ஏசி வாங்கலாம்.

150 முதல் 300 சதுர அடி கொண்ட அறைக்கு 1.5 டன் ஏசி வாங்க வேண்டும்.

300 முதல் 550 சதுர அடி கொண்ட அறைக்கு 2 டன் ஏசி வாங்க வேண்டும்.

550 சதுர அடிக்கு மேல் அதிக உயரம் கொண்ட கட்டிடமாக இருந்தால் இரண்டரை டன் முதல் அந்த அறையில் அளவுக்கு ஏற்ப ஏசியை தேர்வு செய்து வாங்க வேண்டும்.

எந்த பிராண்ட் வாங்க வேண்டும்?

பிராண்டை பொறுத்தவரை முழுவதும் உங்கள் சாய்ஸ். ஆனால், ஏற்கனவே ஏசி வாங்கி பயன்படுத்தியவர்களின் ரிவ்யூ கேட்டு வாங்கலாம் அல்லது ஆன்லைனில், கூகுளில் அந்த பிராண்டின் ஏசி பற்றிய நேர்மையான ரிவியூக்களை தெரிந்து கொண்டபின் பிராண்டை தேர்வு செய்ய வேண்டும்.

இன்வெர்ட்டர் ஏசி

இன்வெர்ட்டர் என்றால் பெரும்பாலும் மின்சாரம் இல்லாத நேரத்தில் மின் சாதனங்களை இயங்கச் செய்ய இருக்கும் ஒரு சாதனம் ஆகும். ஆனால் ஏசியைப் பொருத்தவரை இன்வெர்ட்டர் என்பது அவுட்டோர் யூனிட்டில் உள்ள ஃபேன் இன் சுழற்சியை கண்ட்ரோல் செய்து அதன் மூலம் மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவுவது ஆகும்.

ஏசி மாட்டும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை

உங்கள் வரை 11 க்கு 16 ஆக இருந்தால் நீங்கள் 11 அடி அகலத்தில் தான் ஏசி காற்று வரும் வகையில் மாட்ட வேண்டும்.

ஏசியை மாட்டிவிட்டு அதற்கு நேர் கீழாக கட்டில் இருக்கும் வகையில் இருந்தால் கட்டில் படுத்து இருக்கும் போது உங்களை குழுமை அடைய நேரமாகலாம்.

எனவே ஏசியின் ஏர் ஃப்ளோ ஆனது நேரடியாக கட்டிலுக்கு படும்படி மாட்ட வேண்டும்.

மாறாக நீளத்தில் மாட்டினால் அந்த காற்று அறை முழுவதும் குளிர்விக்க நீண்ட நேரம் ஆகலாம்.

ஏசி மாட்டும் அறைக்கும் மேலே வீடு இருந்தால் உங்கள் அறை குளிராகும் நேரம் குறைவாகும். ஆனால், மேலே வீடு கட்டிடம் எதுவும் இல்லாமல் இருந்தாலோ, கூலிங் டைல்ஸ், கூலிங் பெயிண்ட் போடாமல் இருந்தாலோ மரம் போன்ற நிழல் எதுவும் இல்லாமல் இருந்தாலோ உங்கள் அறை குளிர்விக்க நேரம் ஆகும்.

பகல் நேரத்தில் வெளியில் வெயில் அதிகமாக இருந்தாலும், அறை குளிர்வாக தாமதமாகும்.

ஏசி வாங்கும் போது பைவ் ஸ்டார் ரேட்டிங், மின் சிக்கனம் உள்ளிட்டவற்றை பார்த்து வாங்க வேண்டும். விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக ஸ்டார் ரேட்டிங் குறைவாக உள்ள ஏசியை வாங்கிவிட்டு பின்பு அந்த பட்ஜெட்டை மின்கட்டணத்தில் அதிகமாக கொடுக்கும்படி ஆகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE