“அதெப்புடி நீ அப்புடி சொல்லலாம்”-தமிழன்னா கேவலமா? -தான்யாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தான்யா பாலகிருஷ்ணனின் பழைய பேஸ்புக் கமெண்ட் ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி தமிழக கர்நாடக நடிகர்களிடையே பிரச்சனையை கிளப்பியுள்ளது.

விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள லால் சலாம் படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

படத்தின் ஆடியோ லாஞ்சின் போது எனது அப்பா சங்கி அல்ல என்று ஐஸ்வர்யா கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சை ஓய்வதற்குள் மீண்டும் ஒரு சர்ச்சை ஆன்லைனில் கிளம்பியுள்ளது.

இப்படத்தில் தான்யா பாலகிருஷ்ணன் என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ராஜா ராணி, ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் ஃபைனலில் நுழைய இருந்தபோது ஒரு போஸ்ட் ஒன்றை பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். அதில் சென்னை ஆட்கள் அதாவது “தமிழர்கள் கர்நாடகாவிடம் தண்ணீருக்கும் மின்சாரத்துக்கும் பிச்சை கேட்கும் நபர்கள். அவர்கள் பெங்களூருக்கு வந்து அந்த நகரத்தை அசுத்தப்படுத்துகின்றனர்” என கூறியிருந்தார். பின் சர்ச்சையானதும் அந்த பதிவை அவர் நீக்கியும் இருந்தார்.

இப்படி ஒரு வெறுப்பை உமிழும் பேச்சை கூறிவிட்டு அவர் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க கூடாது என்ற பிரச்சினை வந்தபோது, தான் தமிழ் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியிருந்தார்.

இருந்த போதும் ராஜா ராணி, கார்பன், யார் இவன், அயம் சஃபரிங் ஃப்ரம் காதல் உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் அவர் தொடர்ந்து நடித்து தான் வருகிறார்.

தற்போது லால் சலாம் படத்தில் மீண்டும் அவர் நடித்திருப்பதால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழர்களைப் பற்றி இவ்வளவு இழிவாக பேசிய நடிகையை, எதற்காக தமிழ் படத்தில் நடிக்க வைக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“ஒருவேளை இது உண்மையாக இருந்தால், இவ்வளவு ரூடாக தமிழர்களிடம் நடந்து கொண்டு எப்படி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் தமிழ் படங்களில் நடிக்கிறீர்கள்? நீங்கள் வேண்டுமானால் பிச்சை எடுங்கள், நாங்கள் கொடுக்கிறோம்” என்று விஜே பார்வதி கமெண்ட் கூறியிருக்கிறார்.

கர்நாடகாவை பற்றிய இவ்வளவு கேவலமாக பேசிய ஏதேனும் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர், தொடர்ந்து கன்னட படங்களில் நடிக்க முடியுமா? அதை அவர்கள் விடுவார்களா? சித்தார்த் நடித்த படத்தின் பிரமோசனை காவிரி நீர் பிரச்சனைக்காக கன்னடர்கள் பாதியிலேயே நிறுத்தி பிரச்சனை செய்ய வில்லையா? என்று சமூகவலை தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இவ்வளவு கேவலமா பேசிவிட்ட அந்த பொண்ண மறப்போம் மன்னிப்போம் என்று விட்டுட்டீங்களா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதுமட்டுமின்றி பாகுபலி படத்தில் நடித்த சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் தான் அந்த படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய அனுமதிப்போம் என்று கன்னடர்கள் பிரச்சனை செய்த போது, சத்யராஜ் அவர்கள் வருத்தம் தெரிவிக்க செய்ய வைத்தனர் அல்லவா? ஆனால் தமிழர்களைப் பற்றி இவ்வளவு மட்டமாக பேசிய பெண்ணை ஹீரோயின் ஆக்குவதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE