இனி ஹார்லிக்ஸ்சும் பூஸ்டும் ஹெல்த் ட்ரிங்க்ஸ் இல்லையாம்!

பூஸ்ட அப்படியே கையில் கொட்டி அள்ளி சாப்பிடும் குழந்தைகள் ஏராளம். இதைத்தான் செய்து வீட்டில் அம்மாவிடம் அடி வாங்கி இருப்பார்கள் பல 90’s கிட்கள்.

அப்படி தினம்தோறும் விளையாடச் செல்பவர்களுக்கும் சரி அல்லது வீட்டில் படிக்கும் குழந்தைகளுக்கும் தாய்மார்கள் இதனை பாடல் கலந்து கொடுத்து ஊக்குவிப்பதை பார்த்திருப்போம்.

சமீபத்தில் போன்விட்டா ஹெல்த் ட்ரிங்க்ஸில் அயல்நாடுகளில் கலப்பதை விட அதிக அளவு சர்க்கரையை அந்நிறுவனம் இந்தியாவில் கலந்து விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது, இதற்கு அடுத்த அடியாக ஹார்லிக்ஸ்-ஐயும் பூஸ்டையும் ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்ற கேட்டகரியிலிருந்து நீக்கி உள்ளது அரசு.

என்ன ஆச்சு? முழு விவரத்தை தற்போது பார்க்கலாம்.

இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் ஆனது ஏப்ரல் 2-ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதில் பால் மற்றும் தானியங்களின் கலவையை கொண்ட உணவுகளை ஹெல்த் ட்ரிங்க்ஸ் என அறிவிக்க கூடாது என்று கூறியது.

இந்த உத்தரவை அடுத்து ஹார்லிக்ஸ் பூஸ்டும் தங்களது பாக்கெட்டுகளில் ஹெல்த் ட்ரிங்க்ஸ் என குறிப்பிட்டிருந்த பெயரை ஃபங்க்ஷனல் நியூட்ரிஷனல் ட்ரிங்க்ஸ் என்று மாற்றி உள்ளது.

ஃபங்ஷனல் நியூட்ரிஷன் ட்ரிங்க்ஸ் என்றால் என்ன?

இது தாவரங்கள், விலங்குகள், கடலின் நுண்ணுயிர் கூறுகளில் இருந்து புரதம் உள்ளிட்ட அத்தியாவசியமான சத்துக்களை எடுத்து அதில் பானங்களாக தயாரிக்க பயன்படுத்தும் பொருளைத்தான் பங்க்ஷனல் நியூட்ரிசன் ட்ரிங்க்ஸ் என்பார்கள்.

என் சி பி சி ஆர் எனப்படும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையமும் இந்த ஹெல்த் ட்ரிங்க்ஸ் கேட்டகிரி முடிவை அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில் பால் தானியம் மற்றும் மால்ட் பானங்களை ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்ற வகையில் குறிப்பிடக் கூடாது என்று கூறியுள்ளது.

இது குறித்து, ஏப்ரல் 24ல் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரித்தேஷ், இந்த லேபிள் மாற்ற அறிவிப்பை வெளியிட்டார்.

மத்திய வணிகர் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அனைத்து இ-காமர்ஸ் தளங்களிலும் விற்கப்படும் பானங்களில் குறிப்பிட்டுள்ள ‘ஹெல்த் ட்ரிங்க்ஸ்’ என்ற பெயரில் விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவிற்கு பிறகு இந்த பெயர் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE