பிசிஓஎஸ் உள்ள பெண்களிடம் எடை அதிகரிப்பு காணப்படும். இதற்கு உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையின்மையே முக்கியக் காரணம். இது அவர்களுக்கு மாதவிடாய் கால மாற்றத்தை ஏற்படுத்தும். பிசிஓடி என்பது சினைப்பையில் உள்ள நீர்க்கட்டி எனப்படும்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிக அளவில் மனநிலை மாற்றங்களும் ஆரோக்கியமற்ற உணவுகள் மீதான ஏக்கமும் அதிகம் இருக்கும். இதனால் பெண்கள் அதிகமாக சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மேலும், இந்த காலகட்டத்தில், பெண்களுக்கு இன்சுலின் ஹார்மோன்கள் போதுமான அளவு உற்பத்தி ஆகாது.

இதற்கு தீர்வு, ஆரோக்யமான வாழ்க்கைமுறையும், ஆரோக்யமான உணவுகளும்தான். பிசிஓஎஸ் உள்ள பெண்கள் சில ஆரோக்கியமான உணவுகளைச் சேர்த்துக் கொண்டால், அது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும். அது மட்டுமல்லாமல், பிசிஓஎஸ் காரணமாக அதிகரித்த எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

அதற்கு உங்கள் நாளை ஆரோக்ய பானத்தோடு தொடங்க வேண்டும். பிசிஓஎஸ் உள்ள பெண்களின் எடையைக் கட்டுப்படுத்த உதவும் 5 காலை பானங்கள் இதோ. . .

ஒரு பிடி கீரை, ஒரு பச்சை ஆப்பிள், கோஸ், ஒரு சிறிய துண்டு இஞ்சி, அரை வெள்ளரி தண்ணீர் ஆசேர்த்து அரைக்கவும். அதில் தேவைப்பட்டால் எலுமிச்சை சாறும், தேனும் சேர்க்கலாம். இது பிசிஓஎஸ் -ஐ நிர்வகிக்கவும் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவும்.

ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை வெந்நீரில் கலந்து, மிளகு பொடி சேர்க்கவும். இதனை தினமும் பாலில் கலந்தும் பருகலாம். அதன் பிறகு இதை குடிக்கவும். மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஹார்மோன் சமநிலைக்கு உதவும்.

புதினா இலைகளை 5-10 நிமிடங்கள் சூடான நீரில் ஊற வைக்கவும். அதை வடிகட்டி குடிக்கவும். புதினா தேநீர் பிசிஓடி -ஐ அதிகரித்து நிலைமையை மோசமாக்கும் ஆண்ட்ரோஜனை குறைக்க உதவுகிறது.

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இது, மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கவும். பிசிஓடி உடன் தொடர்புடைய இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்த உதவும்.

இத்துடன் தினமும் 3 கிமீ ஆவது நடந்தீர்கள் என்றால் ஆரோக்யமாக வாழ உங்களுக்கு உதவும். நீங்கள் குழந்தை பெற முயற்சிக்கிறீர்கள் என்றாலும் இந்த டிப்ஸ் உங்களுக்கு கைமேல் பலன் தரும். தேவைப்படுவோருக்கும் பகிரவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE