சம்பளதாரருக்கு இணையானது இல்லத்தரசிகளின் வீட்டு வேலை

கடந்த வெள்ளி அன்று நடந்த வழக்கில் ஒன்று உச்ச நீதிமன்றம் இல்லத்தரசிகளின் வேலையை பெருமைப்படுத்தும் விதமாக பேசி உள்ளது. ஒரு வீட்டில் அலுவலகத்துக்கு சென்று சம்பாதிக்கும் ஒரு நபருக்கு என்ன மதிப்பு தேவைப்படுகிறதோ, அதே மதிப்பு இல்லத்தரசிகளுக்கும் எவ்வித குறைவும் என்று வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியன் காந்த் கே வி விஸ்வநாதன் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

வீட்டில் தனது குடும்பத்தினருக்காக வேலை செய்யும் இல்லத்தரசிகளின் பணியானது மிகவும் உயரியது என்றும் அதனை பணத்தால் மதிப்பிட முடியாத ஒன்றும் என்றும் கூறியுள்ளனர்.

இல்லத்தரசிகளின் வேலை, உழைப்பு, தியாகம் உள்ளிட்டவை பற்றியும் அதில் கூறி உள்ளனர்

என்ன வழக்கு?

2006ல் உத்தரகாண்டில் நடந்த ஒரு சாலை விபத்தில் பெண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் வாகனத்தை கொண்டு இடித்த நபர் இன்ஷூரன்ஸ் செய்யாததால் அவர் உயிரிழந்தவரின் கணவருக்கும் அவருடைய மைனர் மகனுக்கும் 2.50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது

இந்த நிதி போதாது என்று குடும்பத்தினர் உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அதனை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் 2017-ல் நிராகரித்துவிட்டது

அந்த உத்தரவில் ’இல்லத்தரசி’ எனக் குறிப்பிட்டு அவரது வாழ்க்கை எதிர்பார்ப்பு, குறைந்தபட்ச வருவாய் ஆகியவற்றை கணக்கில் கொண்டு தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பில் மாற்றம் ஏதுமில்லை என்றும் உத்தரகாண்ட் நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது.

இதை எதிர்த்து குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் அமர்வு உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தை கண்டித்தது.

“இல்லத்தரசியாக இருக்கும் பெண் தின கூலி வேலைக்கு செல்பவரை விட குறைவானவரா?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பி, ”உயர்நீதிமன்றத்தின் இந்த போக்கு ஏற்க முடியாதது” என்று கூறியுள்ளது

அதுமட்டுமின்றி உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிமன்றங்களின் தீர்ப்பில் தவறுகள் இருப்பதாகவும் மோதிய வாகனம் தவறு, இறந்த பெண்ணின் வயது தவறு, இறந்த பெண்ணின் மகனுடைய பருவம் தவறு என்று அடுக்கடுக்கான தவறுகளையும் சுட்டிக்காட்டினர்.

இழப்பீட்டை ரூ.6 லட்சமாக உயர்த்தி, அதனை 6 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

2011 கணக்கெடுப்பின்படி 159.85 மில்லியன் பெண்கள் இல்லத்தரசிகளாக உள்ளனர்.

ஆனால் அவர்களின் உழைப்பு, தியாகம்,பணி உள்ளிட்ட எதற்குமே பணத்தால் மதிப்பிட முடியாத அளவு மதிப்பு மிக்கவர்கள் என்றும் ஏற்கனவே பலமுறை தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE