ஹைஹீல்ஸ் அணிய ஆசையா? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க. .
பெண்கள் பலருக்கு ஹை ஹீல்ஸ் அணிவது பிடித்து. முன்பெல்லாம் மேற்கத்திய ஆடைகளுக்குத்தான் ஹை ஹீல்ஸ் அணிந்து வந்த பெண்கள், தற்போது சுடிதார் டாப், புடவை என எது அணிந்தாலும் அதற்கு ஏற்றார் போல ஹை ஹீல்ஸ்களை வாங்கி அணிகின்றனர். “ஹை ஹீல்ஸ் அணிந்தால் பின்புற பகுதியின் ஷேப் மாறிவிடும்” எனக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இது உண்மையா? என்பதை தற்போது பார்ககலாம்.
நீண்ட நேரம் ஹை ஹீல்ஸ் அணிவது உங்கள் கால்களின் வடிவத்தை மாற்ற வாய்ப்புண்டு. கால் தசைகளை சுருக்கவும், முட்டிக்கு கீழ் பின்புறத்தில் உள்ள தசைநார்களை இறுக்கமடையவும் செய்லாம். இதனால் வலி, அசௌகரியம் ஏற்படும்.
ஹை ஹீல்ஸ்களை தொடர்ந்து உபயோகிப்பதால், கால்களில் வலி ஏற்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் பலர் இதனை பழகிப்போன ஒன்றாக மாற்றி விடுகின்றனர். கால்களில் உள்ள தசைகள் இறுகி, போடும் உடைகளுக்கு ஏற்ப கச்சிதமாக மாறலாம். ஆனாலும், ஹை ஹீல்ஸ் அணிவதால் ஏற்படும் வலிகளை தவிர்க்க சில டிப்ஸ்கள் உள்ளன.
ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிகையில், கால் தசை அழுத்தம் குறைக்க ஸ்ட்ரெட்சிங் செய்யலாம்.
பின்னங்காலை உயர்த்தி, குறைப்பது போன்ற பயிற்சிகளைச் செய்யலாம்.
படியின் விளிம்பில் நின்று உங்கள் கால் முனைகளால் உடலை உயர்த்தி, பின் மெதுவாக கீழே இறக்கவும்.
குதிகால் நடைபயிற்சிக்கான வலிமையை உருவாக்க உதவும்.
சமநிலையை பராமரிக்க, ஒற்றைக்காலில் நிற்பது, யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
வெளியில் ஹீல்ஸ் அணிந்து செல்லும் முன், வீட்டில் ஹீல்ஸ் அணிந்து சில ஆசனங்களை செய்யலாம்
தோரணையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உங்கள் உடலைப் பயிற்றுவிக்கலாம்.
தொடர்ந்து ஹீல்ஸ் அணிவது நம் உடலின் தோரணை மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம்.
ஹை ஹீல்ஸ் அணிகையில் முன்னோக்கி சாய்ந்து, முதுகை அதிகமாக வளைக்க முற்படுகிறோம்.
இந்த சிக்கலை தீர்க்க ஒரு பயனுள்ள ஒரு பயிற்சிதான் ஸ்குவாட்ஸ்
தோள்பட்டை அகலத்துக்கு உங்கள் கால்களை வைத்து ஒரு சுவருக்கு எதிராக நில்லுங்கள்
நீங்கள் உட்கார்ந்த நிலையில் இருக்கும் வரை கீழே சரிந்துகொள்ளவும்
சுவருக்கு எதிராக உங்கள் முதுகை வைத்து, நாற்காலியில் அமர்ந்திருப்பது போல் இருங்கள்.
இந்த டிப்ஸ்களைப் பின்பற்றினால், இனி அசவுகரியம் இன்றி ஹீல்ஸ்களை அணிந்து செல்லலாம். ஆனாலும், என்ன இருந்தாலும் ஹை ஹீல்சின் போது எலும்புகளும், நரம்புகளும் அழுத்தத்துக்கு உள்ளாவது உண்மை என்பதை மறுப்பதற்கில்லை. கவனம்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.