மழை, பனியால் சளி தொல்லையா…! எளிமையான ஸ்நாக்ஸ் மூலம் விரட்டலாம்…!

அடித்து பெய்த மழை, அதை தொடர்ந்து கொட்டும் பனி என தொடர் காலநிலை மாற்றத்தினால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பலால் பாதிக்கப்படுவதுண்டு.  இந்த பிரச்சனை சிட்டி  முதல் பட்டிதொட்டி வரை உள்ளது. சளியை விரட்ட குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது என்பது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் வானவில்லை வில்லாக வளைக்கிற கதையாக தான் இருக்கிறது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில், சளி தொல்லையை போக்க, அடம்பிடிக்கும் குழந்தைகள் இன்னும்  வேணும் என்று கேட்டு சாப்பிடும் வகையில் உள்ள ஒரு அட்டகாசமான ஸ்நாக்ஸ் தான் நீர் கொளுக்கட்டை.

கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :

  1. இட்லி அரிசி (or ) புழுங்கல் அரிசி
  2. நெய்
  3. சீரகம்
  4. மிளகு

செய்முறை :

  • தேவையான அளவு இட்லி அரிசியை எடுத்துக் கொண்டு 3 முதல் 4 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.
  • அரிசி ஊறிய  பிறகு, நன்றாக தண்ணீர் தெளித்து, இட்லி மாவு பதத்திற்கு அரைக்காமல் அரிசியை 90 சதவிகிதம் மட்டுமே அரைக்க வேண்டும்.
  • அரைத்த அரிசி மாவை, ஒரு வெள்ளை துணியில் கட்டி, ஈரப்பரத்தை முற்றிலும் உறியவைக்க வேண்டும்.
  • குளோப் ஜாமூன் மாவு பதத்திற்கு வந்தவுடன் அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • இதற்கிடையே, இட்லி பானையில் தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்.
  • கொதிக்கும் தண்ணீரில் உருட்டி வைத்த மாவு உருண்டைகளை ஒன்றின் பின் ஒன்றாக போட்டு வேகவைக்க வேண்டும்.
  • 5 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரில் வெந்துக்கொண்டிருக்கும் மாவு உருண்டைகளில் சிறிதளவு உப்பு சேர்த்து, குறைவான நெருப்பில் மீண்டும் 15 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.  
  • நன்றாக வெந்த கொழுக்கட்டைகளை, தண்ணீர் வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  •  ஒரு கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி, அது சூடானதும் மிளகு, சீரகத்தை இடித்து அதில் போட வேண்டும்.
  •  பின்னர் தனியாக எடுத்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை அதில் கொட்டி 2 முறை கிளறி பரிமாறினால் சுவையான, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெடி.
  • கடாயில் ஒட்டி இருக்கும் மிளகு, சீரகத்தில் வேக வைத்த தண்ணீரை ஊற்றி சூப்பாகவும் பருகலாம்.  

வெறும் 4 பொருட்களை வைத்தே, எளிய முறையில் சளியை விரட்டி அடிக்கலாம். மாலை நேரங்களில் நொறுக்கு தீனிக்கு பதிலாக சுவையான சிற்றுண்டி வழங்குவதுடன் சளி பிரச்சனைக்கும் தகுந்த தீர்வு கொடுக்கும் இந்த ஒற்றை கல்லில் இரட்டை மாங்காய் தான் நீர் கொழுக்கட்டை.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE