HBD பெரியார்! அவர் பெண்களுக்கு என்ன செஞ்சார் தெரியுமா?

0

பெரியார் வாழ்ந்த காலகட்டத்தில் சீர்திருத்தங்களாக சதி என்னும் உடன்கட்டை எதிர்ப்பு, விதவை மறுமணம், குழந்தைமண எதிர்ப்பு ஆகியவை இருந்தன.

ஆனால் திருமண உறவில் ஒரு ஆணால் பெண் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார் அதற்கு அப்பால் உள்ள பிரச்சனைகள் என்ன என்பதை பல சீர்திருத்தவாதிகளும் பேச மறுத்த காலத்தில் அதற்காக அமைப்புசாரா ஆலோசனை மையம் ஒன்றை நடத்தினார் பெரியார்.

திருமணம் என்கிற அமைப்புக்கு வெளியே பெண்கள் தனித்து வாழ தைரியமும் வசதிகளும் அவை கொடுத்தன.

  • குடும்ப வன்முறை பாலியல் கொடுமைகளால்வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள், அநாதரவான பெண்கள் தங்குவதற்காக ஒரு விடுதியையும் நடத்தியிருக்கிறார் பெரியார். கணவரால் கைவிடப்பட்டவர்கள் வலுக்கட்டாயமாக முதியவருக்கு மூன்றாம் தாரமாக நான்காம் தாரமாக திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்கள் தங்களது திருமண வாழ்வை சுதந்திரமாக விட்டு வெளியேறி இங்கு தங்கினர்.
  • இவர்களுக்கு அந்த காலகட்டத்தில் பெரும்பாலும் பிறந்த வீட்டின் ஆதரவு கிடைக்காமல் இருந்தது. கொடுமைகளை அட்ஜஸ்ட் செய்து தான் போக வேண்டும் என்ற நிலை இந்த விடுதியால் மாறிப்போனது.
  • பெண்கள் கற்பு, குடும்பம், குழந்தைப்பேறு ஆகியவை குறித்து சுதந்திரமாகவும் சுயசிந்தனையோடும் விவாதித்திருக்க இவர் நடத்திய பெண்கள் மாநாடு வழிவகுத்தது.
  • தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வர சுயமரியாதை இயக்கம் மூலம் துணை நின்றவர் பெரியார்.
  • ஒருமுறை பெரியாரிடம் “பலதார மனம் கொண்ட கடவுள்களை எதிர்க்கும் சுயமரியாதை இயக்கம், பலதார மனதை ஆதரிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அப்போது, கடவுளை எதிர்க்கிறோம் என்பதற்காக அவர் செய்த அனைத்தும் தவறு என்று நான் சொல்லவில்லை. கடவுள் மூச்சு விட்டதாக புராணம் சொல்கிறது. அப்போது நாம் மூச்சு விடுவதும் தவறாகி விடுமா? இதற்குத்தான் பகுத்தறிவு தேவை. என்று கூறினார். இதன் மூலம் கடவுளுக்கே பலதார மனம் என்று கடவுளின் பெயரை சொல்லி ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணப்பதை எதிர்த்து பெண்கள் தைரியமாக கேள்வி கேட்கத் தொடங்கினர். பலதாரமணம் ஏற்கப்பட்டால் அதே உரிமை பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்பதே அவரது வாதமாக இருந்தது.
  • சாதி ஒழிப்பு திருமணத்தை முன்னெடுக்கும் வகையில் முதலியார் சமூகத்தை சேர்ந்த குருசாமிக்கும் தலித் சமூகத்தை சேர்ந்த குஞ்சிதத்துக்கும் பெரியார் முன்நின்று திருமணம் செய்து வைத்தார். அந்த திருமணம் நடக்கும் சமயத்தில் அவரது தங்கை தற்கொலை செய்து விட்டதாக வந்த தந்தியை வைத்து அனைவரும் பதறிய போது, ‘எங்கள் குடும்பத்திலேயே மிகவும் தைரியமான பெண் அவள். அவள் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை’ என்று குருசாமி யூகித்து திருமணத்தை தொடர்ந்து நடத்தினார். பின்பு அந்த யூகமானது சரி ஆகியும் போனது. இவரை அடுத்து சாதி மறுப்பு திருமணங்கள் தமிழகத்தில் நடக்க உறுதுணையாக இருந்தவர் பெரியார்.
  • பெண்களும் கல்வி பயில வேண்டும் பெண்களும் உயர் படிப்புகளை மேற்கொள்ள வேண்டும் பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டும், பெண்களும் சங்கம் நடத்த வேண்டும் என்று அவர் பெண்களுக்கு பல உரிமைகளை பெற்றுத் தந்தார்.

இப்படிப்பட்ட பெரியாருக்கு நீங்களும் ஹாப்பி பர்த்டே பெரியார் என கமெண்டில் வாழ்த்து சொல்லலாமே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

Facebook
Instagram
YOUTUBE