ஜூன் 4 உடன் முடிகிறதா கூகுள் பே?
இந்தியாவில் கூகுள் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை ஆப்கள் வந்தபின் பலரும் வங்கிக்கு செல்வதையே நிறுத்திவிட்டனர். இன்னும் சொல்லப்போனால் தங்களது டெபிட் கார்டுகளின் பாஸ்வேர்டை கூட மறந்து விட்டனர்.
அந்த அளவுக்கு காய்கறி கீரை கடை முதல் டீக்கடை ஷாப்பிங் மால் வரை செல்லும் இடமெல்லாம் ஆன்லைன் பரிவர்த்தனைகள் தான்.
க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து வங்கியில் இருந்து பணத்தை ஒரு ரூபாய் முதல் லட்சக்கணக்கில் கைமாற்றி விட்டனர்.
இந்த நிலையில் தான் அந்த பயனாளர்களுக்கு அதிர்ச்சி ஊட்டும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகள் அமைந்துள்ளன.
ஏற்கனவே பேட்டி எம் நிறுவனத்துக்கு எதிராக ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை தற்போது கூகுள் பே போன் பே போன்ற ஆப்களின் பக்கம் திசை திரும்பி உள்ளது.
உள்நாட்டு பேமென்ட் ஆப் Bhim ஐ ஊக்குவிப்பதற்காக தான் இந்த நடவடிக்கை என்றும் சொல்லப்படுகிறது.
கூகுள் பே தனது சேவைகளை வரும் ஜூன் 4ம் தேதியோடு நிறுத்திக் கொள்வதாக கூகுள் நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அத்துடன் கூகுள் வாலெட் மூலம் தொடர்ந்து பணப்பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் என்றும் நம்பிக்கை கொடுத்துள்ளது.
இந்த சேவை நிறுத்தம் முதற்கட்டமாக அமெரிக்காவில் தான் அறிமுகமாகியுள்ளது. அங்கு ஏற்கனவே கூகுள் வாலெட் பயன்பாடு அதிகம் உள்ளதால் இந்த மாற்றம் அந்நாட்டு பணியாளர்களுக்கு பெரும் அதிர்வை தராது என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒருவேளை கூகுள் பே ஆனது இந்தியாவில் தடை செய்யப்பட்டாலோ அல்லது செயல் இழக்கப்பட்டாலோ கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட கூடும் என்று சொல்லப்படுகிறது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.