“கட்டுனா கவுண்டனத்தான் கட்டணும்” – சத்தியம் வாங்கிய சர்ச்சை

கவுண்டர் இனத்தைச் சார்ந்த பெண்கள் ஒன்றுகூடிய வள்ளிக் கும்மி ஆட்டத்தில் நாங்கள் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த பையன்களைத்தான் திருமணம் செய்து கொள்வோம் என்று அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரிதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்fசிகள் தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கே.கே.சி.பாலு சொல்லச் சொல்ல பெண்கள் உறுதிமொழி ஏற்கிறார்கள். “சத்தியமே சத்தியமே, சின்னமலை சத்தியமே . . . கல்யாணம் பண்ணிக்கிறோம்.. கவுண்டர் வீட்டு பையனையே.. இது போதும், இது போதுமே ..எனக்கு வேறு எதுவும் வேண்டாம் அம்மா, ” என்று பெண்கள் உறுதிமொழி ஏற்றுக் கொள்கிறார்கள்.

அங்கிருந்த பெண்கள் முதலில் ஏதோ ஸ்கூல்ல சொல்ற உறுதி மொழி எனத்தான் முதலில் ”சத்தியமே சத்தியமே . . சின்னமலை சத்தியமே. . . ” எனக் கூறிவிட்டனர். இதையடுத்து கலியாணம் பண்ணிக்கிறோம், கவுண்டர் வீட்டுக் பையனையே என சொன்னதும் யாருமே வாய் திறக்கவில்லை. ஏனெனில் அவர்கள் படித்து, பண்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவ்வாறு கூற மறுத்துவிட்டனர்.

பொதுவெளியில் சாதி பற்றி பேசுவது தவறு என சிறிய தயக்கம் வந்ததே பெண்களும் சாதியின் பால் கொண்டுள்ள டிடேச்மென்ட்டை காட்டுகிறது. இறுதியில் மீண்டும் அதை சொல்ல வைக்க முயலும் போது பலரும் சுருதி குறைந்த குரலிலேயே இதற்கு உறுதிமொழி ஏற்றுள்ளதும் இந்த வீடியோவில் தெரிகிறது.

கொங்கு கவுண்டர் வீட்டு பெண்கள், கவுண்டர் வீட்டு பையன்களைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கே.கே.சி.பாலு உறுதிமொழி ஏற்க வைத்த வீடியோ, சாதியத்தை ஊக்குவிப்பதாக விசிக குற்றம் சாட்டியுள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE