குட் நைட் நடிகை மீதாவுக்கு திருமணம்
இந்த ஆண்டில் வெளியான படங்களிலேயே குறைந்த பட்ஜெட்டில் அதிக வரவேற்பு பெற்ற படங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது குட் நைட். இந்த படத்தில் மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பவர் மீதா ரகுநாத்.
இவர் சென்னையில் பிறந்தவர். ஊட்டியில் வளர்ந்தவர். ஊட்டி தான் தனக்கு மிகவும் பிடித்தமான ஊர் என அவர் சிறு கூடு என்ற இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ல் பகிர்ந்துள்ளார்.
ஆகஸ்ட் 15 1999 இல் பிறந்தவர் மீதாரகுநாத். இவரது தந்தை ரகுநாத் தொழிலதிபர் ஆவர். இவருக்கு பூர்வா ரகுநாத் என்ற சகோதரி உள்ளார். அவரும் நடிகை தான். அது போக ரிஷி என்று ஒரு சகோதரரும் உள்ளார்.
இவர் முதல் நீ முதல் முடிவும் நீ என்ற படத்தில் நடித்தார். இதை அடுத்து குட் நைட் என்ற படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றார்.
வெப்சீரிஸ் ஆன 5678 என்ற தொடரிலும் மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவருக்கு ஹார்ஸ் ரைடிங், கவிதை எழுதுவது, பயணம் உள்ளிட்ட பொழுதுபோக்குகள் பிடிக்கும்.
எப்படி ஊட்டியை சேர்ந்த சாய்பல்லவி இயல்பிலேயே இயற்கையான அழகை கொண்டிருக்கிறாரோ அதேபோலத்தான் மீதா ரகுநாத்தும். அவரது தலை முடியும் முகம் உள்ளிட்டவையும் இயற்கையிலேயே அதிக மேக்கப் போடாமல் அழகாக காட்சியளிப்பவை.
சிறுவயதில் இருந்தே நடிப்பு நடனம் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். எனவே பள்ளி கல்லூரிகளில் அனைத்து கலாச்சார போட்டிகளிலும் பங்கேற்று ரியலிஸ்ட்டிக்கான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்காக பல பாராட்டுகளையும் டான்ஸ் அகாடமி விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
ஏற்கனவே குக்கு வித் கோமாளி என்ற விஜய் டிவி நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்று இருக்கிறார். அது மட்டும் இன்றி சிறு கூடு என்ற தமிழ் மியூசிக் வீடியோவிலும் அவரிடம் பெற்று இருக்கிறார்.
இந்த நிலையில் மீதாஸ் என்கேஜ்மென்ட் என்ற பெயரில் அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அதில் அவருக்கு நலங்கு வைத்து, பாரம்பரிய முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றது.
மீதா ரகுநாத் திருமணம் செய்து கொள்ளும் பியான்சியின் பெயர் அர்ஜுன். இவர் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர். இவர்கள் இருவரும் 3 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்ததாகவும் சென்னையில் கிங்ஸ் கிளப் என்ற ஹோட்டலில் வைத்து இருதரப்பு உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.