நாளை கடைசி! 161% லாபத்துக்கு பேப்பர் தங்கத்தை வாங்க முந்துங்கள்.

தமிழகத்தின் இந்த நிதி ஆண்டின் கடைசி முறையாக தங்க பத்திரம் விற்பனை 16.2.2024 தேதி, அதாவது நாளையோடு முடிவடைகிறது.

தபால் அலுவலகங்களில் தங்க பத்திரம் திட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும்.

இந்த முறைக்கான தங்க பத்திரம் வெளியீட்டு விழா, ஒரு கிராமுக்கு ரூ.6,271 ஆக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது

6 மாதத்துக்கு ஒரு முறை ஆண்டுக்கு 2 1/2 சதவீத வட்டி பெற முடியும்.

இந்த தங்கத்தின் முதிர்வுத் தொகையானது ஆபரண தங்கம் போன்று அல்லாமல், 24 கேரட் சுத்த தங்கத்துக்கு ஈடாக பணத்தை 8 ஆண்டுகளுக்கு பின் பெற்றுக் கொள்ள முடியும்.

எங்கெங்கு வாங்கலாம்?

ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

தபால் நிலையங்கள்

அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள்

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள்

உள்ளிட்ட இடங்களில் தங்க பத்திரங்களை வாங்க முடியும்

கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த தங்கம், பத்திரம் வடிவம் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும்.

அதற்காக அந்த பேப்பரே தங்கத்தில் இருக்கும் என நினைக்கக் கூடாது.

அந்த தங்கத்துக்கு இணையான பணத்தை ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து வைத்திருந்து வட்டி பெற்று 8 ஆண்டுகளுக்குப் பின்பு, சுத்த தங்கத்தின் அன்றைய சந்தை மதிப்பில் உரிய தொகையை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த தங்க பத்திரத்தை யாராலும் திருட முடியாது.

அந்த தங்க பத்திரத்தில் யாருடைய பெயர் போடப்பட்டுள்ளதோ அவர் மட்டுமே அதனை பயன்படுத்த முடியும்.

உதாரணத்துக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு கிராம் தங்க பத்திரம் 2016 ரூபாய்க்கு வாங்கியவர்கள், தற்போது ஒரு கிராம் ரூ.6,271-ஐ பெற்றுள்ளனர்.

இது 161 சதவீதம் லாபம் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி வாங்க வேண்டும்?

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பான் கார்டு நகல், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நகலோடு இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை கொண்டு தபால் நிலையங்களில் விண்ணப்பித்து தங்க பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE