“அன்றாட இயந்திர வாழ்வில் இருந்து சற்று விடுப்பு தரும் வகையில் எங்காவது சென்றால் நன்றாக இருக்குமே! இந்த எண்ணம் அனைவருக்கும் தான் தோன்றும். ஆனால், அதற்கான வாய்ப்பு, வசதிகள் தான் பலருக்கும் அமைவதில்லை.”

அவ்வாறு பல நாட்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாக சென்று வரலாம் என ஆலோசனை மேற்கொள்ளும் இடங்களில் ஒன்று கோவா. கோவாவுக்கு சென்றால் எங்கு செல்வது? என்னென்ன இடங்களை சுற்றி பார்ப்பது? என்ற குழப்பம் இருக்கலாம். “த காரிகை”யின் இந்த தகவலை படித்தபின் அந்த குழப்பம் தீரும்.

  • அகுவாடா கோட்டை

Aguada Fort அரபிக் கடலை ஒட்டி அமைந்துள்ளது இந்த கோட்டை. அழகிய கோட்டைகளில் ஒன்றான இது மிகவும் சுவாரஸ்யமானது. கோட்டையின் பின்புறத்தில் உள்ள கடலில் அழகிய சூரிய அஸ்தமனத்தை காண மக்கள் இங்கு திரண்டு வருவர் . கம்பீரமிக்க இந்த கோட்டையை காணும் போது வரலாறும், அதன் சிறப்புகளும் உணரும்

  • அஞ்சுனா பிளே

Anjuna Flea என்ற இந்த சந்தை கோவாவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வாரந்தோறும் ஒவ்வொரு புதன் கிழமையும் இங்கு சந்தை போடப்படும். இந்த சந்தையில், கோவாவின் பிரத்யேக ஆடைகள் விற்பனைக்கு கிடைக்கும் அதே போல் பல்பொருள் சந்தையான இங்கு ஆடம்பர எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் கூட மிக எளிதில் கிடைக்கும். வெளிநாட்டவர்கள் கோவா சுற்றுலா வரும்போது, புதன்கிழமை அன்று இந்த சந்தையில் பொருட்களை வாங்காது செல்வதில்லை.

  • சலீம் அலி பறவைகள் சரணாலயம்

டாக்டர் சலீம் அலி பறவைகள் சரணாலயம் ஆனது, திஸ்வாடியில் உள்ள கோரோ என்ற இடத்தில் உள்ளது. குறிப்பாக மாண்டோவி ஆற்றங்கரையில் உள்ள இங்கு, 440 ஏக்கர் பரப்பளவில் சரணாலயம் பரந்து, விரிந்து கிடக்கிறது. இந்த சரணாலயத்தில் பல் புல்ஸ், கிங்ஃபிஷர்ஸ், ஸ்வான்புல்ஸ் ஆகிய பறவை இனங்கள் எளிதில் காணக் கிடைக்கும்.

  • சின்குரிம் பீச்

அகுவாடா கோட்டைக்கு மிக அருகில் உள்ளது இந்த கடற்கரை. நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கு ஏற்ற இடமாக இங்கு உள்ளது. பாரா சைலிங், ஸ்கூபா டைவிங் போன்ற நீர் சாகச விளையாட்டுக்கள் இங்கு விளையாடப்படுகிறது.

  • துத்சாகர் நீர் வீழ்ச்சி

மாண்டோவி ஆற்றில் உள்ளது துப்சாகர் நீர்வீழ்ச்சி. இந்தியாவின் மிக இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சி ஆன இது கோவாவில்தான் அமைந்துள்ளது. கோவா-கர்நாடக மாநிலங்களின் எல்லைக்கு மிக அருகில் பனாஜியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. ஒரு மலைமுகட்டத்தின் இரு வழிகளிலும் வழிந்தோடும் வகையில் அழகிய முறையில் காட்சியளிக்கிறது.

  • குழந்தை இயேசு தேவாலயம்

Basilica of Bom Jesus என அழைக்கப்படும் கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டுத்தலம் கோவாவில் உள்ளது. இது, போர்ச்சுகீசியர்களின் தலைநகரமாக விளங்கிய பழைய கோவாவில் உள்ளது.

  • அகோண்டா பீச்

அகோண்டா கடற்கரையானது கோவாவின் தென்பகுதியில் உள்ளது. இது சினிமா சூட்டிங் உள்ளவற்றுக்கு புகழ் பெற்ற கடற்கரை ஆகும். இந்தப் பகுதி ஆமைகள் பாதுகாப்புக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆண்டின் சில காலம் ஆமைகள் இங்கு வந்து முட்டை இட்டுச் செல்லும். அவற்றை பாதுகாப்பு குழுவினர் எடுத்து பத்திரப்படுத்தி குஞ்சு பொரிக்க செய்து மீண்டும் கடலில் விடுவர்.

  • பகவான் மகாவீர் தேசிய பூங்கா

கோவாவின் சாங் இன் தாலுகாவில் உள்ளது இந்த பகவான் மகாவீர் காட்டு உயிர் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசிய பூங்கா. சுமார் 240 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த பிரம்மாண்ட பூங்கா. புகழ்பெற்ற துக்சாகர் நீர்வீழ்ச்சியும் இங்குதான் அமைந்துள்ளது.

Facebook
Instagram
YOUTUBE