பல்லியப் பாத்து கத்துறாங்களா? இத பண்ணா பல்லியே வராது.
பல்லியை பார்த்தாலே சிறியவர் – பெரியவர் வரை குறிப்பாக பல பெண்கள் கத்தி ஊரையே கூப்பிட்டு விடுவர். எல்லோரும் பதறி அடித்து ஓடி வந்து பார்த்தால் அது ஒன்று கரப்பான் பூச்சியாகவோ அல்லது பல்லியாகவோ இருக்கும்.
பல்லிகள் ஏன் வருகின்றன?
அடுப்படி, குப்பைத் தொட்டி என சிதறி கிடக்கும் உணவுகள் ஈக்கள் மற்றும் எறும்புகளை சாப்பிடுவதற்காக பல்லிகள் வரும். குறிப்பாக சமையல் அறையில் தான் பல்லிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.
பல்லியை பார்த்தாலே பயமும் அருவருப்பும் தோன்றினாலும் வீட்டுக்குள் பூச்சி வராமல் இருக்க பல்லிகள் உதவும் நண்பன் என்று சொல்லலாம். பொதுவாக பல்லிகளை கொல்லக்கூடாது என்ற எண்ணம் மக்களுக்கு இருக்கும். எனவே அந்த பள்ளிகளை கொலை செய்யாமல் எப்படி அதனை பாதுகாப்பாக வீட்டில் இருந்து வெளியேற்றுவது என்பதை பார்க்கலாம்.
சுத்தம்
வீட்டுக்குள் சுத்தமாக இருந்தாலே பூச்சிகள் வராது. அப்படி பூச்சிகள் வராவிட்டால் அதனைப் பிடிக்க பல்லிகளும் பின்னாடியே தேடி வராது.
உணவு
வீட்டில் பயன்படுத்திய அல்லது பயன்படுத்தாத உணவுகள் மீதமானாலும் அதனை உடனடியாக அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக மூடாமல் திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாழைப்பழங்களில் ஈக்கள் வைக்கலாம். அந்த ஈக்களைப் பிடிக்க பல்லிகள் வரலாம். எனவே ஒரு பொருள் ஆகாது, வீணாகிவிட்டது என தெரிந்து விட்டால் அதனை காசு வீணாகிறதே என்று பார்க்காமல் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உணவு பொருளில் பல்லி விழுந்து அதில் வேறு பல விபரீத விளைவுகளை உருவாக்கலாம்.
எப்படி தடுப்பது?
பல்லிகளுக்கு பூச்சிகள் பிடிக்கும் என்பது தெரிந்த விஷயம். ஆனால் பல்லிகளுக்கு எந்தெந்த பொருட்கள் பிடிக்காது என்பதை தெரிந்து அதனை சமையல் அறையில் வைத்து இருந்தால் பல்லிகள் வராது என்று சொல்லலாம். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
முட்டை ஓடுகள்
பள்ளிகள் அடிக்கடி ஊர்ந்து செல்லும் இடங்களில் முட்டை ஓடுகளை வைக்கலாம். ஏனெனில் உடைத்த முட்டைகளின் வாசனை பல்லிகளுக்கு பிடிக்காது. எனவே காலியான முட்டை ஓடுகளை வைத்தால் வீடும் துர்நாற்றம் இன்றி இருக்கும். அதே சமயம் பல்லிகளும் அந்த இடத்தில் நடமாடாது. ஆனால் வேறு இடம் தேட ஆரம்பிக்கும். கவனம்.
தண்ணீர்
மற்ற எல்லா ஜீவராசிகளை போல பல்லிக்கும் பசிக்கும். அதே போல் தாகமும் எடுக்கும். எனவே பல்லிகள் தண்ணீரை தேடி வரலாம். பிற செல்வ பிராணிகளான குருவி, லவ் பர்ட்ஸ், நாய், பூனை போன்றவற்றுக்கு வைக்கும் தண்ணீரை பருக பல்லிகள் வரலாம். அதேபோல் பைப்பில் நீர் சொட்டினாலும் அங்கு தண்ணீரை பருக பல்லி வரும். எனவே பல்லிகள் வரும் இடத்தில் மிளகினை நன்றாக அரைத்து, அதனுடன் நீர் தெளித்து ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு தெளித்து வர அந்த மிளகின் வாசனைக்கு பள்ளி அங்கு வராது விலகிவிடும்.
பூண்டு வெங்காயம்
பள்ளிகளுக்கு வெங்காயம் பூண்டுகளின் வாசனை சுத்தமாக பிடிக்காது என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உரிக்காத வெங்காயம் அதிகம் உள்ள கூடைகளில் பல்லிகள் ஊர்ந்து செல்வதையும் பார்த்திருப்போம். எனவே வீட்டின் மூலை முடுக்குகளில் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உரித்து வைத்திருந்தால் அந்த வாசனையை கண்டு பல்லி வராது. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் வீட்டின் ஜன்னல் ஓரத்திலோ, டேபிள் ஃபேன் அருகிலோ, உரித்த வெங்காயத்தை வைத்திருக்கும் போது அதன் வாசனை ஜன்னல் காற்று வழியாகவும் ஃபேன் காற்று வழியாகவும் வீடு முழுக்க நிறையலாம். எனவே வீட்டை விட்டு பல்லிகள் பாதுகாப்பாக வெளியேறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
நாப்தலின் பந்து
வீடுகளில் உள்ள அலமாரிகளில் துணிகளுக்கு இடையே நாப்தலின் பந்துகளை வைத்திருப்பதை பார்த்திருப்போம். இது எதற்காக என்றால் துணிகள் வைத்திருக்கும் பகுதிகளில் அதிகம் புழங்காத இடங்களில் பல்லிகள் பூச்சிகள் வரக்கூடும். எனவே அந்த நாப்தலின் பந்துகளை வைத்திருப்பதன் மூலம் பல்லிகள் வராது. அதேபோல் நாப்தலின் பந்துகள் குழந்தைகளுக்கு கையில் சிக்காத வகையில் இருக்க வேண்டும். மிட்டாய் போல இருக்கிறது என்பதற்காக குழந்தைகள் எடுத்து அதனை வாயில் போட்டுக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. வேறு துணி எடுக்கும் போது அது கீழே உருண்டு விழுந்தாலும் கூட கவனமாக எடுத்து அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். மிக மிக கவனம்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.