சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் குழந்தை தனமான சுட்டித்தனத்தால் இடம் பிடித்தவர் ஜெனிலியா. இவரது ஆடை நாரிகமாக இருந்தாலும்கூட அவரது நடிப்பு குழந்தைத்தனமாக இருப்பதால் ‘பக்கத்து வீட்டு குட்டி பாப்பா’ போன்ற பலரும் இவரை கருதுவார்கள். இயல்பான துருதுருப்போடு நடிக்கும் இவரை பலருக்கும் பிடிக்கும். ஹிந்தி உள்ளிட்ட திரையுலகிலும் தெலுங்கு படங்களிலும் நடித்து ஜெனிலியா பிரபலமாகினார்.

டி சி எஸ் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக இருந்த நீல் டிசௌசாவின் மகள்தான் ஜெனிலியா. இவர் தனது 15 வயதில் மாடலிங்கை தொடங்கினார். திருமணத்தில் கல்யாண பொண்ணுக்கு தோழியாக இவர் உலா வந்த போது அவரைப் பார்த்த ஒரு இயக்குனர் அமிதாப்பச்சனுடன் பார்க்கர் பென் விளம்பரத்தில் நடிக்க வருமாறு கேட்டார். ஆனால் ஷூட்டிங் புக் செய்த நாளுக்கு மறுநாள் கழித்து பள்ளி தேர்வுகள் இருந்ததால் ஜெனிலியா மறுத்துவிட்டார் இதை அடுத்து அவரை சமாதானப்படுத்தி ஜெனிலியாவை ஒப்புக்கொள்ளச் செய்தார் இயக்குநர். இதை அடுத்து “ஃபேர் அண்ட் லவ்லி” விளம்பரத்தில் ஸ்ரீகாந்த் என்ற கிரிக்கெட் வீரருடன் நடித்தார்.

நடிப்பில் ஆர்வம் இல்லாவிட்டாலும் வந்த வாய்ப்புகளை அவர் ஏற்க மறுத்தபோது இயக்குனர்களை அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தனர். 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் படத்தில் அவர் நடித்த பின் பிரபலமானார்.

சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் தமிழ் திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். இதை அடுத்து ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் உடைய மகன் ஆவார். அவர்களுக்கு ஏற்கனவே ரியான், ரஹைல் என்ற 2 ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.

இந்த நிலையில் ப்ளூ கலர் டிரஸ்சில் தனது கணவரின் காதோடு காது வைத்தாற் போல் அழகாக போஸ் கொடுத்திருந்த போது நடிகை ஜெனிலியா வயிற்றில் கை வைத்திருந்தார். இதை கண்ட ரசிகர்கள் இது அவருடைய பேபி பம்ப் என்றும் வயிற்றில் குழந்தை வளருவதற்கான குட்டி தொப்பை என்றும் கூறினர். ஏற்கனவே அவர்களுக்கு இரண்டுமே ஆண் குழந்தைகள் என்பதால் பெண் குழந்தையை எதிர்பார்த்து இருக்க கூடும் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார் ரித்தேஷ் தேஷ்முக்.

இன்னும் 2-3 குழந்தைகள் பெற்றுக் கொண்டாலும் நான் எதுவும் நினைக்க மாட்டேன். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த செய்திகள் உண்மையில்லை எனக் கூறியுள்ளார்.

இருவரும் வேத் என்ற படத்தை எடுத்து வெளியிட்டிருந்தனர். முதன்முறையாக ரித்தேஷ் இயக்குனராக களம் காண தயாரிப்பாளரானார் அவரது அன்பு மனைவி ஜெனிலியா. ஐஎம்டிபி-யில் 7 புள்ளிகளுக்கு மேல் மதிப்பெண் பெற்ற அந்தப் படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் உள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE