50-வது எபிசோட். பிக்பாஸில் இருந்து வெளியேறினார் கானா பாலா

பிக்பாஸ் சீசன் 7 தமிழில் இன்று எவிக்சன் நடந்துள்ளது. இவர், குறைவான ஓட்டுக்களைப் பெற்றதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

50-வது எபிசோடில் வந்து அகம் டிவி வழியே அகத்துக்குள் சென்றார் கமல். அதில் இன்று 49-வது நாள் என நினைவூட்டினார் கமல். பிக்பாஸ் வீட்டில் இருப்போர் அனைவரையும் அழகாக மேக்கப் செய்தால் எப்படி ஒரு பெருமிதத்தோடு கண்ணாடியைப் பார்த்து ரசிப்போமே, அப்படி உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள் என்றார்.

இதையடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து பாதி கிணறு தாண்டிய நிலையில் கற்றுக் கொண்டது என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.

புதிதாக கத்துக்கிட்டேன் என்றார் ரவீனா. அடாப்டேசன் கிடைச்சுருக்கு. தப்பா நினைச்சவங்க, நல்லதா சொல்லும் போது சுயத்தை உணர வாய்ப்பிருக்கு என்றார் தினேஷ். சண்டை போடறத வேடிக்கை பாத்துட்டு இருந்த நான், இப்போ இறங்கி சண்டை போடுறேன் என்றார் மணி.

மக்கள் ஃபேவரைட் அர்ச்சனாவோ, வீட்டின் அருமை புரிகிறது என்றார். முன்பெல்லாம் என்னை கேலி செய்வோரிடம் இருந்து விலகியோடுவேன். தற்போது, அவர்களிடமும் கூட நட்பு பாராட்ட முடியும் என கற்றுக் கொண்டு இருக்கிறேன் என்றார். நான் வளர்கிறேன் மம்மி என்ற டயலாக் மட்டும்தான் மிஸ்ஸிங்.

எமோசனல், ஓவர் சென்சிடிவ் மாறி மூளையைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறேன் என்றார். ஜெயில் சென்ற பின்தான் ஆட்டம் சூடு பிடிக்கும் அளவுக்கு களம் இறங்கி ஆடுவதாக விஷ்ணு கூறியதும், தனிமையில் நிராகரிக்கப்பட்ட சுதந்திரத்தை சிறையில் இருந்து வெளிவந்து வெறித்தனமாக வாங்கிய தலைவர்களை நினைவூட்டினார் கமல்.

கேள்வி கேட்பதை கோபத்தோடு கேட்டால் அதற்கு எந்தவித மதிப்பும் இல்லை என்பதையும், இதற்குப் பின், நான் கேம்காக நான் காட்டிய கேரக்டரைத் தூக்கிவிட்டு, நான் இயல்பில் யாரென காட்டப் போவதாகவும் மாயா கூறினார். வெளியில் என்னைப்பற்றி யாரென்ன சொன்னாலும், அவர்கள் சொன்னால் நான் அப்படியில்லை என கடந்துவிடுவேன். உள்ளே யாரேனும் இத்தனை கேமராக்கள் முன் என்னைப் பற்றி சொன்னால், நான் அப்படியே ஆகிவிடுவேனோ என அச்சம் வருகிறது என்றார் பூர்ணிமா. விஷ்ணு கொடுத்த பாடம் நன்கு வேலை செய்கிறது போல.

அர்ச்சனா, விச்சு, தினேஷ்-க்கு ஆடியன்சிடம் இருந்து கிடைக்கும் பாசிடிவ் கைதட்டலையும், தங்களுக்குக் கிடைக்கும் நெகடிவ் கூச்சல்களையும் வைத்து, தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினால் இருக்கும் பெயரையாவது காத்துக்க கொள்ளலாம் என பூர்ணிமா கூற மாயா அவரை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தார். தன்னை வெறுப்பவர்களின் எண்ணிக்கை வெளியே அதிகரிப்பதை பூர்ணிமா சென்ஸ் செய்துவிட்டபோதும், மாயா சப்பைக் கட்டு கட்டி சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தார்.

வெற்றி நடைபோடுவது யார்? வெட்டி நடை போடுவது யார் என்ற போஸ்டரை நேராகவும், தலைகீழாகவும் மாட்ட கமல் கூறினார். தினேஷ் பேசும்போது 4 வாரங்களை மாயா கடந்தால் அவர் வெற்றி நடைபோடுவார் என்றும், விசித்ரா வெட்டி நடைபோடுவதாகவும் கூறினார். இதையடுத்து ரவீனா எழுந்து அர்ச்சனாவை வெற்றி நடை என அவர் போஸ்டரை எடுத்து மாட்டியதும், அரங்கம் அதிர கிடைத்த கைதட்டலானது பூர்ணிமா-மாயா முகத்தில் கறியைப் பூசியது. அடுத்து வந்த மணி அர்ச்சனாவுக்கு பதில் கூல் சுரேஷ் அண்ணாவின் போஸ்டரை மாட்டிவிட்டு, மாயாவின் போஸ்டர் அப்படியோ வெட்டி நடையில் இருக்கட்டும் எனக் கூறியதற்கும் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் மாஸ் ஆக இருந்தது.

அர்ச்சனா வந்து மாயாவின் போட்டோவை வெற்றி நடையாக மாட்டி, பூர்ணிமாவை தலைகீழாக மாட்டினார். மாயாவை பூஸ்ட் செய்யவே தான் அவ்வாறு செய்ததாக அர்ச்சனா விளக்கம் கொடுத்தார். விசித்ராவும் அப்படியே கூறினார். நான் கேம் ஆடினாலும், நான் என் சுயத்தை இழக்கமாட்டேன் என்றார் விசித்ரா.

எத்தனைக் கல்லடி பட்டு நிலை குலைந்து வீட்டுக்கே செல்லும் நிலை வந்தாலும்கூட, அர்ச்சனா கொடுத்த கம் பேக் அருமையாக இருந்ததாகக் கூறினார். பூர்ணிமா பேச வரும்போது அவர் கலங்கிப் போய் நின்றார். விக்ரம் செய்யும் நிறைய விஷயங்கள் வெளியில் புரொஜெக்ட் செய்யப்படுவதில்லையோ எனக் கூறினார். அதேசமயம் அர்ச்சனா விக்ரமை புல்லியிங் செய்ததன் காரணமாக அவர் வெட்டி நடை போடுவதாகக் கூறினார்.

பின் தலைகுனிந்து அழும் நிலையில் இருந்த பூர்ணிமாவை அழைத்து, என்னம்மா என்னாச்சு எனக் கேள்வி கேட்டபோது, அவர் துக்கம் தொண்டையை அடைக்க ஏதோ பிளாக் செய்வதாகக் கூறி தண்ணீர் பருகினார். அர்ச்சனாவை மட்டும் ஏன் கேள்வி கேட்கவில்லை என அவர் கமலிடம் கேள்வி கேட்க, அவரும் ஏதோ மலுப்பலாக பதிலளித்தார்.

பின் விதி மீறல் தொடர்பாக அர்ச்சனாவையும், விசித்ராவையும் லேசாகக் கண்டித்தால் கமல். தொடர் விதி மீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

மிகவும் அழகாக பூர்ணிமாவுக்கு புரிய வைத்தார். விசித்ராவும் வந்து பூர்ணிமாவை அணைத்து ஆறுதல் படுத்தினார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE