எந்தெந்த படம் விருது தட்டி இருக்கு? முழு பட்டியல் இதோ

2022 ஆம் ஆண்டுக்கான 70வது தேசிய விருதுகள் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு சிறந்து பங்காற்றியமைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

4 விருது பெற்ற பொன்னியின் செல்வன்

அதில் தமிழில் பொன்னியின் செல்வனின் பாகம் 1 திரைப்படம் 4 பிரிவுகளில் விருதை குவித்துள்ளது.

சிறந்த திரைப்படமாக பொன்னியின் செல்வன் பாகம் 1 அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் பாகம் 1 ஒளிப்பதிவாளருக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும், சிறந்த இசை வடிவமைப்புக்கான விருதை ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும் அறிவித்துள்ளனர்.

சிறந்த நடிகை நித்யா மேனன்

தனுஷ் நடிப்பில் 2022ல் தமிழில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதோ பெண்ணே பெண்ணே பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்தமைக்காக சிறந்த கோரியோகிராபர் விருதை ஜானி மாஸ்டர் பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் ரிஷப் ஷெட்டி

சிறந்த நடிகருக்கான விருதை காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டிக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய மொழி பிரிவில் தெலுங்கில் வெளியான கார்த்திகேயா 2 படம் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த சண்டை பயிற்சிக்கு அன்பறிவு, கே ஜி எஃப் படமும் விருது பெற உள்ளது.

முழு பட்டியல் விபரம்

சிறந்த திரைப்படம்: ஆந்தம் (மலையாளம்)

சிறந்த இயக்குனர்: சூரஜ் ஆர் பர்ஜத்யா (உன்சாய்)(ஹிந்தி)

சிறந்த அறிமுக இயக்குனர் : பிரமோத் குமார் (பவுஜா)

சிறந்த நடிகர் : ரிஷப் ஷெட்டி (காந்தாரா-கன்னடம்)

சிறந்த நடிகை : நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்-தமிழ்)
மற்றும்
மனசி பரேக் (குச்சி எக்ஸ்பிரஸ்-குஜராத்தி)

சிறந்த மக்கள் விரும்பிய படம் : காந்தாரா (கன்னடம்)

சிறந்த தேசிய, சமூக சுற்றுச்சூழல் மதிப்பை மேம்படுத்துதல் : குச்சி எக்ஸ்பிரஸ் (குஜராத்தி)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் : பிரம்மாஸ்திரா (ஹிந்தி)-ஜெயகர் அருத்ரா, நீலேஷ்(வைரல் தக்கர்)

சிறந்த துணை நடிகை : நீனா குப்தா (உன்சாய்-ஹிந்தி)

சிறந்த துணை நடிகர் : பவன் ராஜ் மல்ஹோத்ரா (பவுஜி-ஹரியானவி)

சிறந்த குழந்தை நட்சத்திரம் : ஸ்ரீபத் (மணிகண்டன்-மலையாளம்)

சிறந்த பாடகர் : அரிஜித் சிங் (பிரம்மாஸ்திரா-கேசரியா-ஹிந்தி)

சிறந்த பாடகி : பம்பாய் ஜெயஸ்ரீ (சௌதி வெள்ளக்கா-சௌதி பேபி கொக்கனட்- மலையாளம்)

சிறந்த ஒளிப்பதிவு : ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் -தமிழ்)

சிறந்த திரைக்கதை (அசல்) : ஆந்தம் (ஆனந்த் எகர்ஷி)

சிறந்த வசனகர்த்தா : அர்பிதா முகர்ஜி, ராகுல் வி சித்தேலா (குல்மோகர்)

சிறந்த ஒலி வடிவமைப்பு : ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பிஎஸ்1-தமிழ்)

சிறந்த படத்தொகுப்பு : ஆந்தம் (மகேஷ் புவனேந்த்)

சிறந்த இசையமைப்பாளர் (பாடல்) : பிரீதம் (பிரம்மாஸ்திரா-ஹிந்தி)

சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை): ஏ.ஆர். ரஹ்மான் (பிஎஸ் 1-தமிழ்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு : ஆனந்த் அதியா (அபராஜிதோ)

சிறந்த சண்டை பயிற்சி: அன்பு, அரிவு (KGF அத்தியாயம் 2)

சிறந்த ஒப்பனையாளர் : சோம்நாத் குந்து (அபராஜிதோ )

சிறந்த ஆடை வடிவமைப்பு : நிக்கி ஜோஷி (கட்ச் எக்ஸ்பிரஸ்)

சிறந்த பாடல் வரிகள்: பவுஜா (‘சலாமி’க்கு நௌஷாத் சதர் கான்)

சிறந்த நடன இயக்குனர்: ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணன் (திருச்சிற்றம்பலம்- ‘மேகம் கருக்காதோ’)

சிறப்பு ஜூரி விருதுகள்: மனோஜ் பாஜ்பாய் (குல்மோகர்), சஞ்சய் சவுத்ரி(காதிகன்)

சிறந்த தெலுங்கு திரைப்படம்: கார்த்திகேயா 2(சந்து மொண்டேடி)

சிறந்த ஹிந்தி திரைப்படம்: குல்மோகர்

சிறந்த தமிழ் திரைப்படம்: பொன்னியின் செல்வன் 1

சிறந்த கன்னட திரைப்படம்: கேஜிஎஃப்2

சிறந்த மலையாள திரைப்படம்: சௌதி வெள்ளக்கா

சிறந்த குஜராத்தி திரைப்படம்: செல்லோ ஷோ

சிறந்த மராத்தி திரைப்படம்: வால்வி

சிறந்த பெங்காலி திரைப்படம்: கபேரி அந்தர்தன்

சிறந்த அசாமி திரைப்படம்: எமுதி புதி

சிறந்த ஒடியா திரைப்படம்: டாமன்

சிறந்த திவா திரைப்படம்: சிகைசல்

இதில் எந்தெந்த படங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்று கமெண்டில் தெரிவியுங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE