வயசாயிடுச்சுன்னு சாதிக்கத் தயங்காதீங்க!
ஆஸ்கர் வென்ற முதல் ஆசியப் பெண். வயது எவ்வளவு தெரியுமா? 61!
ஆஸ்கர் விருதுகள் 95வது வருடமா வழங்கப்படுகிறது. ஆனால் ஒருமுறை கூட ஆசியாவைச் சேர்ந்த பெண்கள் சிறந்த நடிப்புக்காக விருது வாங்கல. அந்த சாதனையை இப்ப படைச்சது மிச்செல் யோஹ்.
90 ஆண்டுகளுக்கு முன், “தி குட் எர்த்” திரைப்படத்தில் சீன கிராமவாசியாக நடித்தார் லூயிஸ் ரெய்னர். ஆனால் அவர் ஆசியாவைச் சேர்ந்தவரா தன்னை அடையாளப்படுத்தல. ஜெர்மன் – அமெரிக்க நடிகராகவே வாழ்ந்தாங்க. சிறந்த நடிகைக்குக்கு விருதும் வாங்கியிருந்தார். 1935ல் “தி டார்க் ஏஞ்சல்” படத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட மெர்லே ஓபரான் கூட வெற்றி பெறவில்லை. எனவே ஆசிய கண்டத்தைச் சேர்ந்த பெண்களிலேயே முதன் முறையாக சிறந்த நடிகைக்கு ஆஸ்கர் விருது வாங்கியிருப்பது மிச்செல் யோஹ் மட்டும் தான்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்தில், ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. “எவ்ரிதிங் எவ்ரிவர் ஆல் அட் ஒன்ஸ்“ அப்படிங்கற ஒரு திரைப்படம் 7 விருதுகளை வென்று இருக்கு. இதுல சிறந்த நடிகைக்கான விருது வாங்கி இருக்காங்க மிச்செல் யோஹ்.
ஆக்ஷன் காட்சிகளுக்கு புகழ் பெற்று விளங்கினவங்க மிச்சல். ஜேம்ஸ் பாண்ட் படங்கள்லயும் நடிச்சிருக்காங்க. மலேசியாவில் பிறந்து ஹாங்காங் ஆக்சன் திரைப்படங்களில் சிறப்பா நடிச்சிட்டு வந்தாங்க மிச்செல். “ஹிடன் டிராகன்“, “கிரேசி ரிச் ஏசியன்“ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்கள்.
7 விருதுகளை வென்ற “எவ்ரிதிங் எவ்ரிவர் ஆல் அட் ஒன்ஸ்“ அப்படிங்கிற படத்துல ‘ஈவ்லின்‘ என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிச்சதுக்காக மிச்செல்-க்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு இருக்கு.
மலேசியாவில் இருந்து இந்த நிகழ்ச்சியை டிவில பாத்துட்டு இருக்கு தன்னுடைய 84 வயதான அம்மாவுக்கு இந்த விருது சமர்ப்பிக்கிறதா நெகிழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார் மிச்செல். அம்மாக்கள் எல்லாருமே சூப்பர் ஹீரோக்கள் என்றும் அவர்கள் இல்லனா யாருமே இல்ல அப்படின்னு சொன்னாங்க. தன்னைப்போலவே இருக்கும் தன்னை பாத்துட்டு இருக்கும் இளைஞர்களுக்கு இந்த விருது ஒரு நம்பிக்கை அளிக்கும்-ன்னு சொன்னாங்க மிச்செல். நமக்கு வயசு ஆயிடுச்சு அப்படிங்கிறதுக்காக எந்த சாதனையையும் ஒத்தி போட வேணாம் அப்படின்னு கேட்டுக்கிட்டாங்க. எந்த வயதில் முயற்சி செய்தாலும் வெற்றி நிச்சயம் அப்படிங்கறதுக்கு தானே ஒரு சாட்சி அப்படின்னு சொல்லியும் நெகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார் மிச்செல் யோஹ்.
“எவரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்“ திரைப்படம் நாமினேசன் லிஸ்ட்-ல முன்னணியில் இருந்தது. 11 பரிந்துரைகளை பெற்றிருந்தது. அதுல மிச்செல் சிறந்த நடிகைக்கான விருது உட்பட 9 விருதுகளை இந்த படம் பெற்று இருக்கு. இந்த வருடம் நடைபெற்ற கோல்டன் க்ளோப்ஸ், இண்டிபெண்டன்ட் ஸ்பிரிட், ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் உள்ளிட்ட பல்வேறு விருதுகள சிறந்த நடிகைக்காக மிச்செல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.