பொண்ணுங்களா! பணத்துக்கு யாரையும் எதிர்பார்க்காதீங்க. . !

ஒரு பெண்ணுக்கு முழு தைரியம் என்பது அவள் கையில் இருக்கும் சிறிதளவு பணமோ, சம்பாத்யமோ தான்.

மாதா மாதம் ஒரு பெண்ணுக்குத் தேவையான அடிப்படை செலவுக்கு கூட தந்தையிடமோ, கணவரிடமோ கையேந்தி நின்று காத்திருக்கும் நிலை ஒவ்வொரு பெண்ணுக்கும் சொல்ல முடியாத துயரம் ஆகும். ஒரு பெண்ணுக்கு முழு தைரியம் என்பது அவள் கையில் இருக்கும் சிறிதளவு பணம். எது நடந்தாலும், நம் வாழ்க்கையையும் நம்மை நம்பியுள்ளோரையும் குறையின்றி பார்த்துக் கொள்ள முடியும் என்ற தைரியம்தான். அதை அவளுக்கான வேலையும் சம்பாத்யமுமே தருகிறது.

இதை உணர்ந்து ஜம்மு-காஷ்மீரின் முதல் ஆட்டோ ஓட்டுநராக உருவெடுத்து சாதனை படைத்துள்ளார் ரஞ்சீத் கவுர் என்ற பெண் ஆட்டோ ஓட்டுநர். மிகவும் கட்டுக் கோப்பான வாழ்வியல் முறைகளைத் தகர்த்து சுதந்திரமாக சம்பாதிக்கும் பெண்ணாக உருவெடுக்க இவர் தேர்ந்தெடுத்த தொழில் ஆட்டோ ஓட்டுதல். கணவரைப் போலவே ஆட்டோ ஓட்ட வேண்டும் என ஆர்வத்தோடு கற்றுக் கொண்டார். பல்வேறு எதிர்ப்புக்களையும் மீறி குடும்பத்துக்காக உழைக்கும் கணவனுக்குத் தோள் கொடுத்து உதவத் தயாராகிவிட்டார்.

முதலில் எதிர்கொண்டது கேலி தான். ஒரு பெண் ஆட்டோ ஓட்டுகிறார் பாரேன், என சாலையில் செல்வோரெல்லாம் ஏளனமாக சிரித்தும் பேசியும் சென்றுள்ளனர். அதைக் கேட்டு வீட்டில் முடங்கிவிடவில்லை ரஞ்சித் கவுர். யாரெல்லாம் கேலி செய்தனரோ, அவர்களே தற்போது பாராட்டுமளவு தைரியத்துடன் பணியாற்றி வருகிறார்.

தற்போது தினமும் 1500 ரூபாயில் இருந்து 2000 ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும், கேலிகளுக்கும், தடுப்பு வேலிகளுக்கும் பயந்து தான் முடங்கியிருந்தால் இந்தப் பணத்தை தனது வீட்டின் செலவுக்கு வேறு யார் கொடுப்பார்கள்? என்றும் பதில் கேள்வியுள்ளார்.

உண்மைதான், நாளை அவசர செலவுக்காகவோ, மருத்துவ செலவுக்காகவோ நம்மிடம் பணம் இல்லாத போது, நம்மைக் கேலி செய்தவர்களையெல்லாம் பணம் தரச் சொன்னால், நான் ஏன் கொடுக்க வேண்டும் ? என பதில் கேள்வி கேட்பர். ஆனால், அவர்கள் தான் நாம் நமது தொழிலைக் கைவிடக் காரணம், சம்பாத்யமின்றி சிரமப்படக் காரணம் என்றெல்லாம் கூறினால் ஏற்க மாட்டார்கள்.

எவர் ஒருவர் தன் செயலுக்கோ, அதன் விளைவுக்கோ பொறுப்பேற்கத் தயாராக இல்லையோ, அவர் கூறும் அறிவுரைகளையும், இழிவுரைகளையிம் ஏற்கக் கூடாது பொண்ணுங்களா!

வெளியில் செல்ல வாய்ப்பில்லாத பெண்கள், வீட்டிலேயே இருந்து செய்யக் கூடிய பணிகளையேனும் தேர்வு செய்து சம்பாதிக்கத் தொடங்கலாம். மீண்டும் சொல்கிறது “The Karigai” உங்கள் 15 அல்லது 20 ஆண்டு ஓவியத்தை வீணாக்கி விடாதீர்கள்!

Facebook
Instagram
YOUTUBE