107 ஆண்டுகள் போபாலை ஆட்சி செய்த பெண்கள்
“அரசியலில் பெண்கள்” அப்படின்னு ஒரு பட்டியல் எடுத்தால் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் பெண்கள் இருக்காங்க. அப்படி குறைவான அளவில் பெண்கள் பதிவு வகித்தாலும் அவர்கள் சிறப்பா தலைமை பண்பு வகிக்கிறாங்க.
பெண்கள் தலைமை இடத்துக்கு வருவதற்கு இடையில ஏராளமான ஆணாதிக்க தடைகளை கடந்து வந்தாக வேண்டிய சூழ்நிலை தற்போதைய நூற்றாண்டிலும் தொடருது. ஆனால், 1800களிலேயே சுமார் 107 ஆண்டுகள், போபால் ஆட்சியை செஞ்சிருக்காங்க பெண்கள். அதுவும் குறிப்பா ஆண்களை விட சிறப்பான நிர்வாகத்தை வழங்கியிருக்கிறார்கள்.
போபால் சமஸ்தானத்துடைய அஸ்திவாரம் சர்தார் தோஸ்த் முகமது கானால ஃபதேகர் கோட்டையில் போடப்பட்டது. அவரை அடுத்து குத்சியா பேகம் முதல் பெண் நவாப் ஆனாங்க. 1819 ல கணவர் படுகொலை செய்யப்பட்ட பின்பு 18 வயதில் அரசாண்டாங்க.
படிப்பறிவில்லாமல் இருந்தாலும், படைகளுடன் சேர்ந்து போர்களையும் சந்தித்து இருக்கிறார் குத்ஸியா பேகம். அவர் கட்டின கௌஹர் மஹால் இன்றைக்கும் போபால் பெரிய குளக்கரையில் இருக்கு. அவர் போபால்-ல ஜமா மசூதியையும் கட்டினாங்க. இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்னா பயணிக்க வச்சது மட்டும் இல்லாம அவர்கள அமைச்சராகவும் பதவி வகிக்க வச்சாங்க.
இரண்டாவதா போபால் சமஸ்தானத்தில் வந்த பெண், நவாப் சிக்கந்தர் ஜஹான் பேகம். குதிரையில் அமர்ந்து முழு சமஸ்தானத்தையும் சுற்றிப் பார்வையிட்டு எங்கெங்க நதி, மலை, அருவி, நீராதாரம், கிராமம், விளைநிலங்கள் இருக்கு என்று ஒரு வரைபடத்தையே தயார் செஞ்சிருக்காங்க. தன்னுடைய சமஸ்தானம் முழுக்க இந்த வரைபட முறை இதுக்கு முன்னாடி இருந்த எந்த ஒரு ஆண் நவாப்-மே செய்யாத பணி.
கல்வியை மேம்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்தும் அறிஞர்களை அழைத்து வந்திருக்காங்க. பல நூறு ஆண்டுகளாக போபால் சமஸ்தானம் கடனில் இருந்த போது சிக்கந்தர் ஜஹான் பேகம் என்ற ஒரு பெண் நவாப், அப்போவே போபால் சமஸ்தானத்திற்கு இருந்த 30 லட்சம் கடனை எளிதா திருப்பி செலுத்தி இருக்காங்க அதுவும் ஒப்பந்த முறையில் வசூலிக்கப்பட்ட வருவாய் வசூலையும் அவங்க ஒழிச்சி இருக்காங்க. நிதி நிர்வாகம் மிக சிறப்பா இருந்தது அவர் காலத்துலதான்.
அடுத்து வந்த பெண் நவாப் ஷாஜகான் பேகம். கட்டிடங்கள் கட்றதுல அதிக ஆர்வம் காட்டின இவங்க, நாட்டின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாக கருதப்படுற தாஜுல் மஸ்ஜித் பனியும் தொடங்கினாங்க.
ஆனால் பணி முடியும் போது அவர் உயிருடன் இல்லை. இங்கிலாந்துடைய முதல் மசூதி “ஷாஜஹானி மசூதி”-ய ஷாஜகான் பேகம்தான் கட்டி இருக்காங்க. கட்டிடக்கலை மட்டும் இல்லாமல் சிறந்த எழுத்தாளரா உருது மொழியில பல நூல்கள் எழுதி இருக்காங்க. இந்துக்கள் பாதுகாப்புக்கு பல சட்டங்கள் இயற்றி இந்துக்கள் சொத்துக்களை பாதுகாக்க இந்து சொத்து அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி இருக்காங்க.
முஸ்லிம் பெண்கள் படிக்க பள்ளிக்கூடம் தொடங்கிய போது அங்கு குரான், தீன் உள்ளிட்டவைதான் கற்பிக்கப்பட்டது. அதனால இந்து பெண்கள் படிக்க முடியாம போச்சு. இதை தெரிஞ்சுக்கிட்டு இந்து பெண்களுக்காக ஒரு தனி பள்ளிக்கூடத்தை தொடங்கினவங்க ஷாஜகான் பேகம். ஏராளமான பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்களை கட்டுனாங்க. அதில் ஒரு கட்டிடம் மத்திய பிரதேச சட்டமன்றம் ஆகவும் பயன்படுத்தப்பட்டது.
அவர் கட்டிய அகமாதாபாத் அரண்மனை இன்னும் ஓங்கி நிற்கிறது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தோட முதல் வேந்தராகவும் அகில இந்திய கல்வி மாநாட்டோட முதல் தலைவராகவும் இருந்தாங்க ஷாஜகான் பேகம். ஷாஜகான் கட்டின “அமேதியா மருத்துவமனை” இன்னும் நகரோட முக்கிய மருத்துவமனையாக கருதப்படுது.
இது மாதிரி பெண்கள், அதுவும் இஸ்லாமியப் பெண்கள் அந்தக் காலத்துலேயே சிறப்பாக நிர்வாகம் பண்ணி, பெண்கள் நினைத்தா எதையும் சிறப்பா செயல்படுத்த முடியும்-னு உதாரணமா வாழ்ந்து காட்டிருக்காங்க. இனியும், சாக்கு சொல்வதை நிறுத்திவிட்டு சாதனை செய்யத் தொடங்குவோம்.