நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் பிரதானக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் பெண் வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளனர்? அவர்கள் எந்தக் கட்சி சார்பில் களம் காண்கிறார்கள்? பெண்கள் களமே இறக்கப்படாத தொகுதிகள் என்னனென்ன என்ற எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை த காரிகை கணக்கெடுத்துள்ளது.

தொகுதி – வேட்பாளர்

வடசென்னை- நாம் தமிழர் அமுதினி

தென் சென்னை – திமுக தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் தமிழ்செல்வி

அரக்கோணம் – நாம் தமிழர் அப்சியா நஸ்ரின்

ஆரணி – நாம் தமிழர் பாக்கியலட்சுமி

கரூர் – காங்கிரஸ் ஜோதிமணி

திண்டுக்கல் – பாமக திலகபாமா

மதுரை – நாம் தமிழர் சத்யா தேவி

இராமநாதபுரம் – நாம்தமிழர் சந்திரபிரபா

சிவகங்கை – நாம் தமிழர் எழிலரசி

நாகப்பட்டினம் – நாம் தமிழர் கார்த்திகா

மயிலாடுதுறை – நாம் தமிழர் காளியம்மாள்

சிதம்பரம் – பாஜக கார்த்தியாயினி, நாம் தமிழர் ஜான்சி ராணி

பெரம்பலூர் – நாம் தமிழர் தேன் மொழி

கோயமுத்தூர் – நாம் தமிழர் கலாமணி

திருப்பூர் – நாம் தமிழர் சீதாலட்சுமி

நாமக்கல் – நாம் தமிழர் கனிமொழி

தருமபுரி – பாமக சௌமியா அன்புமணி, நாம் தமிழர் அபிநயா

கிருஷ்ணகிரி – நாம் தமிழர் வித்யா வீரப்பன்

கன்னியாகுமரி – நாம் தமிழர் மரிய ஜெனிஃபர்

திருநெல்வேலி . – அதிமுக ஜான்சி ராணி, நாம் தமிழர் சத்யா

தூத்துக்குடி – திமுக கனிமொழி, நாம் தமிழர் ரொவீனா ருத்ஜேன்

விருதுநகர் – பாஜக ராதிகா சரத்குமார்

புதுச்சேரி – நாம் தமிழர் கார்த்திகா

பொள்ளாச்சி லோக் சபா தொகுதியில் சுயேட்சைகள் உள்பட எந்தக் கட்சியுமே பெண் வேட்பாளர்களைக் களமிறக்கவில்லை. அதேபோல் பிரதான கட்சிகளாகக் கருதப்படும் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட பல கட்சிகளும் பின்வரும் தொகுதிகளில் பெண்களை வேட்பாளர்களாக அறிவிக்கவில்லை.

மத்திய சென்னை

திருவள்ளூர்

காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர்

வேலூர்

திருவண்ணாமலை

திருச்சி

தேனி

தஞ்சாவூர்

கடலூர்

நீலகிரி

ஈரோடு

சேலம்

கள்ளக்குறிச்சி

விழுப்புரம்

தென்காசி

மேற்சொன்ன தொகுதிகளில் சுயேட்சைகளாக பெண் வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.

இந்த முறை போட்டியிடும் 1741 வேட்பாளர்களில் 238 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE