இன்றைய களத்தில் பெண் வேட்பாளர்கள்
18-வது மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிடும் மொத்த வேட்பாளர் எண்ணிக்கை 1625-ஆக இருக்கும் போது அதில் 134 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்களாக உள்ளனர். அவர்களில் தமிழகத்தில் இருந்து மட்டுமே அதிகபட்சமாக 76 பெண் வேட்பாளர்கள் உள்ளனர். இதற்கு இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு சம பங்கு இடங்களை ஒதுக்கி 20 தொகுதிகளில் களமிறக்கியுள்ளதும் ஒரு காரணம். பிற கட்சிகளான தி.மு.க 3, பா.ஜ.க 3, பா.ம.க 3, காங்கிரஸ் 2, அ.தி.மு.க 1 தொகுதி என பெண் வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளனர்.
தேசிய அரசியலில் 18-வது மக்களவைத் தேர்தலில் களம் காணும் முக்கியமான பெண் வேட்பாளர்களின் பட்டியலைத் தற்போது பார்க்கலாம்.
கனிமொழி
தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க வேட்பாளராக கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள், தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் சகோதரி, கவிஞர் எனப் பல அடையாளங்களைக் கொண்ட அவர், எம்.பி-யான பிறகு, தூத்துக்குடியிலேயே வீடு எடுத்துத் தங்கி, அங்குள்ள தனது எம்.பி அலுவலகத்துக்கும் வாரம்தோறும் வந்து தொகுதிப் பணியாற்றி வந்தார்.
மாதவி லதா
தெலுங்கானாவின் ஹைதராபாத் லோக்சபா தொகுதியில் 2004 முதல் 4 முறை எம்.பி.,யும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவருமாக இருந்த அசாதுதீன் ஓவைசியை எதிர்த்து, பாரதிய ஜனதா சார்பில், மாதவி லதா களமிறக்கப்பட்டுள்ளார். அசாதுதீனுக்கு முன்பு அவரது தந்தை உள்ளிட்ட ஓவைசிக்களே 40 ஆண்டுகள் ஐதராபாத்தில் வெற்றி பெற்று வந்தனர். அவர்களை எதிர்த்துக் களம் கண்டுள்ள மாதவி லதாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவில் சேரும் முன்பே, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாதவியை எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியே பாராட்டி பேசியுள்ளார். பொது நிர்வாகம் பொலிடிகல் சைன்ஸ் படித்த இவர், மருத்துவமனை நடத்தி வருகிறார். பரதநாட்டியக் கலைஞர், கலாச்சார பாதுகாவலர், ஆன்மிக சொற்பொழிவாளராகவும் இவர் உள்ளார். இவர் சமீபத்தில் மற்றொரு சம்பவத்திலும் பிரபலமானவர். தேர்தலின் போது வாக்காளர்களின் விபரங்களை சரிபார்க்க அதிகாரிகள் இருக்கும் போது, போலீசார் மந்தமாக செயல்படுவதாகக் கூறி வாக்குச்சாவடிக்கு வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பைக் கழற்றச் சொல்லி சரிபார்த்ததால் சர்ச்சையில் சிக்கினார்.
ஆத்ரம் சுகுணா
சாதாரண ஸ்கூல் டீச்சர் சமூக பணியாற்றி எம்பியாக போட்டியிடுவதாக முன்னேறுவது என்பது ஆத்ரம் சுகுணாவுக்கு சாத்தியம். 20 ஆண்டுகளாக சாதாரண ஸ்கூல் டீச்சராக சமூக அறிவியல் பாடத்தை எடுத்து வந்தார் ஆத்ரம் சுகுணா. பின்னர் அவர் பிஜேபி மற்றும் பி ஆர் எஸ் கட்சிகளின் ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். பழங்குடியின ஆதிவாசி மலை கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகளை தனது போராட்டம் மூலம் பெற்றுக் கொடுத்தார். ஆதரவற்ற குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து உதவிய ஆத்ரம் சுகுணா, இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் அடிலாபாத்தில் களம் கண்டார்.
ஸ்மிருதி இராணி
ராகுலிடம் தோற்ற அமேதி தொகுதியை 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றெடுத்தவர் ஸ்மிருதிராணி. முதலில் கபில் சிபலிடமும் அதன் பின்பு ராகுல் காந்தியிடமும் தோற்றவர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்தார். மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்த இவர் மீண்டும் அதே தொகுதியிலு களமிறங்கினார். ஃபேப் இந்தியா என்ற கடையில் உடை மாற்றும் அறையில் கேமரா இருப்பதாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் ஸ்மிருதி இராணி
மஹுவா மொய்த்ரா
அமெரிக்காவில் பிரபலமான வங்கி ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றி வந்த மஹூவா மொய்த்ரா, இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியின் கை சாதாரண மக்களின் கை என்று வங்கதேச இளைஞர்களிடையே காங்கிரசை பலப்படுத்திய இவர் பின்பு திரிணாமூல் காங்கிரஸில் சேர்ந்து அங்கு பொதுச் செயலாளராக உள்ளார். ஏற்கனவே கிருஷ்ணா நகர் தொகுதியில் அவர் வெற்றி பெற்ற நிலையில் அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எழுப்பிய 60க்கும் மேற்பட்ட கேள்விகளில் 50 கேள்விகள் அவரது தொழில் எதிரி ஹிரா நந்தினி குழுவிடம் லஞ்சம் பெற்று கேள்வி எழுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் விசாரணை குழுவின் பரிந்துரையின் பெயரில் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கங்கனா ரணாவத்
நடிகையும் தயாரிப்பாளருமான கங்கனா ரனாவத் வலதுசாரி சிந்தனை கொண்டவர். பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு பக்தி பரவசம் பொங்க ஜெய் ஸ்ரீராம் முழக்கமட்ட கங்கனா சர்ச்சைக்குரிய பல அரசியல் கருத்துக்களை பற்றி கூறி வந்தவர். இவர் ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் களம் இறக்கப்பட்டார். இமாசலில் 6 முறை முதலமைச்சராக இருந்த வீரபத்ரசிங்கின் மகனும் பொதுப்பணித்துறை அமைச்சருமான விக்ரமாதித்யா களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக கடந்த 2 முறை நடந்த தேர்தலிலும் மொத்தம் உள்ள 4 இடங்களையும் கைப்பற்றிய போதும், சமீபத்திய இடைத்தேர்தலில் சற்று களம் மாறி இருப்பதாக நிலவரம் கூறுகிறது.
பன்சூரீ ஸ்வராஜ்
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரீ ஸ்வராஜ். இவர் வார்ரிக் பல்கலைக்கழகத்தில், ஆங்கில இலக்கியமும் லண்டன் சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டமும் பயின்றவர். காண்ட்ராக்ட், ரியல் எஸ்டேட், வரி, சர்வதேச வழக்குகள் என 15 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்த இவர், புதுடெல்லியில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டார். டெல்லியில் நடைபெறும் ஆம் ஆத்மி அரசின் மீதான விமர்சனங்கள் மூலம் இவர் அறியப்பட்டார். பாஜகவில் சுறுசுறுப்பான வேட்பாளர் என்றும் இவர் அடையாளப்படுத்தப்படுகிறார்.
சுப்ரியா சுலே
தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலைவர் சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலே, பாராமதி தொகுதியில் மீண்டும் களம் இறக்கப்பட்டார். ஏற்கனவே 3 முறை அதே தொகுதியில் வெற்றி பெற்றவர். ஐபிஎல் குற்றச்சாட்டுகளில் இவரது கணவருக்கும் புனே அணி உரிமையில் பங்குகள் இருந்தது. இருப்பினும் தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என மறுத்தார் இவர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நீர் மாசுபாட்டை ஆய்வு செய்த இவர், பாராமதி தொகுதியில் பெண் சிசுக்கொலை, கருக்கலைப்பு, வரதட்சணை, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து போராடியவர்.
சுனேத்ரா பவார்
பாராமதி தொகுதியில் போட்டியிடும் சுப்ரியா சுலேவுக்கு எதிராக களம் இறக்கப்பட்டவர் தான் சுனேத்ரா பவார். இருவரும் உறவினர்களே. தனது மாமா ஷரத் பவாரை விட்டு பிரிந்து அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அஜித் பவாரின் வேட்புமனு தொழில்நுட்ப காரணங்களால் நிராகரிக்கப்பட்டதை எடுத்து அவரது மனைவி களம் இறக்கப்பட்டார்.
ரோஜா
நடிகையான ரோஜா ஆந்திராவின் நகரி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் களம் கண்டார். தெலுங்கு தேசம் கட்சிகளிலிருந்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், நகரி தொகுதியில் பெரும்பாலும் இருக்கும் நெசவாளர் சமூகத்தில் மீண்டும் இடம் பிடிக்க முயல்கிறார். நடிகையும் எம்பியுமான ரோஜா இந்த முறை ஜெயிப்பாரா தோற்பாரா என ஏராளமானோர் ஆயிரங்கள் தொடங்கிய இலட்சங்கள் வரை பெட் கட்டி வருவதாக ஒரு தகவலும் உலவி வருகிறது. பிரச்சாரத்தில் திடீரென களத்தில் இறங்கி தப்பாட்டம் அடிக்கும் இவர் சுறுசுறுப்பாக பிரச்சாரம் மேற்கொண்டார்.