சர்க்கரை நோய், கேன்சர் வாய்ப்பை குறைக்குமா விரதம்?

“உடல் தனக்கு தேவையில்லாதவற்றை தின்று செரிப்பதே விரதம் ஆகும். “

விரதம் இருக்கும் நடைமுறை என்பது, பல்வேறு மதங்களிலும் பின்பற்றப்படுவது தான். ஆனால், எந்த சாமிக்காகவும் அன்றி உங்களுக்காக, மாதத்தில் ஒரு நாள் விரதம் இருப்பது நல்லது என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Fasting controls diabetes & Cancer Cells Growth?
  • விரதத்தின் பலன் என்ன?

பொதுவாக நம் உடல் இயக்கத்துக்கு தேவையான உணவை கொடுத்துக் கொண்டே இருப்போம். இரைப்பை எனும் மெஷின் ஆனது தொடர்ந்து இயங்கிக் கொண்டே தான் இருக்கும். நல்ல சத்துக்களையும், கொழுப்பு போன்ற கெட்ட சத்துக்களையும் பிரித்து, உடலெங்கும் பரப்பிக் கொண்டே இருக்கும். உடல் இயக்கத்துக்கு தேவையான உணவை நாம் கொடுக்காவிட்டால், அது உடலில் தேவையில்லாத சக்திகளை எரித்து சீரமைக்கும். ரீ சைக்கிளிங் அதாவது தேவையற்ற சக்திகளை மறுசுழற்சி செய்து உடலை இயங்க வைக்கிறது. உதாரணத்துக்கு ரத்தத்தில் உள்ள சிவப்பணு, வெள்ளை அணுக்களின் சுழற்சியையும், உற்பத்தியையும் பேலன்ஸ் செய்ய விரதம் உதவுகிறது.

  • விரதத்துக்கும் கேன்சருக்கும் என்ன தொடர்பு?

விரதம் இருக்கும் போது, கேன்சர் செல்களின் வளர்ச்சி குறைவதாக சொல்லப்படுகிறது.
ஒரு மாதத்தில் 72 மணி நேரம் எனும் விரதம் இருக்கும் நபர்களுக்கு கேன்சர் வாய்ப்பு குறைவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் அதிகம் பேர் விரதம் இருப்பதால், அங்கு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாம்.

  • சர்க்கரை நோய் வாய்ப்பு குறையுமா?

உடலுக்கு தேவையான சர்க்கரையை விட அதிக அளவு சர்க்கரை உடலில் சேரும்போது, இன்சுலின் அதனை சீரமைக்க திணறும். அதனால் சர்க்கரை நோய் வரும். ஆனால் தேவைக்கு அளவான உணவோ அல்லது தேவைக்கு குறைவான உணவோ கொடுக்கும் போது, அந்த இன்சுலின் அளவை அது சீர்படுத்துகிறது.

  • சஷ்டி விரதம்

சஷ்டி விரத நாட்களில் 6 நாட்களோ, அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்களோ, வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி விரதம் இருப்போர் உண்டு. அப்போது உடலில் உள்ள தேவையற்ற சத்துக்கள் கலோரிகளாக எரிக்கப்படுகிறது.

  • யார் யார் விரதம் இருக்கக் கூடாது?

ஏற்கனவே சர்க்கரை, BP போன்ற நோய்வாய் பட்டவர்களும், சத்து குறைபாடு உள்ளவர்களும், வழக்கமாக மாத்திரைகளை எடுத்துக் கொள்வோரும் விரதம் இருக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக கர்ப்பிணிகள் விரதம் இருப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  • விரதத்தை எப்போது நிறுத்த வேண்டும்?

போதிய கெட்ட கலோரிகளை எரித்த பின்பு, மேலும் எரிக்க வேறு ஏதேனும் கிடைக்காவிட்டால் உடலில் உள்ள நல்ல சத்துக்கள் உறிஞ்சப்படும். அப்போது, உடல் சோர்வடையலாம். அதிகம் வியர்க்கலாம். கைகால்கள் நடுக்கம் எடுக்கலாம். அந்த நேரத்தில் லேசான உப்பு சர்க்கரை கரைசலை உடனடியாக குடித்துவிட்டு விரதத்தை முடிக்கலாம்.

  • விரத நேரத்தில் உப்பு சேர்க்க கூடாதா?

உடலில் எந்த வகையான சத்துக்களையும் விட மிகப் பிரதானமானது உப்புச்சத்து. உப்புச்சத்து குறைந்தால் மூளை மற்றும் இதயத்தின் இயக்க செயல்பாடு குறைந்து, ஆபத்துக்களுக்கு வழி வகுக்கலாம். எனவே விரதம் இருக்கும் போது தண்ணீர், உப்பு, சூப் உள்ளிட்டவற்றை பருகலாம்.

Facebook
Instagram
YOUTUBE