அலைகளில் இவள் முகமே! பெண் உருவம் யார்? வைரலாகும் புகைப்படம்
சிறு நதிகளே…
நதி இடும் கரைகளே…
கரை தொடும் நுரைகளே…
நுரைகளில் இவள் முகமே...
பிரிட்டனை சேர்ந்த புகைப்படக் கலைஞர் Ian Sproat, சன்டர்லேண்ட் கடற் பகுதியில் 12 மணி நேரமாக கிட்டத்தட்ட 4000 புகைப்படங்களை எடுத்த போது தன்னை வியப்பூட்டும் வகையில் ஒரு புகைப்படம் கண்டு பிரமிப்பு அடைந்துள்ளார்.
41 வயதான அவர் நார்த் டைன் சைடு கடற் பகுதி கலங்கரை விளக்கத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எடுத்த புகைப்படம் ஒன்றில் பெண்ணின் முக அமைப்பு போன்ற தோற்றம் தெரிந்தது கண்டு அதிர்ந்து போனார்.
இந்த முகம், Amphitrite என்று பிரிட்டனில் அழைக்கப்படும் பெண் கடவுளின் முகமா ? அல்லது மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணியின் முகமா ? என்று கேட்டு தனது instagram-ல் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் எடிட் செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே? . . என்ற வைரமுத்துவின் பாடல் வரிகள் நினைவு கூறும் வகையில் இந்த புகைப்படத்தை ஒரு கவித்துவமாக எடுத்திருக்கிறார் Ian. அதிலும் குறிப்பாக
“சிறு நதிகளே…
நதி இடும் கரைகளே…
கரை தொடும் நுரைகளே…
நுரைகளில் இவள் முகமே…”
என்ற வார்த்தை கனக்கச்சிதமாக பொருந்தும் புகைப்படமாக இது அமைந்துள்ளது.