பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பல வித உடல் மாற்றங்கள் ஏற்படும். மாதவிடாய் சமயத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை தொடர்பான பல சந்தேகங்களும் பெண்களுக்கு உண்டு. ஆனால், இந்த நாட்களிலும் கூட சில பெண்கள், தங்களது உடல் எடையைக் குறைக்க ஜிம்முக்கு போகின்றனர். இது சரியா? தவறா? என தற்போது பார்க்கலாம்.

அந்த 3-4 நாட்கள் பெண்களுக்கு சாதாரண நாட்களில் இருந்து உடலளவிலும், மனதளவிலும் முற்றிலும் வேறுபட்டது. உடல் வலி, சோர்வு உணர்வு இருக்கலாம். எனவே, அந்த சமயத்தில் உடலுக்கும், உணவுக்கும் குறைவின்றி பார்த்துக் கொள்ள வேண்டும. ஆரோக்கியமான உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் ஒருவர் உடற்பயிற்சி செய்யலாம்.

ஆனால் தீவிரமான உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டியது அவசியம் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

சாதாரண உடற்பயிற்சி செய்வதன் மூலம் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

உடற்பயிற்சி செய்கையில் உடல் பிடிப்புகள், தசைவலி, சோர்வு மற்றும் பதட்டம் குறைய வாய்ப்புண்டு.

ஆனால், அதுவே அதிக உடற்பயிற்சி செய்வதால் இடுப்பு, அடிவயிற்றில் கடும் வலி ஏற்படலாம்.

ஹார்மோன் மாற்றங்களால் சோர்வாகவும் பலவீனமாகவும் உணரலாம்.

மாதவிடாய் நேரத்தில் செய்யும் உடற்பயிற்சியால், சோம்பல் பலவீனம் நீங்கலாம்.

அடிக்கடி ஏற்படும் மனநிலை மாற்ற பிரச்சனைகளும் வெகுவாகப் போய்விடும்.

மாதவிடாய் கால மார்பக வீக்கமும், வலியும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கணிசமாகக் குறையலாம்.

இந்த சமயத்தில் அதிக பசியுணரும்போது, உடற்பயிற்சி செய்தால் உணவுக் கட்டுப்பாடு வரும்.

இந்த நாட்களில் மன அழுத்தம், எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுவதுண்டு. உடற்பயிற்சி செய்தால், இந்த பிரச்சனைகளும் குணமாகும்.

மாதவிடாய் காலத்தில் அதிக உடற்பயிற்சி செய்வது சரியல்ல

அதிக உடற்பயிற்சி உடல் நலத்திற்கு நல்லதல்ல. 30 முதல் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதே சரி

தவறுதலாக கூட வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யக்கூடாது.

சாப்பிட்ட உடனேயே உடற்பயிற்சி செய்யக்கூடாது

உடலை அதிகம் ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டாம்.

படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவதை தவிர்க்கலாம்.

மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE