வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லையா? கிழித்து தொடங்கவிட்ட EPS 

0

நீட் UG 2025 தேர்வு இன்று நடைபெற்ற நிலையில், தேர்வு அச்சத்தினால் செங்கல்பட்டைச் சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்கு பயந்து, அல்லது தேர்வு முடிவுகளை ஏற்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பிஞ்சுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு இல்லையா ஒரு எண்டு?

திமுகவை தாக்கிய எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வை ஒழிக்கும் முறை எங்களுக்கு தெரியும் என்று வாக்கு கேட்ட திமுக இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று EPS கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய அறிக்கை பின்வருமாறு.

இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கயல்விழி என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வெறும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என அத்தனை அதிகாரங்களையும் @arivalayam பெற்றது “நீட் தேர்வு ரத்து” என்ற வாக்குறுதியால் தானே? 

“ரகசியம் இருக்கிறது, ஆட்சிக்கு வந்ததும் பாருங்கள்” என்று வாய் சவடால் பேசியதெல்லாம் எங்கே போனது? வெட்கம், மானம், சூடு, சுரணை எல்லாம் எங்கே போனது?

உங்களுடைய தேர்தல் அரசியலுக்கான ஒற்றைப் பொய்யால் மட்டுமே 21 மாணவ மாணவியரின் உயிர் பறிபோய் இருக்கிறது. இன்னும் எத்தனை பிள்ளைகள் 

திரு. @mkstalin அவர்களே? உங்களுக்கு இப்போது கூட மனசாட்சி உறுத்தவில்லையா?

“நீட் ஒழிய வேண்டும் என்றால் ‘2.ஓ’ வர வேண்டும்” என்று கூச்சமின்றி திமுக-வினர் 2026ல் வாக்கு கேட்கும் போது, “உரிய மரியாதையுடன்” மக்கள் பதில் அளிப்பார்கள்! இத்தனை மாணவ- மாணவியரின் மரணங்களுக்கு உரிய நீதியை,மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்!

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!

#நீட்ரத்து_திமுக_சதுரங்கவேட்டை

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டின் பல கட்சிகள் குரல் கொடுக்கும்போதிலும், மத்திய அரசு கண்டுகொள்ளாமல் அமைதி காக்கிறது. இதுகுறித்த உங்களது கருத்தை கமெண்ட்டில் பதிவு பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *