தமிழர்களுக்கு எந்த ஒரு பொருளுக்கு பலன் தெரிகிறதோ, இல்லையோ மஞ்சளுக்குக் கட்டாயம் தெரியும். ஏனெனில் அது தமிழரின் பாரம்பரியத்திலும், சமையலிலும் தவிர்க்க முடியாத ஒன்று. பெண் பூப்படைதல், வளைகாப்பு முதற்கொண்டு மரணம் அடைந்தால் சடலத்துக்குப் பூசிக் குளிப்பாட்டுதல் வரை அனைத்திலும் மஞ்சள் இடம்பெறக் காரணம் அது இயற்கையிலேயே மிகவும் அருமையானதொரு கிருமி நாசினி.

தற்காலத்தில் என்னதான் சானிடைசர்கள் வந்தாலும், சாணியில் கூட மஞ்சள் கலந்து தெளித்து, காலோடு ஒட்டி வரும் கிருமியை சுத்தப்படுத்த தமிழர்கள் கற்றுக் கொடுத்த ஒரு நடைமுறை வழக்கம்.

மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன் அதன் பலன்களை முதலில் பார்க்கலாம்.

மஞ்சளின் பலன்கள்

முகத்திற்கு மஞ்சள் பூசினால் முகப்பரு வராது.

மஞ்சளில் இருக்கும் குர்குமின் பாக்டீரியாவை எதிர்த்து போராடும்.

எனவேதான், அசைவத்தைக் கழுவ முதலில் மஞ்சள் போட்ட நீரில் சுத்தம் செய்கின்றனர். இறைச்சியில் உள்ள நுண்ணுயிர்களை அழிக்கும்.

ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்தத்தையும் உடலில் உள்ள பாகங்களையும் சுத்திகரிக்க வல்லது மஞ்சள்.

குறிப்பாக கல்லீரலை சுத்திகரிக்க சமையலில் மஞ்சள் சேர்ப்பது அவசியம்.

செரிமானத்தை சிறப்பாக இயங்க வைக்கும்.

மஞ்சள் கலந்த பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வயிற்றுப் புண்ணை ஆற்றும்.

வயிற்றுப் போக்கு, தலைவலிக்கும் மஞ்சள் நல்ல நிவாரணம் தரும்.

மழைக்காலங்களில் குளிரையும் காய்ச்சலையும் மஞ்சள் விரட்டி, மூட்டுவலிக்கு மருந்தாகும்.

சாதாரணமாக தண்ணீரோடு மஞ்சள் கலந்து கர்ப்பிணிகள் பருக வளர்சிதை மாற்றம் சீராகும்.

மெட்டாபாலிசத்தை அதிகரித்து எடை இழப்பை குறைக்க உதவும்.

தோலில் இழந்த செல்களை மீட்டமைக்க உதவும். முகம் பளபளப்பாக இருக்க வைக்க உதவும்.

வெயில் கால சரும பிரச்சினைகளை நீக்கி சோரியாசிசை குறைக்கும்.

மஞ்சளோடு சேர்க்கக் கூடிய பொருட்கள்

மஞ்சளை வேப்பிலையோடு சேர்க்கலாம்.

தயிர், லெமன், ஆப்பிள் வினிகரோடு சேர்ப்பது நல்லது.

ரோஸ் வாடர், சந்தனம் உள்ளிட்டவையும் மஞ்சளோடு சேர்க்கலாம்.

மஞ்சள் போட்டு செய்யக் கூடாதவை

ஆனால் ஒருசிலர் மஞ்சள் போட்டு குளித்துவிட்டு அந்த நிறம் முகத்தில் தெரியும் அசிங்கமாக இருக்கும், மாரியாத்தா வந்துட்டா என யாரும் கேலி கிண்டல் செய்துவிடக் கூடாது என நினைப்பார்கள்.

அதற்காக சோப்பு போட்டு கழுவிவிடுவர். ஆனால், அது தவறு என்கிறார்கள் மருத்துவர்கள்.

முகத்திற்கு மஞ்சள் தேய்த்தால் நல்ல பலன் தரும்தான். ஆனால், இயற்கையைப் பூசிவிட்டு, அதை ரசாயனத்தைக் கொண்டு கழுவுவதால் எந்தப் பலனும் இல்லை. மாறாக பின்விளைவும் வரலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE